சுற்றுச்சூழல் மாசுபாட்டிலிருந்து தப்பிக்கவும், நகர்ப்புற நெருக்கடியைக் குறைக்கவும் கடலி்ல் மிதக்கும் நகரங்களை உருவாக்குகிறது ஜப்பான்.
உலகில் சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் மாசடைந்து வருகிறது. இதனால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர்.
சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, கடலில் மிதக்கும் மாசில்லாத நகரங்களை உருவாக்க ஜப்பான் நிறவனம் ஒன்று திட்டமிட்டுள்ளது.
ஜப்பானில் தற்போது கடலில் மிதக்கும் விவசாய நிலங்கள் உள்ளன. இவை அதிநவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை. இதேபோன்று கடலில் மிதக்கும் நகரங்களை உருவாக்க உள்ளனர்.
இவ்வகை நகரங்களை முதன்முதலாக பசிபிக் பெருங்கடலில் உருவாக்கவிருக்கின்றனர். கடலில் 1 கி. மீ தூரத்தில் அமைக்கப்படவிருக்கும் இந்நகரங்களில் சுமார் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மக்கள் வரை வசிக்கலாம். இங்கு வீடுகள் தவிர்த்து புல்வெளிகளும், வனப்பகுதிகளும் அமைக்கப்படவிருக்கின்றன.
இவை மிக மெல்லிய உலோகக் கலவையுடன் கடல் நீரில் உள்ள மெக்னீசியம் மூலம் தயாரிக்கப்படும் உலோகத்துடன் கலந்து உருவாக்கப்படும்.
இந்நகரங்கள் உருவாக்கப்பட்டால் மக்கள் மாசில்லா சுழலில் வாழ முடியும்.
No comments:
Post a Comment