தமிழகத்தில் கடந்த ரமலானில் நோன்பு பெருநாளை எல்லோரும் மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். காரணம் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, அரபு நாடுகள், வட ஆப்பிரிக்கா நாடுகளில் எல்லாம் பெருநாள் கொண்டாடிய அதே தினத்தில் தமிழத்திலும் பெருநாள் கொண்டாடப்பட்டது. தாயத்திலும், மேற்கண்ட நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் உறவினர்களும் ஓரே நாளில் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். பல வருடங்களுக்கு பிறகு நடந்த நிகழ்வு இப்போது ஹஜ் பெருநாளில் பெரும் குழப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 16ஆம் தேதி பெருநாள் என ஒரு அமைப்பு, இல்லை இல்லை 18ஆம் தேதி தான் பெருநாள் என்று போட்டிக்கு இன்னொரு அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
இதனிடையே தமிழகத்தில் 17ஆம் தேதி, புதன்கிழமை ஹஜ் பெருநாள் கொண்டாடப்படும் என்றும், தலைப்பிறை மகாராஷ்டிரா மாநிலம் மாலோகானில் பார்க்கப்பட்டது என்றும் சென்னையில் தலைமை காஜி அறிவித்துள்ளார். இந்தியாவில் 17 ஆம் தேதிதான் ஹஜ் பெருநாள் என எல்லா மாநில காஜிகளும் அறிவித்துள்ளது. சமுதாய மக்கள் தெளிவான முடிவை மேற்கொள்வார்கள் என்பதில் மாற்று கருத்தில்லை.
தமிழகத்தில் இவ்வருடம் ஹஜ் பெருநாள் முப்பெரும் நாள் விழாவாக மாற்றப்பட்டிருக்கிறது கவலைக்குரியது என எங்கும் பேச்சாக இருக்கிறது.

No comments:
Post a Comment