18 November 2010

அமெரிக்க விமானப் படை வீரர்களுக்கு எச்சரிக்கை!!!

US Air Forceவாஷிங்டன்: பேஸ்புக் உள்ளிட்ட சமூக இணையதளங்களைப் பயன்படுத்தும்போது சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அமெரிக்க விமானப் படை அதன் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த இணையதளங்களில் தற்போது சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சங்களின் மூலம் எதிரிகள் போர் பகுதிகளில் விமானப் படை வீரர்கள் இருக்கும் இடத்தை துள்ளியமாகக் கண்டுபிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாத துவக்கத்தில் அமெரிக்க விமானப் படை வீரர்களுக்கு விமானப் படை இணையதளம் மூலம் எச்சரிக்கை விடப்பட்டது. விமானப் படை வீரர்கள் சமூக இணையதளங்களை அஜாக்கிரதையாக பயன்படுத்துவது பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் என்று விமானப் படை தெரிவித்துள்ளது.

இந்த தகவல் மூத்த அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டது. இதனால் அவர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரியும் வீரர்களை எச்சரிக்கக்கூடும்.

பேஸ்புக், போர்ஸ்கொயர், கோவல்லா மற்றும் லூப்ட் போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் அந்த நபரின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க முடியும். உலக வரை படத்தில் துள்ளியமாக எங்கு இருக்கிறார் என்பதைக் கண்டறியலாம்.

இதன் மூலம் எதிரிகள் போர் பகுதிகளில் படை வீரர்கள் இருக்கும் இடத்தை அவர்கள் வைத்திருக்கும் பிளாக்பெர்ரி உள்ளிட்ட ஸ்மார்ட் போன்கள் மற்றும் சமூக இணையதளங்கள் மூலம் எளிதாக கண்டறியலாம்.

No comments: