| ||||
ராசாவின் பெற்றோர் ஆண்டிமுத்து மீதும், சின்னப்பிள்ளை மீதும் நிரம்ப மரியாதை உண்டு. சாதாரண குடும்பமாக இருந்தாலும், தங்கள் பிள்ளைகளுக்கு, சிறந்த கல்வியை வழங்கியிருக்கின்றனர் அந்தப் பெற்றோர். திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் தலித்துகள் நில உடைமையாளர்களாக இல்லை. பெரும்பாலும் விவசாயக் கூலிகளாகவும், மற்ற சாதாரண கூலி வேலை செய்பவர்களாகவுமே இருக்கிறார்கள். இந்தப் பின்னணியில் பார்த்தால், ராசாவின் பெற்றோர் மிக உயர்ந்தவர்கள். சவுக்கின் மீது அடுத்த குற்றச் சாட்டு சவுக்கு தலித்தின விரோதி என்பது. ஏழை தலித்துகள் மீது சவுக்குக்கு தீராத காதல் உண்டு. நீதிபதி பி.டி.தினகரன் ஆ.ராசா போன்றவர்களை தலித்துகள் என்றே ஏற்றுக் கொள்ள முடியாது. தலித் என்ற மராத்தி சொல்லுக்கு என்ன பொருள்... ? ஒடுக்கப் பட்டவன், நசுக்கப் பட்டவன். துண்டு துண்டாக உடைக்கப் பட்டவன் என்றல்லவா பொருள்.. ? நீதிபதி பிடி.தினகரனும், ஆ.ராசாவும் ஒடுக்கப் பட்டவர்களா ? நசுக்கப் பட்டவர்களா ? ஊழலில் ஈடுபடும் இது போன்ற நபர்கள், தலித், மைனாரிட்டி என்ற போர்வையை போர்த்திக் கொண்டு தப்பிக்கப் பார்ப்பது வேதனையானது. எழும்பூர் நீதிமன்றத்தில் வசந்தி ஸ்டான்லி புது ஷ்யூரிட்டி கொடுக்கச் சென்ற பொழுது, வசந்தியின் வழக்கறிஞர் ஒருவர் “மைனாரிட்டி கம்யூனிட்டியில இருக்கற ஒரே எம்.பி ப்பா. விட்டுடங்கப்பா“ என்று சொன்னார். மிக மிக கவனமாக ஒரு விஷயத்தை கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், பி.டி.தினகரன் மீது ஊழல் குற்றச் சாட்டுகள் எழுந்த போது, பாரதியாரின் கவிதை முரசொலியில் வெளியானது. “சூத்திரனுக்கொரு நீதி – தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கொரு நீதி” இதே கவிதையை நேற்றைய முரசொலியில் கருணாநிதி ஆ.ராசா விவகாரத்திற்காக எழுதியுள்ளார். நிற்க. விமானநிலையத்தில் ஆ.ராசா வந்திறங்கியதும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. அந்த வரவேற்புக்கு சென்று கலந்து கொண்ட முக்கியமான ஒரு பிரமுகர் நக்கீரன் காமராஜ். இவருக்கும் ஆ.ராசாவுக்கும் என்ன நெருக்கம்….. ? பிசினஸ் பார்ட்னர்னா சும்மாவா ? மும்பையில் ஏழாவது தளத்தில், ரஹேஜா பாயின்ட்.1, ஜவகர்லால் நேரு மார்க், வகேலா மார்க்கெட், சான்டா க்ரூஸ், மும்பையில், மாடர்ன் ஹைடெக் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனம் இயங்குகிறது. இந்த நிறுவனத்திற்கு அடுத்த அறைதான் அலைக்கற்றை ஊழலில் முக்கியப் பங்கு வகித்த ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் அலுவலகம். மாடர்ன் ஹைடெக் நிறுவனத்தில் கீழ் கண்டவர்கள் பங்குதாரர்கள். சையது மொய்தீன் (ஈடிஏ ஸ்டார் குழுமத்தைச் சேர்ந்தவர்) டாக்டர் கிருஷ்ணமூர்த்தி (நீதிபதி ரகுபதியை மிரட்டியவர்) ராமச்சந்திரன் (ராசாவின் அண்ணன்) அறிவு (ராசாவின் தம்பி) அப்புறம்… நம்ப காமராஜ். இப்போது புரிகிறதா எதற்காக விமான நிலையத்திற்கு சென்றார் என்று ? இது பத்தாது என்று இந்த இதழ் நக்கீரன் கவர் ஸ்டோரி என்ன தெரியுமா ? “மீண்டும் மத்திய அமைச்சரவையில் ஆ.ராசா. காங்கிரஸ் உறுதி“ காமராஜ் சார். ஏன் உங்களுக்கு இந்த வேலை… ? சிபிஐ உங்களை விசாரிக்கும் போது, கரெக்டா பதில் சொல்லுங்க என்ன ? இந்த ஹைடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ரியல் எஸ்டேட் தொழிலில், குறிப்பாக சிறப்பு பொருளாதார மண்டலங்களை கையாள்வது, நிலம் ஒதுக்கீடு போன்ற துறைகளில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப் படுகிறது. இந்த மண்டலத்தில், ஜிவிகே பவர் மற்றும் இன்ப்ராஸ்டரக்சர் என்ற நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகமும் பங்குதாரர்கள். இந்த மண்டலத்திற்காக 3000 ஏக்கர் நிலம் கையகப் படுத்தப் பட்டது. இந்த நிலம் கையகப் படுத்தலை எளிதாக முடித்துக் கொடுத்தார் என்பதற்காக ஆ.ராசாவுக்கு 199.6 ஏக்கர் நிலம், இந்த மண்டலத்திற்குள்ளாகவே வழங்கப் பட்டிருக்கிறது. இந்த நிலம் பதியப் போகும் நேரத்தில், தொழில் வளர்ச்சிக் கழகத்திடமிருந்து, தடையில்லா சான்று வேண்டும், அப்போதுதான் பத்திரத்தை பதிவு செய்ய முடியும் என்ற சார் பதிவாளர் எதிர்ப்புத் தெரிவிக்கிறார். ஆனால், அவர் மிரட்டப் பட்டு நள்ளிரவு 12 மணிக்கு இந்தப் பத்திரப் பதிவு, தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தடையில்லா சான்று இல்லாமலேயே, பதிவு செய்யப் பட்டது. இது தவிரவும், ஊட்டியில் 300 ஏக்கர் டீ எஸ்டேட் ஆ.ராசா வாங்கியிருப்பதாக தெரிகிறது. ஆ.ராசா சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி ஏற்ற நான்கு மாதங்கள் கழித்து தொடங்கப் பட்டதுதான் க்ரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ் பிரைவேட் லிமிட்டெட். இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ராசாவின் பினாமி ஏ.எம்.சாதிக் பாட்சா, சாதிக்கின் மனைவி ரேஹா பானு ஆகியோர். மே 2004ல் இந்த நிறுவனம் தொடங்கப் பட்ட போது மொத்த முதலீடு ஒரு லட்சம். இந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கு தியாகராய நகர் கனரா வங்கியில் உள்ளது. தொடங்கிய முதல் ஆண்டிலேயே இந்நிறுவனத்தின் மொத்த டர்ன் ஓவர் 755 கோடி. ஒரு லட்சம் ஒரு வருடத்திற்குள் எப்படி வளர்ந்திருக்கிறது பார்த்தீர்களா ? கனரா வங்கிக் கணக்கில் ஹாங்காங், சிங்கப்பூர், அரபு நாடுகள் போன்ற இடங்களிலெல்லாம் இருந்து பணம் போடப் பட்டிருக்கிறது. இந்த வளர்ச்சியை பார்த்தால், இந்தியாவிலேயே பெரிய தொழில் அதிபர் ஆ.ராசாதான் போலிருக்கிறது. இந்த க்ரீன் ஹவுஸ் நிறுவனம், பெங்களுரில் டி.6, தேவதா ப்ளாஸா இரண்டாவது தளம், ரெசிடென்சி சாலை, பெங்களுரு என்ற இடத்தில் புதிய அலுவலகம் தொடங்கியது. அடுத்ததாக சிங்கப்பூரில், எண் 04/28, செராங்கூன் ப்ளாசா, செராங்கூன் ரோடு, சிங்கப்பூர் என்ற முகவரியில் அடுத்த கிளை தொடங்கப் பட்டது. க்ரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ் நிறுவனம் தொடங்கிய நான்கே மாதங்களில் ஈக்வாஸ் ரியல் எஸ்டேட்ஸ் என்ற அடுத்த நிறுவனத்தை ஆ.ராசா தனது உறவினர்கள் பெயரில் தொடங்குகிறார். சில நாட்கள் கழித்து, கோவை ஷெல்ட்டர்ஸ் என்ற பெயரில் மற்றொரு ரியல் எஸ்டேட் நிறுவனம் ராசாவின் உறவினர்களால் தொடங்கப் படுகிறது.இது மட்டுமல்லாமல் ஆண்டிமுத்து, சின்னப்பிள்ளை அறக்கட்டளை என்ற ஒன்று தொடங்கப் பட்டு, இன்று அந்த ட்ரஸ்டின் சொத்து 200 கோடி ரூபாய். பனிமலர் கல்வி அறக்கட்டளை என்ற ஒரு அறக்கட்டளை தொடங்கப் பட்டு, அதிலும் கோடிக்கணக்கான ரூபாய்கள் முதலீடு செய்யப் பட்டுள்ளன. திருச்சி பெரம்பலூர் நெடுஞ்சாலையில் சாலையின் இரு மருங்கிலும் ஏறக்குறைய அனைத்து இடங்களையுமே ராசாவின் பினாமிகள் பெயரில் வளைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலத்தை வாங்கிப் போடுவதில், ராசாவுக்கு நெருக்கமான சாதிக் பாட்சா என்ற நபர் பெரும் பங்கு வகிப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ராசாவின் சகோதரர் கலியபெருமாள் என்பவர், ஐடிசி நிறுவனத்தின் ஏஜென்சி எடுத்து நடத்திக் கொண்டிருப்பதாக தெரிகிறது. மேலும், ஹீரோ ஹோண்டா ஏஜென்சியும் எடுத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ராசா அவ்வளவு சம்பாதிக்க வில்லை. எதிர்க்கட்சிகள் திரித்துக் கூறுகின்றன என்பவர்கள், இந்தச் சொத்துக்களெல்லாம் எப்படி வந்தன என்று விளக்கினால் நல்லது.
| தே |
30 November 2010
ராசா !! ?? !!
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
rajaye thukil podanum
இவ்வளவு பணத்த என்ன பன்னுவாங்க? இப்படி இவங்க பன்ரத எடுத்துக்காட்டா வச்சுக்கிட்டு, அரசு அலுவலர்களும் சுரண்டுராங்க.
எதுக்கு இவங்களை எல்லாம் அமைச்சரா ஆக்குனது? இப்படி சொந்த வீட்டுலயே திருடுரதுக்கா? வேலியே பயிர வேரோட புடிங்கினா என்ன பண்ட்ரது? இப்படி மொல்லமாரிகளுக்காகவா கக்கனும், காமரசும், ஜீவாவும், காந்தி, எல்லாம் கஷ்டப்பட்டது?
ஊழல் செஞ்ச அரசியல்வாதிக்கு தண்டனை கிடைச்சிருந்தா அடுத்து பன்ன கை கூசும்... அதுதான் இங்க இல்லையே... நம்மலும் 500 ரூபாக்கும், குவாட்டருக்கும் அவுட்....அப்துல் கலாம் எல்லாம் இதை எப்படி எடுத்துக்குவார்?
இவ்வளவு பணத்த என்ன பன்னுவாங்க? இப்படி இவங்க பன்ரத எடுத்துக்காட்டா வச்சுக்கிட்டு, அரசு அலுவலர்களும் சுரண்டுராங்க.
எதுக்கு இவங்களை எல்லாம் அமைச்சரா ஆக்குனது? இப்படி சொந்த வீட்டுலயே திருடுரதுக்கா? வேலியே பயிர வேரோட புடிங்கினா என்ன பண்ட்ரது? இப்படி மொல்லமாரிகளுக்காகவா கக்கனும், காமரசும், ஜீவாவும், காந்தி, எல்லாம் கஷ்டப்பட்டது?
ஊழல் செஞ்ச அரசியல்வாதிக்கு தண்டனை கிடைச்சிருந்தா அடுத்து பன்ன கை கூசும்... அதுதான் இங்க இல்லையே... நம்மலும் 500 ரூபாக்கும், குவாட்டருக்கும் அவுட்....அப்துல் கலாம் எல்லாம் இதை எப்படி எடுத்துக்குவார்?
Post a Comment