28 November 2010
தென் கொரியாவுன் அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி.
இயோன்பியாங்: வட கொரியா, தென் கொரியா இடையிலான பதட்ட நிலை மேலும் அதிகரித்துள்ளது. தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கப் படைகள் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதைத் தொடர்ந்து தனது பகுதிக்குள் ஏவுகணைகளை தயார் நிலையில் வைக்கத் தொடங்கியுள்ளது
வட கொரியா.
தென் கொரிய தீவு மீத வட கொரியா திடீர் பீரங்கித் தாக்குதல் நடத்தி 2 ராணுவ வீரர்களைக் கொன்றது. இந்தத் தாக்குதலில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இதனால் ஆத்திரமடைந்த தென் கொரியாவும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த மோதலால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் தற்போது அமெரிக்காவும் மூக்கை நுழைத்துள்ளது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அது களம் இறங்கியுள்ளது. தென் கொரியாவுடன் இணைந்து அமரிக்கப் படைகள் கூட்டு ராணுவப் பயிற்சியி்ல் இறங்கியுள்ளன.இதையடுத்து மஞ்சள் கடல் பகுதியில் தனது நிலம் தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணைகளை நிறுத்தி வைக்க ஆரம்பித்துள்ளது வட கொரியா.
இந்த நிலையில் பிரச்சினையைத் தணித்து அமைதியை நிலை நாட்ட முயற்சிக்கப் போவதாக சீனா கூறியுள்ளது.இதுதொடர்பாகதென் கொரிய அதிபர் லீ மியூங் பாக்கை சீனக் குழு சந்தித்துப் பேசியது.
கொரிய பிரச்சினையில் இதுவரை சீனா நேரடியாக தலையிட்டதில்லை. அதேசமயம், வட கொரியாவின் அத்துமீறல்களை அது கண்டித்ததும் இல்லை. ரஷ்யாவைப் போல வட கொரியாவின் பக்கமே சீனாவும் நிற்பதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் இதை சீனா எப்போதும் மறுத்தே வந்திருக்கிறது. ஆனால் தற்போதையநெருக்கடியான நிலையில், வட கொரியாவுக்கு சீனா அறிவுரை கூறி அடக்கி வைக்க வேண்டும் என்று தென் கொரியா வலியுறுத்தியுள்ளது.
இந்தப் பின்னணியில் தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சியில் இறங்கியுள்ளதால் போர் மூளும் சூழ்நிலை அதிகரித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment