16 November 2010
சென்செக்ஸ்: 6 மாதங்களில் காணாத பெரும் வீழ்ச்சி!
மும்பை: இந்த நிதியாண்டில் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு பெரும் வீழ்ச்சியை இன்று சந்தித்தது இந்திய பங்குச் சந்தை.மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் சென்செக்ஸ் 444 புள்ளிகள் சரிந்து 19,865 புள்ளிகளில் முடிவடைந்தது.ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ், ஹிண்டால்கோ, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், டாடா மோட்டார்ஸ், எல் அன் டி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.
பார்தி ஏர்டெல், கோல்கேட் பாமோலிவ், பென்டாலூன், டிஷ் டிவி இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் ஓரளவு உயர்வு காணப்பட்டது.தேசியப் பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 132 புள்ளிகள் சரிந்து 5,988 புள்ளிகளில் முடிவடைந்தது.
நிறுவனங்களின் லாபப் போக்கு மற்றும் ஆசிய சந்தைகளில் நிலவும் வீழ்ச்சி, இந்திய சந்தையிலும் எதிரொலித்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
கடந்த 6 மாதங்களில் இந்த அளவு சரிவு ஏற்பட்டது இதுவே முதல்முறை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment