13 November 2010

ஆசிய விளையாட்டு-பளு தூக்குதலில் இந்தியா தங்கம் வென்றது-ஒரே நாளில் 4 பதக்கம்

Srinivasa Raoகுவாங்ஷு: ஆசிய விளையாட்டுப் போட்டியின் முதல் நாளிலேயே இந்தியா ஒரு தங்கம் உள்பட 3 பதக்கங்களைப் பெற்று சிறப்பாக தொடங்கியுள்ளது.


சீனாவின் குவாங்ஷு நகரில் 16வது ஆசிய விளையாட்டுப் போட்டி தொடங்கியுள்ளது. நேற்று பிரமாண்டமான முறையில் தொடக்க விழா நடைபெற்றது. இன்று முதல் போட்டிகள் தொடங்கியுள்ளன.

முதல் நாளிலேயே 3 பதக்கங்களைப் பெற்றுள்ளது இந்தியா. ஆடவருக்கான 56 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதலில் இந்தியாவின் ஸ்ரீனிவாசராவ் பல்லூரி தங்கம் வென்றார்.இதே பிரிவில் இந்தியாவின் சுகன் ராய் வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

அதேபோல ஆடவருக்கான 10 மீட்டர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் குழுப் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.


இந்தியாவின் அபினவ் பிந்த்ரா, ககன் நரங், சஞ்சீவ் ராஜ்புத் ஆகியோர் கொண்ட குழு இப்பதக்கத்தைத் தட்டிச் சென்றது.

No comments: