மேலும், இருபாலினத்தவரும் ஒரே இடத்தில் பணியாற்றக்கூடாது என்று அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அங்கு "பாத்வா' உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த உத்தரவுக்கு ஏற்ப, பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க அந்நாட்டில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
முன்பு, பெண்கள் துணிக்கடைக்குச் சென்று ஆடைகள் வாங்குவதில், பெரும் சிக்கல் இருந்து வந்தது. காரணம், துணிக்கடைகளில், சேல்ஸ்மேன்களாக ஆண்கள் தான் இருப்பார்கள். ஒரு பெண், அங்கு உள்ளாடைகள் வாங்க வேண்டுமானால், ஆண் சேல்ஸ்மேனின் உதவியை நாட வேண்டும். பெரும் கூச்சத்துடனும், தர்ம சங்கடத்துடனும், ஆடைகளின் அளவுகளை சேல்ஸ் மேன்களிடம் சொல்ல வேண்டும். இதற்கு சங்கடப்பட்டுக்கொண்டு, சில பெண்கள் கடைக்கு போகவும் விரும்புவதில்லை. இதனை கருத்தில் கொண்டு, அந்நாட்டு அரசு, தற்போது, துணிக்கடைகளில் பெண்களை வேலைக்கு அமர்த்த முன்வந்துள்ளது.
படிப்படியாக, பெண்கள் இருக்க வேண்டிய இடங்களில், பெண்களை அந்நாட்டு அரசு வேலைக்கு அமர்த்த அனுமதி அளித்துள்ளது. இதற்கு, பெண்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், ஒரு சாரார் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment