11 November 2010

2013ல் ஹைப்ரிட் சூப்பர் காரை அறிமுகப்படுத்தும் பிஎம்டபுள்யூ.

BMW Supercar Concept
உலகின் பிரபல சொகுசு கார் தயாரிப்பாளரான பிஎம்டபுள்யூ வரும் 2013-ம் ஆண்டு முதன்முதலாக ஹைப்ரிட் சூப்பர் காரை அறிமுகப்படுத்தவுள்ளது.
 

உலக கார் தயாரிப்பாளர்கள் தற்போது ஹைப்ரிட் அல்லது எலக்ட்ரிக் கார்களைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது பிஎம்டபுள்யூ சேர்ந்துள்ளது. 

இந்த புதிய காரின் விலை ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் விலையை ஒத்து இருக்கும் என்று கம்பெனி சூசகமாகத் தெரிவித்துள்ளது. 

இது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் கூறியதாவது,

இந்த கார் சுற்றுசூழலை கருத்தில் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பிஎம்டபுள்யூ கார்களின் விற்பனைத் திறன் இன்னும் 10 ஆண்டுகளில் தற்போதுள்ள 1. 4 மில்லியன் யூனிட்களில் இருந்து அதிகரித்து 2 மில்லியன் யூனிட்கள் ஆகும். 

மேல் நோக்கித் திறக்கும் கதவுகள், 3 சிலிண்டர் டீசல் என்ஜின், இரட்டை எலக்ட்ரிக் மோட்டார்கள் இதன் சிறப்பு அம்சங்களாகும். 4 பேர் அமரக் கூடிய இந்த காரின் உயரம் 1.24 மீ. இந்த காரைத் தயாரிக்கவும், கார்பன் பைபர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கவும் 530 மில்லியன் யூரோ முதலீடு செய்யப்படும்.

லெய்ப்ஜிக் தொழிற்சாலையை விரிவுபடுத்த 400 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்படும் என்று அவர் கூறினார்.
The popular luxury auto maker BMW is entering into the scape of greener versions of cars. BMW hybrid super car is slated for launch in 2013 and will yield fuel efficiency aided by its technological mastery. The trend among the major car makers is to step in for a hybrid or electric version car. BMW has initiated this as “The Vision Efficient Dynamics model” which is familiar with the display at the Frankfurt Auto Show last year. However, the technical specs are disclosed now only that BMW hybrid super car will be fitted with transmission capacity of 100km/hr in 4.8sec at the emission rate of 99gms of carbon dioxide/km

No comments: