திருமணம் என்பது இருமணம் இணைவது மட்டுமல்ல. இருவேறு குடும்பங்களின் சங்கமம். தலைமுறை தலைமுறையாக சொந்த பந்தங்கள் தழைத்தோங்கும் என்பதால்தான் திருமணத்தை ஆயிரம் காலத்து பயிருக்கு சமமாக ஒப்பிடுகின்றனர். பெற்றோர் பார்த்து நிச்சயம் செய்யப்படுவதுதான் என்றாலும் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயம் செய்யப்படுவதாக பழமொழி தெரிவிக்கின்றன.
திருமணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது போன்ற பழமொழியும் வழக்கத்தில் உள்ளன.
பெற்றோர்கள் பார்த்து நிச்சயம் செய்வதோடு மட்டுமல்லாது காதல் திருமணங்களும் பெருகிவரும் இன்றைய கால கட்டத்தில் திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையின் அவசியத்தை இன்றைய தலைமுறையினர் எந்த அளவிற்கு உணர்ந்து வைத்துள்ளனர் என்பது புரியாத புதிராக உள்ளது.
அதனால்தான் சின்ன சின்ன கருத்து மோதல்களுக்கு எல்லலாம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தின் படிகளை ஏறுவோரின் எண்ரணிக்கை அதிகரித்து வருகிறது. காதல் திருமணமோ, நிச்சயம் செய்யப்பட்ட திருமணமோ எதுவாக இருந்தாலும் தம்பதிகள் ஒத்துப்போனால் மட்டுமே அவர்களுடைய வாழ்க்கையில் நிம்மதி இருக்கும்.
குடும்ப பிரச்சினைகளில் பெரும்பாலும் கணவனது குடிப்பழக்கம், வேலையில்லாத கணவன், குடும்பத்தை நடத்துவதற்கான வருமானம் இன்னமை, கணவரது தாய் மற்றும் தமக்கையரின் கொடுமை, அல்ிலது பாலியல் பிரச்சினைகள் போன்றவை ஒரு பெண்ணிற்கு எதிராக நிற்கின்றன. பெரும்பாலும் திருமணத்திற்கு முன்பு, கணவரது வீட்டார் கூறும் பொய்களே, பல விவாகரத்துகளுக்கு அடிப்படையாக உள்ரளது.
இதேபோல, குடும்பத்திற்கு ஒத்,து வராத பெண், குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளாத பெண், ஊதாரித் தனம், பல ஆண்களின் சகவாசம், குடும்பத்திற்கு அடங்காத பெண் போன்றவை ஆணின் முன் நிற்கும் பிரச்சினைகளாகும்.
சவால்களை சமாளியுங்கள்
கணவனோ, மனைவியோ எந்்த விதத்தில் பிரச்சினை வந்தாலும், இருவரும் ஒரு அணினயில் நின்று பிரச்சினையை சமாளிக்கும் போது குடும்பம் வலுப்பெறும். ஆனால், அவர்களுக்குள்ளாகவே பிரச்சினையை உருவாக்கிக் கொண்டு இரு அணினகளாக நின்று போராடும் போது குடும்ப உறவுக்குள் பல துர்தேவதைகளின் ஆதிக்கம் மேலோங்கும். அது பெண்ணின் தாயாகவும் இருக்கலாம், ஆணின் தாய் மற்றும் தமக்கைகளின் ஆதிக்கமாகவும் இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும், நமது அன்பாலும், பொறுமையாலும் ஒருவரை அனுசரித்துச் சென்று வாழ்க்கையை இனிகதாக்கிக் கொள்வது எவராலும் முடியும் விஷயம்தான். எனவே, பிரச்சினை துவங்கும் போதே அதைப் பற்றி இருவரும் மனம் விட்டுப் பேசி பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம். எதையும் அறி வுப்பூர்வமாக ஆராயாமல், மனப்பூர்வமாக ஆராய்ந்தால் நல்ல வழி கிட்டும்.
விட்டுக்கொடுத்தல் அவசியம்
இந்தக் கால இளம் தலைமுறையினருக்கு விட்டுக் கொடுத்தல், சகிப்புத்தன்மை போன்ற நற்குணங்கள் இல்லாத காரணத்தால்தான் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. விவாகரத்து கேட்டு நீதிமன்றப்படியேரும் தம்பதிகளுக்கு உட.னடியாக வழக்குப் பதிவு செய்து விவாகரத்து வழங்கப்படுவதில்லை. முதலில் உளவியல் ரீதியாக ஆலோசனை வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால் பல தடவைகூட ஆலோசனை நடத்துகிறார்கள்.
முடிந்தவரை தம்பதிகளை சேர்த்து வைக்கவே இந் த நீதிமன்ற்ங்கள் முயற்சி செய்கின்றன. இறுதி வரை விவாகரத்து பெற்றே தீருவது என்று இருவரில் ஒருவர் பிடிவாதமாக இருந்தாலோ அல்லது இருவரும் பிடிவாதமாக இருந்தாலோ வழக்கு நடத்தி விவாகரத்து வழங்கப்படுகிறது.
விவகாரத்திற்கு அடிகோலும் விவாதம்
வீட்டிற்கு வீடு வாசற்படி இருப்பது போல சண்டை ஏற்படாத வீடு என்று எங்கேயும் இல்லை.
வீட்டில் பிரச்சினைகள் உருவாகி சண்டை ஏற்படும் போது இருவரும் ஒரேசமயத்தில் கோபப்படாதீர்கள். வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் ஒருவர் மற்றவரை ஜெயிக்கவிட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே! விவாதம் தவிர்க்க முடியாதது என்றால், கூடியவரைக்கும் அதை ஒத்திப் போடுங்கள்.
தேவை அன்பான வார்த்தை
ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள். செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக் கொள்ளவும் அல்லது அதற்காக மன்னிப்புக் கேட்கவும் தயங்காதீர்கள். கடந்தகால தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள். விமர்சனத்தையே வாஞ்சையுடனும், அன்புடனும் செய்து பாருங்கள். மேலும், உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும், உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்களேன்.
மூன்று தாரக மந்திரங்கள்
இல்லற வாழ்க்கை இனித்திட, மூன்று தாரக மந்திரங்கள். (இவற்றை எப்போதும் மனதில் கொள்ளுங்கள்) சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளுதல். அனுசரித்துப் போகுதல்.மற்றவர்களை மதித்து நடத்தல். நம் வாழ்க்கை நம் கையில்தான் உள்ுளது. இதனை அனைத்து தம்பதிகளும் பின்பற்றி வந்தாலே பெரும்பாலான குடும்ப பிரச்சினைகள் வராது. அப்்படியே தலைதூக்கினாலும் அவை பெரிய அளவில் உருவாகாது. நீங்களும் திருமணமானவராக இருப்பின் இதனை பின்பற்றிப் பாருங்கள். உங்ுகள் இல்கலறம் நல்லறமாகும்.
No comments:
Post a Comment