22 September 2011

தஞ்சையில் ஃபோட்டோவுடன் வாக்காளர் பட்டியல் வெளியீடு


தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஃபோட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியலை கலெக்டர் பாஸ்கரன் வெளியிட்டார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வரதராஜன், டி.ஆர்.ஓ., சுரேஷ்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.அப்போது கலெக்டர் பாஸ்கரன் பேசியதாவது:

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய மூன்று நகராட்சிகளுக்கும், தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர், ஒரத்தநாடு, திருவோணம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தøõள், பாபநாசம், அம்மாப்பேட்டை, பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய 14 யூனியன்களில் 276 கவுன்சிலர்களும், 589 பஞ்சாயத்து தலைவர்களுக்கும், நான்காயிரத்து 569 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடக்கிறது. நகர்புற உள்ளாட்சிகளில் 644 வாக்குச்சாவடிகளிலும் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் இரண்டாயிரத்து 608 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.

தஞ்சாவூர் நகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 71 ஆயிரத்து 583 பேரும், பெண் வாக்காளர்கள் 73 ஆயிரத்து 886 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 469 வாக்காளர்களும், கும்பகோணம் நகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 42 ஆயிரத்து 629 பேரும், பெண் வாக்காளர்கள் 43 ஆயிரத்து 390 பேர் ஆக மொத்தம் 86 ஆயிரத்து 19 வாக்காளர்கள் உள்ளனர். பட்டுக்கோட்டை நகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 21 ஆயிரத்து 888 பேரும், பெண் வாக்காளர்கள் 22 ஆயிரத்து 305 பேரும் ஆக மொத்தம் 44 ஆயிரத்து 193 வாக்காளர் உள்ளனர்.மொத்தமுள்ள 14 யூனியன்களில் ஆண் வாக்காளர்கள் ஐந்து லட்சத்து 43 ஆயிரத்து 944 பேரும், பெண் வாக்காளர்கள் ஐந்து லட்சத்து 43 ஆயிரத்து 745 பேரும் ஆக மொத்தம் பத்து லட்சத்து 86 ஆயிரத்து 689 வாக்காளர்கள் உள்ளனர். 22 டவுன் பஞ்சாயத்துகளில் ஆண் வாக்காளர்கள் 95 ஆயிரத்து 511 பேரும், பெண் வாக்காளர்கள் 96 ஆயிரத்து 752 பேரும் ஆக மொத்தம் ஒரு லட்சத்து 92 ஆயிரத்து 263 வாக்காளர்கள் உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் ஏழு லட்சத்து 75 ஆயிரத்து 555 பேரும், மொத்த பெண் வாக்காளர் எண்ணிக்கை ஏழு லட்சத்து 79 ஆயிரத்து 78 பேரும் ஆக மொத்தம் 15 லட்சத்து 633 வாக்காளர்கள் உள்ளனர்.இவ்வாறு கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்தார்.இதில், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ஜெகதீசன் (ஊரக வளர்ச்சி,) மோகன் (தேர்தல்) ஆகியோர் உடன் இருந்தனர்

No comments: