டெல்லி: ஒரிசா மாநிலத்தின் பெயரை ஒடிஷா என மாற்றுவதற்கு லோக்சபா ஒப்புதல் அளித்துள்ளது.
ஒரிசா மாநிலத்தின் பெயரை ஒடிஷா எனவும், ஒரியா மொழிப் பெயரை ஒடியா என்று மாற்றவும் ஒரிசா மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் தரப்பட்டது.
இதையடுத்து இதுதொடர்பான இரு மசோதாக்கள் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டன. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த இந்த இரு மனுக்களும் சிறிய விவாதத்திற்குப் பின்னர் நிறைவேற்றப்பட்டன.
திருத்த மசோதாக்களுக்கு ஆதரவாக 294 வாக்குகளும், எதிராக 9 வாக்குகளும் கிடைத்தன.
ஏற்கனவே மெட்ராஸ் என்ற பெயர் சென்னை எனவும், பாண்டிச்சேரி என்ற பெயர் புதுச்சேரி எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதேபோல கல்கத்தா என்பது கொல்கத்தா என்றும், பாம்பே என்பது மும்பை என்றும் மாற்றப்பட்டுள்ளது நினைவிருக்கலாம். அதே வரிசையில் தற்போது ஒரிசா மாநிலத்தின் பெயரும், மொழியின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment