12 November 2010
மீடியா துறையில் நிதி ஆதாரத்திற்கான வழிமுறைகள் : கமலஹாசன்
ஐதராபாத் : இந்திய மீடியா மற்றும் பொழுதுபோக்கு துறையில், நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக நடிகரும், இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் ‘ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு பிரிவின் தலைவருமான கமலஹாசன் தெரிவித்துள்ளார். இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் ‘ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு பிரிவு சார்பாக, டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வர்த்தக கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு, ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் அவர் கூறியதாவது : மீடியா மற்றும் பொழுதுபோக்கு துறையை நவீனமயமாக்கல், புதிய மீடியாக்கள் வெளிவர துணைபுரிதல், நிதி ஆதாரங்களை பெருக்குவதற்கான புதிய வழிமுறைகள், திருட்டு சிடிக்கள் ஒழிப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து அதில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது : இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் ‘ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் எல்லா பிரிவுகளிலும் நிதி ஆதாரங்களை பெருக்குவது மற்றும் புதிய நிதி ஆதாரங்கள் உருவாக்குவது இதில் விவாதிக்கப்பட இருப்பதாகவும், நிதி ஆதாரங்கள் தான் தங்கள்துறைக்கு பெரும் சவாலாக இருப்பதாகவும், இதுமட்டுமல்லாது, இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் ‘ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை, வங்கிச்சேவை பிரிவிலும் கவனம் செலுத்த உள்ளதாகவும், இதற்காக புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்த இருப்பதாகவும் அவர் தெரிவி்த்தார். தொடர்ந்து இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் ‘ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் உயர் அதிகாரி சங்கீதா ரெட்டி பேசியதாவது:இந்திய சினிமாத்துறை மூலம் 60 ஆயிரம் கோடி வருவாய் என்ற இலக்கை அடைய முடிவுசெய்யப்பட்டுள்ளது.நடப்பு ஆண்டில் இது 18 சதவீதம் லாபம் அடைந்துள்ளது.கடந்த ஆண்டு இது 14 சதவீதம் என்ற அளவில் இருந்தது. வருங்காலங்களில் இந்த நிலை மாற வாய்ப்புள்ளது.மீடியா மற்றும் பொழுது போக்கு நிக ழ்ச்சி மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 13 சதவீத வளர்ச்சியுடன் ஒருலட்சத்து 9 ஆயிரம்கோடி வருவாய் ஈட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. தொலைக்காட்சி வருவாயை பொறுத்தவரையில் கடந்த 2008ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 6.8 சதவீத வளர்ச்சியுடன் 27 ஆயிரம் கோடிவருவாயை கொண்டுள்ளது.இத்துறையில் ஆண்டு சராசரி வரு வாய் கடந்த ஆண்டு 8 ஆயிரத்து 900 கோடியாக உள்ளது.ஒட்டுமொத்தமாக இத்துறையில் அடுத்த ஐந்தாண்டுகளில்32 சதவீத வளர்ச்சி அதிகரிக்கும் என தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment