சர்வதேசப் பொருளாதாரத் தேக்க நிலையிலிருந்து இந்தியா வெகு வேகமாக மீண்டுவிட்டது. இந்தியாவின் பொருளாதாரமும் மிக அதிகமான வேகத்தில் முன்னேறி வருகிறது. இந்த மாற்றங்களால் இந்தியாவின் தொழில் துறையில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் இந்த மாற்றங்களால் இந்தியாவில் அபரிமிதமான அளவில் பணி நியமனங்கள் இருக்கும் என்று சர்வதேச கன்சல்டிங் நிறுவனமான எர்ன்ஸ்ட் அண்டு யங் நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கணிப்புகள் சிலவற்றை உங்களுக்காகத் தருகிறோம்: ஹெல்த்கேர், ரியாலிடி உள்ளிட்ட 6 துறைகளில் மட்டும் இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 2.3 லட்சம் புதிய பணி வாய்ப்புகள் ஏற்படும். ஹெல்த் கேர், ரியல் எஸ்டேட், ஐ.டி.,/ஐ.டி.இ.எஸ்., கல்வி மற்றும் டிரெய்னிங், உற்பத்தி, வங்கி மற்றும் இன்சூரன்ஸ் உள்ளிட்ட நிதித்துறை சேவைகள் ஆகிய ஆறு துறைகள்தான் எர்ன்ஸ்ட் அண்டு யங் நிறுவனத்தால் அபரிமித வேலை வாய்ப்பு தரும் துறைகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.இந்த 6 துறைகளில் ரியல் எஸ்டேட், ஐ.டி., ஐ.டி.இ.எஸ்., துறைகளில் 50 ஆயிரம் புதிய பணி வாய்ப்புகளும், கல்வி மற்றும் டிரெய்னிங் துறைகளில் 30 ஆயிரம் புதிய பணி வாய்ப்புகளும், உற்பத்தி மற்றும் பி.எப்.எஸ்.ஐ., துறைகளில் 20 ஆயிரம் புதிய பணி வாய்ப்புகளும் இந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் உருவாகும் என்று எர்ன்ஸ்ட் அண்டு யங் நிறுவனம் கணித்துள்ளது.இந்தத் துறைகளில் தேவைக்கும், இருப்புக்குமான மிகப் பெரிய இடைவெளி இருப்பதால் இதே நிலை அடுத்த சில ஆண்டுகளுக்கும் நீடிக்கும் என்று கணிக்கப்படுகிறது. ஹெல்த் கேர் துறை கடந்த செப்டம்பர் வரை 1 லட்சத்து 50 ஆயிரம் பணி வாய்ப்புகளை உருவாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. வாழ்க்கை முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், கிராமப்புற சேவைகளில் அதிகரிப்பு, அரசுத் திட்டங்கள் ஆகிய காரணங்களால் இந்தப் புதிய எழுச்சி தோன்றியிருப்பதாக எர்ன்ஸ்ட் அண்டு யங் நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. இந்தியாவின் பொதுத்துறையிலும் புதிய பணி நியமனங்களைச் செய்வதற்கான முனைப்பு காட்டப்படுகிறது. இந்த நிறுவனங்களும் இந்த ஆண்டு இறுதி வரையில் இதே நிலையைக் கையாளும் என்று நம்பப்படுகிறது. இந்திய வங்கித் துறையில் கிளை அதிகரிப்பு, ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஆகிய காரணங்களால் புதிய பணி நியமனங்களில் அதிகரிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளில் மட்டும் கிட்டத்தட்ட 50 ஆயிரம் பணி இடங்கள் ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது. இதே போல் கல்வி மற்றும் டிரெய்னிங் துறையிலும் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டு வருவதால் இந்தத் துறையிலும் அதிகமான புதிய பணி நியமனங்கள் செய்யப்படும் என்று எர்ன்ஸ்ட் அண்டு யங் நிறுவனத்தின் சார்பாக கணிக்கப்பட்டுள்ளது. Thanks Dinamalr |
11 November 2010
இந்திய வேலை வாய்ப்பு சந்தையில் 2.3 லட்சம் புதிய பணிகள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment