30 November 2010

Karzai pardons dangerous criminals, drug dealers: WikiLeaks

Kabul: Afghan President Hamid Karzai has ordered the release of numerous dangerous criminals and drug traffickers detained by US-led coalition forces, leaked American diplomatic cables revealed on Tuesday.
American officials said they had repeatedly rebuked the president and Afghan attorney general Muhammad Ishaq Alko for authorising the release of detainees over a three-year period.

"Both authorise the release of detainees pre-trial and allow dangerous individuals to go free or re-enter the battlefield without ever facing an Afghan court," said a cable dated August 2009 and classified as "secret" by then-US deputy ambassador to Afghanistan Francis Ricciardone."Despite our complaints and expressions of concern to the GIRoA (Afghan government), pre-trial releases continue," it said.
Internet whistleblower WikiLeaks has begun releasing a quarter of a million confidential US diplomatic cables, detailing embarrassing and inflammatory episodes in what the White House called a "reckless and dangerous action".
In the August 2009 cable, American officials said that since 2007, 150 of the 629 detainees transferred from coalition to Afghan custody had been released without trial.It said Karzai had pardoned five border policemen in April 2009 who were caught with 124 kilograms of heroin in their police vehicle and had been sentenced to terms of 16 to 18 years in prison.They were pardoned "on the grounds that they were distantly related to two individuals who had been martyred during the civil war," the cable noted.

The document said Karzai also intervened in a narcotics case involving the son of a wealthy businessman and one of his supporters.The president ordered a second investigation "without any constitutional authority" it said, which found the defendant had been framed.The latest cable strikes at the heart of Western fears that high-level corruption within the Afghan government and judiciary is undermining the nine-year war against the Taliban.Last week the attorney general, a key ally of the president, was accused of playing politics over a criminal probe into the country's fraud-marred parliamentary elections that were held in September.
The probe has queried the disqualification of 24 poll candidates by the country's top electoral body.Election results released last week are said to have weakened support for the president, who has allies among those disqualified.The president's office and attorney-general's office were not immediately available for comment over the latest disclosure.

On Monday, Afghanistan said its relations with the United States would not be affected by earlier leaked cables portraying Karzai as weak and paranoid, and his brother as a corrupt drugs baron.US ambassador to Kabul, Karl Eikenberry, has condemned the WikiLeaks' release and reiterated American commitment "to building and strengthening a long-term partnership with the Afghan people and the Afghan government".
"Our shared goals do not change based on the release of purported diplomatic reporting from the past," Eikenberry said.

ராசா !! ?? !!



A.Raja (Ex.Minister)

ராசாவின் பெற்றோர் ஆண்டிமுத்து மீதும், சின்னப்பிள்ளை மீதும் நிரம்ப மரியாதை உண்டு. சாதாரண குடும்பமாக இருந்தாலும், தங்கள் பிள்ளைகளுக்கு, சிறந்த கல்வியை வழங்கியிருக்கின்றனர் அந்தப் பெற்றோர்.   திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் தலித்துகள் நில உடைமையாளர்களாக இல்லை.   பெரும்பாலும் விவசாயக் கூலிகளாகவும், மற்ற சாதாரண கூலி வேலை செய்பவர்களாகவுமே இருக்கிறார்கள்.   இந்தப் பின்னணியில் பார்த்தால், ராசாவின் பெற்றோர் மிக உயர்ந்தவர்கள்.
 சவுக்கின் மீது அடுத்த குற்றச் சாட்டு சவுக்கு தலித்தின விரோதி என்பது.   ஏழை தலித்துகள் மீது சவுக்குக்கு தீராத காதல் உண்டு. நீதிபதி பி.டி.தினகரன் ஆ.ராசா போன்றவர்களை தலித்துகள் என்றே ஏற்றுக் கொள்ள முடியாது.   தலித் என்ற மராத்தி சொல்லுக்கு என்ன பொருள்... ? ஒடுக்கப் பட்டவன், நசுக்கப் பட்டவன். துண்டு துண்டாக உடைக்கப் பட்டவன் என்றல்லவா பொருள்.. ? நீதிபதி பிடி.தினகரனும், ஆ.ராசாவும் ஒடுக்கப் பட்டவர்களா ? நசுக்கப் பட்டவர்களா ?   ஊழலில் ஈடுபடும் இது போன்ற நபர்கள், தலித், மைனாரிட்டி என்ற போர்வையை போர்த்திக் கொண்டு தப்பிக்கப் பார்ப்பது வேதனையானது. 
எழும்பூர் நீதிமன்றத்தில் வசந்தி ஸ்டான்லி புது ஷ்யூரிட்டி கொடுக்கச் சென்ற பொழுது, வசந்தியின் வழக்கறிஞர் ஒருவர் மைனாரிட்டி கம்யூனிட்டியில இருக்கற ஒரே எம்.பி ப்பா. விட்டுடங்கப்பாஎன்று சொன்னார்.
மிக மிக கவனமாக ஒரு விஷயத்தை கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், பி.டி.தினகரன் மீது ஊழல் குற்றச் சாட்டுகள் எழுந்த போது, பாரதியாரின் கவிதை முரசொலியில் வெளியானது. 
சூத்திரனுக்கொரு நீதி தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கொரு நீதி” 
இதே கவிதையை நேற்றைய முரசொலியில் கருணாநிதி ஆ.ராசா விவகாரத்திற்காக எழுதியுள்ளார்.
நிற்க.   விமானநிலையத்தில் ஆ.ராசா வந்திறங்கியதும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. அந்த வரவேற்புக்கு சென்று கலந்து கொண்ட முக்கியமான ஒரு பிரமுகர் நக்கீரன் காமராஜ். இவருக்கும் ஆ.ராசாவுக்கும் என்ன நெருக்கம்….. ? பிசினஸ் பார்ட்னர்னா சும்மாவா
மும்பையில் ஏழாவது தளத்தில், ரஹேஜா பாயின்ட்.1, ஜவகர்லால் நேரு மார்க், வகேலா மார்க்கெட், சான்டா க்ரூஸ், மும்பையில், மாடர்ன் ஹைடெக் பிரைவேட் லிமிட்டெட் என்ற நிறுவனம் இயங்குகிறது. இந்த நிறுவனத்திற்கு அடுத்த அறைதான் அலைக்கற்றை ஊழலில் முக்கியப் பங்கு வகித்த ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் அலுவலகம்.   மாடர்ன் ஹைடெக் நிறுவனத்தில் கீழ் கண்டவர்கள் பங்குதாரர்கள்.
சையது மொய்தீன் (ஈடிஏ ஸ்டார் குழுமத்தைச் சேர்ந்தவர்)
டாக்டர் கிருஷ்ணமூர்த்தி (நீதிபதி ரகுபதியை மிரட்டியவர்)
ராமச்சந்திரன் (ராசாவின் அண்ணன்)
அறிவு (ராசாவின் தம்பி)
அப்புறம்
நம்ப காமராஜ்.

இப்போது புரிகிறதா எதற்காக விமான நிலையத்திற்கு சென்றார் என்று ? இது பத்தாது என்று இந்த இதழ் நக்கீரன் கவர் ஸ்டோரி என்ன தெரியுமா ?   “மீண்டும் மத்திய அமைச்சரவையில் ஆ.ராசா. காங்கிரஸ் உறுதி“   காமராஜ் சார்.   ஏன் உங்களுக்கு இந்த வேலை… ? சிபிஐ உங்களை விசாரிக்கும் போது, கரெக்டா பதில் சொல்லுங்க என்ன
இந்த ஹைடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ரியல் எஸ்டேட் தொழிலில், குறிப்பாக சிறப்பு பொருளாதார மண்டலங்களை கையாள்வது, நிலம் ஒதுக்கீடு போன்ற துறைகளில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. 
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப் படுகிறது. இந்த மண்டலத்தில், ஜிவிகே பவர் மற்றும் இன்ப்ராஸ்டரக்சர் என்ற நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகமும் பங்குதாரர்கள். 
இந்த மண்டலத்திற்காக 3000 ஏக்கர் நிலம் கையகப் படுத்தப் பட்டது.   இந்த நிலம் கையகப் படுத்தலை எளிதாக முடித்துக் கொடுத்தார் என்பதற்காக ஆ.ராசாவுக்கு 199.6 ஏக்கர் நிலம், இந்த மண்டலத்திற்குள்ளாகவே வழங்கப் பட்டிருக்கிறது. இந்த நிலம் பதியப் போகும் நேரத்தில், தொழில் வளர்ச்சிக் கழகத்திடமிருந்து, தடையில்லா சான்று வேண்டும், அப்போதுதான் பத்திரத்தை பதிவு செய்ய முடியும் என்ற சார் பதிவாளர் எதிர்ப்புத் தெரிவிக்கிறார். ஆனால், அவர் மிரட்டப் பட்டு நள்ளிரவு 12 மணிக்கு இந்தப் பத்திரப் பதிவு, தொழில் வளர்ச்சிக் கழகத்தின் தடையில்லா சான்று இல்லாமலேயே, பதிவு செய்யப் பட்டது. 
இது தவிரவும், ஊட்டியில் 300 ஏக்கர் டீ எஸ்டேட் ஆ.ராசா வாங்கியிருப்பதாக தெரிகிறது. 
ஆ.ராசா சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி ஏற்ற நான்கு மாதங்கள் கழித்து தொடங்கப் பட்டதுதான் க்ரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ் பிரைவேட் லிமிட்டெட்.   இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ராசாவின் பினாமி ஏ.எம்.சாதிக் பாட்சா, சாதிக்கின் மனைவி ரேஹா பானு ஆகியோர். மே 2004ல் இந்த நிறுவனம் தொடங்கப் பட்ட போது மொத்த முதலீடு ஒரு லட்சம்.   இந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கு தியாகராய நகர் கனரா வங்கியில் உள்ளது.   தொடங்கிய முதல் ஆண்டிலேயே இந்நிறுவனத்தின் மொத்த டர்ன் ஓவர் 755 கோடி. ஒரு லட்சம் ஒரு வருடத்திற்குள் எப்படி வளர்ந்திருக்கிறது பார்த்தீர்களா
கனரா வங்கிக் கணக்கில் ஹாங்காங், சிங்கப்பூர், அரபு நாடுகள் போன்ற இடங்களிலெல்லாம் இருந்து பணம் போடப் பட்டிருக்கிறது.     இந்த வளர்ச்சியை பார்த்தால், இந்தியாவிலேயே பெரிய தொழில் அதிபர் ஆ.ராசாதான் போலிருக்கிறது. 
இந்த க்ரீன் ஹவுஸ் நிறுவனம், பெங்களுரில் டி.6, தேவதா ப்ளாஸா இரண்டாவது தளம், ரெசிடென்சி சாலை, பெங்களுரு என்ற இடத்தில் புதிய அலுவலகம் தொடங்கியது. அடுத்ததாக சிங்கப்பூரில், எண் 04/28, செராங்கூன் ப்ளாசா, செராங்கூன் ரோடு, சிங்கப்பூர் என்ற முகவரியில் அடுத்த கிளை தொடங்கப் பட்டது. 
க்ரீன் ஹவுஸ் ப்ரமோட்டர்ஸ் நிறுவனம் தொடங்கிய நான்கே மாதங்களில் ஈக்வாஸ் ரியல் எஸ்டேட்ஸ் என்ற அடுத்த நிறுவனத்தை ஆ.ராசா தனது உறவினர்கள் பெயரில் தொடங்குகிறார்.   சில நாட்கள் கழித்து, கோவை ஷெல்ட்டர்ஸ் என்ற பெயரில் மற்றொரு ரியல் எஸ்டேட் நிறுவனம் ராசாவின் உறவினர்களால் தொடங்கப் படுகிறது.இது மட்டுமல்லாமல் ஆண்டிமுத்து, சின்னப்பிள்ளை அறக்கட்டளை என்ற ஒன்று தொடங்கப் பட்டு, இன்று அந்த ட்ரஸ்டின் சொத்து 200 கோடி ரூபாய். 
பனிமலர் கல்வி அறக்கட்டளை என்ற ஒரு அறக்கட்டளை தொடங்கப் பட்டு, அதிலும் கோடிக்கணக்கான ரூபாய்கள் முதலீடு செய்யப் பட்டுள்ளன. 
திருச்சி பெரம்பலூர் நெடுஞ்சாலையில் சாலையின் இரு மருங்கிலும் ஏறக்குறைய அனைத்து இடங்களையுமே ராசாவின் பினாமிகள் பெயரில் வளைத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலத்தை வாங்கிப் போடுவதில், ராசாவுக்கு நெருக்கமான சாதிக் பாட்சா என்ற நபர் பெரும் பங்கு வகிப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 
ராசாவின் சகோதரர் கலியபெருமாள் என்பவர், ஐடிசி நிறுவனத்தின் ஏஜென்சி எடுத்து நடத்திக் கொண்டிருப்பதாக தெரிகிறது. மேலும், ஹீரோ ஹோண்டா ஏஜென்சியும் எடுத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 
ராசா அவ்வளவு சம்பாதிக்க வில்லை.   எதிர்க்கட்சிகள் திரித்துக் கூறுகின்றன என்பவர்கள், இந்தச் சொத்துக்களெல்லாம் எப்படி வந்தன என்று விளக்கினால் நல்லது.

ஆண்டிமுத்து சின்னப்பிள்ளை அறக்கட்டளை




















பனிமலர் பள்ளி வளாகம்


























எல்லாம் நம்ப எடந்தான்




















ஏழை தலித் குடிசை






























சிவகாமம் ஐடிசி ஏஜென்சி




















திருமண மண்டபம்




















ஹீரோ ஹோண்டா ஏஜென்சி
தே Bottom of Form



ஊழலை ஒழிக்க தொலைபேசி சேவை.

அகமதாபாத்: நாட்டை ஊழல் படாதபாடு படுத்திக் கொண்டிருக்கையில் இந்த நேரத்தில் அதை ஒழிக்கவும், குறைக்கவும் தொலைபேசி சேவையுடன் கிளம்பியுள்ளனர் அகமதாபாத் ஐஐஎம் மாணவர்கள்.
Corruption
எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பது தான் இந்தியாவின் தற்போதைய நிலை. அன்மையில் டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் நடந்த ஊழல் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பைக் குறைத்துவிட்டது. தற்போது 2 ஜி ஊழல் விவகாரம். இன்னும் எத்தனை ஊழல் வெளிச்சத்திற்கு வரவிருக்கின்றதோ தெரியவில்லை.

இந்நிலையில் ஐஐஎம்- அகமதாபாத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் ஊழல் என்னும் பெருங்குற்றத்தைக் குறைத்தால் தான் நாடு முன்னேறும் என்று எண்ணி தொலைபேசிச் சேவையை துவங்கவுள்ளனர். இந்த சேவை மூலம் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மற்றும் ஐஐஎம்-அகமதாபாத் பேராசிரியர் அனில் குப்தா ஆகியோரைத் தொடர்பு கொண்டு புகார் கொடுக்கலாம்.

இது குறித்து பேராசிரியர் அனில் குப்தா தெரிவித்ததாவது,

மாணவர்கள் ஊழலைக் குறைக்க தொலைபேசிச் சேவையை துவக்கும் திட்டத்துடன் என்னை அனுகியபோது இது ஒரு சிறந்த திட்டம் என்று நினைத்தேன். தற்போது நாடு இருக்கும் நிலையில் இத்திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. லஞ்சம் கொடுக்காமல் இந்தியாவில் எந்த வேலையும் நடக்காது என்றே மக்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் போட்டிகள் ஊழல், ஆதர்ஷ் ஊழல் என்று ஒரே ஊழல் விவகாரங்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

ஊழல் நடப்பது தெரிந்தாலும் மக்களுக்கு அதை யாரிடம் சொல்வது என்பது தெரியவில்லை. அப்படியே தெரிந்திருந்தாலும் புகார் கொடுத்தால் அவர்கள் வேலை கெட்டுவிடுமோ என்ற பயம்.

இந்த சேவை மூலம் மக்கள் தைரியமாக ஊழல் பற்றி புகார் கொடுக்கலாம். அவ்வாறு கொடுக்கப்படும் புகார்கள் உண்மையானதா என்று கண்டிறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

இனி போரிட ரோபோக்கள்... அமெரிக்கா முடிவு!

இனி போர்களில் மனிதர்களுக்குப் பதில் ரோபோக்களை ஈடுபடுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ராணுவத்தை முற்றிலும் நவீனமயமாக்குவதில் தீவிரமாக உள்ளது அமெரிக்கா. போரின் போது ராணுவ வீரர்களை நேரடியாக பயன்படுத்துவதால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இது அமெரிக்காவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. வியட்நாமியப் போர், ஈராக் போர்களில் வீரர்களின் உயிரிழப்பு பெரும் பிரச்சினையாக இருந்தது அமெரிக்காவுக்கு.

Robo Warsஇந்த சிக்கலுக்கு தீர்வு காணும் விதத்தில், போர்களில் அதி நவீன ரோபோக்களை (எந்திர மனிதனை) பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஸ்பெஷல் ரோபோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

அவை எதிரிகளை மறைந்திருந்து தாக்கும் வல்லமை படைத்தவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தொட்டறியும் உணர்வையும் இந்த ரோபோக்களுக்கு வழங்கியிருப்பதன் மூலம், எந்திர மனிதனால் மனிதர்களுக்கு தீங்கு நேராமல் பார்த்துக் கொள்ள முடியும் என்றும், இலக்கை மட்டுமே தாக்கும் என்றும் அமெரிக்கா கருதுகிறது.

15 இஞ்ச் அளவுள்ள இந்த ரோபோக்களுக்கு ஜெர்ஷியா மாகாணத்தில் உள்ள போர்ட் பென்னிங் ராணுவ தளத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த ரோபோக்கள் ஆணையைப் பெற்றதும் குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழித்தன. எனவே இதை போர் முனையில் பயன்படுத்தலாம் என முன்னாள் ராணுவ அதிகாரி ஜோசப் டபிள்யூ டயர் தெரிவித்தார்.

இந்திய தூதர்களை உளவு பார்க்க உத்தரவிட்ட ஹில்லாரி-விக்கிலீக்ஸ்

Hillary Clinton ஐ.நா. நிரந்தர உறுப்பினர் பதவியைப் பெற இந்தியா தீவிரமாக இருப்பதால், அதுதொடர்பாக ஐ.நா.வில் என்னவிதமான முயற்சிகளை இந்தியா மேற்கொள்கிறது என்பது குறித்து உளவு பார்க்குமாறு தனது தூதர்களை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் கேட்டுக் கொண்டதாக விக்கிலீக்ஸ் குண்டைப் போட்டுள்ளது.

அமெரிக்காவே ஆடிப் போயிருக்கிறது, விக்கிலீக்ஸ் விவகாரத்தில். ஒவ்வொரு நாட்டுக்கும் 'விக்கிலீக்ஸ்' என்னவேண்டுமானாலும் சொல்லும்... தயவு செய்து நம்பிவிடாதீர்கள்', என்கிற ரீதியில் கோரிக்கை விடுத்துவருகிறது அந்த நாடு.

ஆனால் அமெரிக்கா உலக நாடுகள் ஒவ்வொன்றுடனும் டபுள் டபுளாக கொள்கைகளை வகுத்து செயல்பட்டு வந்த பச்சோந்தித்தனம் தற்போது படிப்படியாக அம்பலமாகி வருகிறது. அமெரிக்காவை நம்பவே கூடாது என்ற கருத்துக்கு ஆணித்தரமாக ஆதாரம் தருவது போல உள்ளது இந்த கசிவுகள்.

என்ன அது விக்கிலீக்ஸ்?

2006-ம் ஆண்டு ஜூலியன் அஸாங்கே என்ற ஆஸ்திரேலியரால் தொடங்கப்பட்டது விக்கிலீக்ஸ். இது ஒரு லாப நோக்கற்ற இணையதளம். இங்கே உலகின் அத்தனை அரசியல், வர்த்தக சாம்ராஜ்யங்களின் ரகசியங்களும் சேகரித்து பின் வெளிப்படுத்தப்படும்.

சர்வதேச அளவில் பத்திரிகையாளர்கள், புலனாய்வாளர்களுக்கு மிகப் பெரிய ஆதாரதளமாக விக்கிலீக்ஸ் மாறி வருகிறது. மேலும் சமூகத்தில் வெளிப்படைத் தன்மை நிலவ வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் என அறிவித்துள்ளது விக்கிலீக்ஸ்.

இந்த தளம், கடந்த 5 ஆண்டுகளாக, உலகமெங்கும் உள்ள அமெரிக்கா தூதரகங்கள், துணைத் தூதரகங்கள் வாஷிங்டனுக்கு அனுப்பி வைத்த முக்கிய ரகசிய ஆவணங்களை, அதிகாரிகள் மூலம் பெற்று சேகரித்தது.

அப்படி சேகரித்த லட்சக்கணக்கான சர்வதேச அரசியல் ஆவணங்களை இப்போது தொகுதி தொகுதியாக வெளியிட்டு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளை அதிர வைத்துள்ளது விக்கிலீக்ஸ்.

அமெரிக்கா ஒவ்வொரு நாட்டிலும் வெறும் தூதரகங்களை மட்டும் வைத்திருக்கவில்லை. அதிகாரப்பூர்வமாக உளவுத் துறையையே நடத்தி வருகிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது விக்கிலீக்ஸ்.

கடந்த 2009-ல் முதல் முறையாக அமெரிக்கா தொடர்பான பல்வேறு இராணுவ ரகசியங்களையும், ஆப்கான் மற்றும் பாகிஸ்தான் விவகாரங்களில் அந்நாடு மேற்கொண்ட முடிவுகள் தொடர்பாகவும் பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது விக்கிலீக்ஸ்.

பின்னர் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி The Iraq War Logs என்ற தலைப்பில் 391,832 ஆவணங்களை வெளியிட்டு அதிர வைத்தது. உலகில் வெளியான மிகப் பெரிய ரகசிய ஆவண தொகுப்பு என்ற பெருமையும் இதற்குண்டு.

ஈராக் போரில் அமெரிக்கா வெண்டுமென்றே செய்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை இதில் அம்பலமாக்கியது விக்கிலீக்ஸ். அமெரிக்காவின் நோக்கம் அங்குள்ள வளங்களைச் சுரண்டுவதே என்றும் அதற்குத் தடையாக இருப்பவர்களை ஒழிப்பதுதான் முதல் வேளை என்றும் இந்த ஆவணங்கள் அழுத்தமாக வெளிப்படுத்தின.

இந்தப் போரில் 2004-ம் ஆண்டி்லிருந்து 2009-ம் ஆண்டுவரை 109,032 பேர் உயிரிழந்த உண்மை அப்போதுதான் வெளியானது. இதில் சிவிலியன்கள் மட்டும் 66,081 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர் இந்தப் போரில். ஆனால் இதனை அப்படியே அமுக்கி வைத்திருந்தது அமெரிக்கா.

இந்தியாவைப் பற்றி...

இந்தியாவைப் பற்றி அமெரிக்காவின் உண்மையான அபிப்பிராயம் மற்றும் பிற நாடுகள் எப்படி பார்க்கின்றன என்ற உண்மையும் வெளிவந்துள்ளது.

இந்தியாவை இன்றுவரை சந்தேகத்துக்குரிய நாடாகவே அமெரிக்கா பார்ப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. இதுவரை டெல்லியில் உள்ள தூதரகம் மூலம் 3,038 ரகசிய ஆவணங்கள் வாஷிங்டனுடன் பரிமாறப்பட்டுள்ளது. ஆனால், ஆவணங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இந்த ஆவணங்களில் உள்ள தகவல்களை அறிவதில் சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அது சரி செய்யப்பட்டபின்னர் அது தொடர்பான தகவலும் வெளியிடப்பட்டுவிடும் என்று விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

தவிர, துருக்கி ஏற்பாடு செய்த ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்த ஆலோசனக் கூட்டத்தில் இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பாமல் தவிர்க்கப்பட்டது ஏன் என்பது குறித்த தகவலையும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் வேண்டுகோளை ஏற்றே இந்தியாவை துருக்கி தவிர்த்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தொடர்பான அனைத்து சர்வதேச கருத்தரங்கம் மற்றும் ஆலோசனைக் கூட்டங்களில் இந்தியா தவிர்க்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவிடம் துருக்கி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்தே, இந்த ஆண்டு தொடக்கத்தில் துருக்கி ஆதரவில் நடைபெற்ற "தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது குறித்த ஆப்கானிஸ்தான் நட்பு நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள இந்தியாவுக்கு அழைப்பு அனுப்பப்படாமல் போனதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்தியா குறித்த அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்திய தூதர்களை உளவு பார்க்க உத்தரவிட்ட ஹில்லாரி

இந்தியா ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கு முயன்று வருகிறது. இதனால் அதன் செயல்பாடுகள் குறித்துஅறிய இந்தியத் தூதர்களை உளவு பார்க்குமாறு ஹில்லாரி கிளிண்டன் உத்தரவிட்டதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக 2009ம் ஆண்டு ஜூலை 31ம்தேதி ஹில்லாரி அமெரிக்கத் தூதர்களுக்கு அனுப்பிய தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

இந்திய அணு ஆயுத ஒப்பந்தம், ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக எடுத்து வரும் முயற்சிகள் உள்ளிட்டவை குறித்து உளவு பார்க்குமாறு அதில் ஹில்லாரி அறிவுறுத்தியுள்ளார். இந்த பணியை தனது உளவு அமைப்புகளுக்கும் அவர் ஒதுக்கியுள்ளார்.

இந்தியா தவிர பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பினர் பதவிக்காக மோதி வருவதால் அவர்களையும் உளவு பார்க்க உத்தரவிட்டுள்ளார் ஹில்லாரி.

இதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபை விரிவாக்கத்தை எதிர்த்து வரும் மெக்சிகோ, இத்தாலி, பாகிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகள், ஐரோப்பிய யூனியன், ஐ.நா. பொதுச் செயலகத்தில் உள்ள சிலரையும் தனக்கு கூட்டு சேர்த்து செயல்பட்டுள்ளது அமெரிக்கா.

மேலும் அணி சேரா நாடுகள் கூட்டமைப்பு, ஜி77 கூட்டமைப்பு, இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு குறித்தும் அது உளவு பார்த்துள்ளது.

உலகத் தலைவர்களை கேவலமாக கிண்டலடித்த அமெரிக்கா

பிரான்ஸ் தொடங்கி ரஷ்யா வரை பல்வேறு நாட்டு தலைவர்களை ஏளனமாக பட்ட பெயர் சூட்டி அழைப்பது 'பெரியண்ணன்' அமெரிக்க ஸ்டைல் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. தனது நட்பு நாடுகளையும் கேவலமாகவே பார்த்து வந்துள்ளது அமெரிக்கா என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுதான் அமெரிக்காவுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானுடன் சவூதி அரேபியா நட்பு பாராட்டினாலும், உள்ளுக்குள் அதிபர் சர்தாரி மீது கடும் காழ்ப்புணர்ச்சியுடன் இருப்பதும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

பாக் பிரதமர் சர்தாரியை அழுகிப் போனவராக சவூதி மன்னர் அமெரிக்காவிடம் வர்ணித்துள்ளாராம். "பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு சர்தாரிதான் பெரும் இடையூறாக இருக்கிறார். தலையே அழுகிப் போனதாக இருந்தால், உடல் முழுவதையும் அது பாதிக்கத்தான் செய்யும்" என்று வர்ணித்துள்ளார் சவூதி மன்னர்.

இதுதவிர ‌‌பி‌ரி‌ட்ட‌ன் அரச குடு‌ம்ப‌த்தை சே‌ர்‌ந்த ஒருவ‌‌ரி‌ன் ஒழு‌ங்‌கீனமான செய‌ல்பாடுகளை ‌‌‌தின‌ந்தோறு‌ம் அமெ‌ரி‌க்க தூதரக அ‌திகா‌ரிக‌ள் வா‌ஷி‌ங்டனு‌க்கு அனு‌ப்‌பி வ‌ந்து‌ள்ளதும் அம்பலமாகியுள்ளது.

"லிபியா தலைவர் மொம்மர் அல் கடாபி பெண் பித்தர். யாரையும் நம்ப மாட்டார். எங்கு சென்றாலும் உக்ரைன் நர்ஸ் ஒருவருடன் செல்கிறார். நர்சுக்கும், இவருக்கும் அந்தரங்க தொடர்பு உள்ளது. ஐநா செல்ல உரிய நேரத்தில் நர்சுக்கு விசா கிடைக்கவில்லை. பின்னர், இருவரும் தனியாக விமானத்தில் ஐ.நா. சென்றனர்...", என அமெரிக்கா குறிப்பிட்டதும் அம்பலமாகியுள்ளது.

இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியை, "இவர் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்களை மறைக்க அடிக்கடி இரவு விருந்து அளிக்கிறார். இதனால், இவருக்கு ஓய்வே கிடையாது. இவர் மாடர்ன் ஐரோப்பிய உலகின் திறமையற்ற, ஆடம்பர தலைவர்.." என்றும் கூறியுள்ளனர்.

'டாக் புடின்'

மேலும் ர‌ஷ்ய ‌பிரதம‌ர் ‌விளாடி‌‌மி‌ர் பு‌‌தினு‌க்கு, 'அ‌ல்பா டா‌க்' என்ற நா‌யி‌ன் பெயரை (அடங்காத நாய்) அடையாள பெயராக கு‌றிப்பி‌ட்டு, மா‌ஸ்கோ‌வி‌ல் இரு‌ந்து அமெ‌ரி‌க்க தூதரக அதிகாரிகள் தகவ‌ல்க‌ள் ப‌‌ரிமா‌றி‌க் கொ‌ண்டது தெரிய வந்துள்ளது.

அத்துடன் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் சிக்கல்களை கையாளாமல் தவிர்ப்பவர் என்றும், ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் மனநிலை பிறழ்ந்தவர் என்றும், இதேபோல பல்வேறு உலகத் தலைவர்களுக்கு பல்வேறு பெயர்களையும் சூட்டி அமெரிக்கத் தரப்பு தகவல்களைப் பரிமாறிக் கொண்டுள்ளதாம்.

ஈரான் ஹிட்லர்

ஈரான்அதிபர் அகமதி நிஜாத்தை "ஹிட்லர்" என்ற பெயரில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் வர்ணித்து தகவல் அனுப்பியுள்ளனர்.

பிரான்ஸ் அதிபர் சர்கோஸிக்கு நிர்வாண ராஜா என்றும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் 2 க்கு எபிலெப்சி, லிபிய அதிபர் கடாபிக்கு ஹாட் பிளான்ட், ஜெர்மனி அதிபர் மெர்க்கலுக்கு டெப்லான், ஆப்கன் அதிபர் கர்சாய்க்கு பரோனியாவால் பாதிக்கப்பட்டவர் என பல கேவலமான அடைமொழிகளைச் சூட்டியுள்ளனர் தங்கள் தகவல் பரிமாற்றங்களின்போது.

பாகிஸ்தானிடம் தோற்ற அமெரிக்கா...

2009 ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்க தூதர் அன்னி பேட்டர்சன், இஸ்லாமாபாத்தை அணுகி, அமெரிக்க அணு ஆயுத நிபுணர்கள் பாகிஸ்தானுக்கு வருவதாக கூறியுள்ளார்.

ஆனால் அவர்கள் வருவது பாகிஸ்தானிய ஊடகங்களுக்குத் தெரிந்தால், பாகிஸ்தானின் ஆயுதங்களை அமெரிக்கா தனது கையில் எடுத்துக்கொள்வதாக செய்தி பரவி விடும் என்று கூறி அதனை ஏற்க மறுத்து தடுத்து விட்டதாம் பாகிஸ்தான்.

உண்மையில்,பாகிஸ்தான் அணு உலையில், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஏற்றுவதைத் தடுக்கவே அந்த நிபுணர் குழு வருவதாக இருந்தது. ஆனால் பாகிஸ்தானின் கடுமையான எதிர்ப்பு காரணமாக அமெரிக்காவின் முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டதாக அதில் குறிப்பிட்டுள்ளது விக்கிலீக்ஸ்.

சவூதி கோரிக்கையை அமெரிக்கா தட்டிக் கழித்தது ஏன்?

அதேபோல ஈரானின் அணு ஆயுத திட்டத்தால் பெரும் கவலை அடைந்த சவூதி அரேபிய அரசு, ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியதாம். இதுதொடர்பாக சவூதி மன்னர் அமெரிக்காவுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாராம்.

அதேசமயம், அல் கொய்தா அமைப்புக்கு தேவையான அனைத்து நிதிகளையும் சவூதி அரேபியாதான் தொடர்ந்து கொடுத்து வருவதாகவும் அமெரிக்காவுக்குத் தெரிய வந்துள்ளது. இதனால் சவூதி அரேபிய மன்னரின் கோரிக்கைகளை ஏற்காமல் அமெரிக்கா தட்டிக் கழித்ததாம்.

மேலு‌ம் ‌சீனாவு‌ட‌ன் இணை‌ந்து கொ‌ரிய ‌தீபக‌ற்ப‌த்‌தி‌ல் அமைதியை ‌‌நிலைநா‌ட்ட தெ‌ன் கொ‌ரியா மே‌ற்கொ‌ண்ட முய‌ற்‌சிகளை, அமெ‌ரி‌க்க உளவு‌த் துறை த‌டு‌த்து ‌நிறு‌த்‌தியது ப‌ற்‌றிய தகவ‌ல்களு‌ம் அதில் வெ‌ளி‌யி‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இதேபோ‌ன்று ஆ‌ப்கா‌‌னி‌ஸ்தா‌‌ன் துணை ‌பிரதம‌ர் சவூ‌தி ‌விமான‌ ‌நிலை‌‌த்‌தி‌ல் சுமா‌ர் 20 கோடி ரூபா‌ய் ம‌தி‌ப்புடைய அமெ‌ரி‌க்க டாலருட‌ன் ‌பிடி‌ப‌ட்டதும், ‌பி‌ன்ன‌ர் அமெ‌‌ரி‌க்கா தலை‌யி‌ட்டு அ‌ந்த ‌விவகார‌த்தை ‌‌தீ‌ர்‌த்து வை‌த்தது‌ம் ‌வி‌க்‌கி‌லீ‌க்‌‌‌ஸி‌‌ல் வெ‌ளியா‌கியு‌ள்ளது.

ஐரோப்பாவை பற்றி கவலையில்லை. மேற்கு நாடுகளை விட கிழக்கு நாடுகளை தேர்வு செய்கிறேன்’ என்று அமெரிக்க அதிபர் ஒபாமா பேசிய பேச்சும் கசிந்துள்ளது, பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவுக்கு.

கூகுளை ஊடுருவி உளவறிந்த சீனா...

இதேபோல கூகுள் நிறுவனத்தின் இணையதளத்திற்குள் ஊடுருவி அவற்றை செயலிழக்க வைக்க சீன அரசு உத்தரவிட்டதையும் அம்பலப்படுத்தியுள்ள விக்கிலீக்ஸ், அமெரிக்க அரசின் சில இணைய தளங்கள், மேற்கத்திய நாடுகளின் கம்ப்யூட்டர் கட்டமைப்பு, தலாய் லாமாவின் கம்ப்யூட்டர் கட்டமைப்பு, அமெரிக்க வர்த்தகத் துறையின் இணையதளம் ஆகியவற்றுக்குள்ளும் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் சீன அரசு ஊடுருவி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

விக்கிலீக்ஸின் இந்த ஆவணங்கள் உலகை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. தவிர மத்திய கிழக்கிலும் பதற்றமான நிலைமைக்கு வழி வகுத்திருக்கிறது. அத்துடன், ஈரானுக்கெதிரான தாக்குதல் அவசியம் எனக் கருதும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிலுள்ள கடும் போக்காளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்வதாக அமைந்திருப்பதாக சர்வதேச பத்திரிகைகள் குறிப்பிட்டுள்ளன.
 
இந்த பின்விளைவுகளை எதிர்ப்பார்த்துதான் 'விக்கிலீக்ஸை நம்பாதீர்கள்' என்று அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு குடியரசுகள், ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் இந்தியாவுக்கு தொடர்ந்து செய்தி அனுப்பி வந்தார்.

அமெரிக்காவின் இந்த டெக்னிக் இனி எடுபடுமா? சந்தேகம்தான். இப்போதே பல நாடுகள் அமெரிக்காவின் இந்த இரட்டை முகம் கண்டு முகம் சுளிக்க ஆரம்பித்துள்ளன. விக்கிலீக்ஸ் விவகாரத்தில் அமெரிக்கா குறித்து சம்பந்தப்பட்ட நாடுகளின் ரியாக்ஷன் என்னவென்பது வரும் நாட்களில் தெரியும்!

இந்திய அரசியலைக் கலக்கும் நீரா ராடியாவும், அரசியல் தொடர்புகளும்!!!!

Nira Radiaஇந்திய அரசியலைக் கலக்கி வரும் நீரா ராடியாவின் அரசியல் தொடர்புகள் தலையைச் சுற்ற வைக்கின்றன. அவருக்குத் தொடர்பு இல்லாத அரசியல் தலைவர்களோ, பிசினஸ் தலைவர்களோ இல்லை என்று கூறும் அளவுக்கு மிகப் பெரிய நெட்வொர்க்கின் பின்னணியில் செயல்பட்டுள்ளார் நீரா ராடியா

முன்பு இவரது பெயர் நீரா சர்மா. இவரது தந்தை விமானத் துறையில் இருந்தவர். இவரது கணவர் பெயர் ஜனக் ராடியா. இவரை விவாகரத்து செய்து விட்டார். இவர் மூலம் மூன்று மகன்கள் உள்ளனர். ஜனக் ராடியா இங்கிலாந்தைச் சேர்ந்த வர்த்தகர் ஆவர்.

லண்டனில் செட்டிலாவதற்கு முன்பு கென்யாவில் இருந்தார் நீரா. பின்னர் 70களில் லண்டன் சென்றார். அங்கு பள்ளிப் படிப்பையும், வார்விக் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பையும் முடித்தார்.

1995ம் ஆண்டு இந்தியா திரும்பினார். சஹாரா நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றினார். பின்னர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கேஎல்எம், யுகே ஏர் ஆகிய நிறுவனங்களின் இந்தியப் பிரதிநிதியாக பணியாற்றினார்.

2000மாவது ஆண்டு கிரவுன் ஏர் என்ற நிறுவனத்தைத் தொடங்கிஅதன் நிர்வாக இயக்குநராக இருந்தார். அவருடன் சகோதரி கருணா மேனன் பார்ட்னராக சேர்ந்தார்.

2001ல்தான் தற்போது நடத்தி வரும் வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர் நோயஸிஸ், விக்டம், நியூகான் கன்சல்டிங் ஆகியவற்றையும் தொடங்கினார். டாடா குழுமத்தின் 90 கணக்குகளை கையாளும் உரிமையைப் பெற்றார். 2008ல் இவரிடம் வந்து சேர்ந்தது ரிலையன்ஸ் நிறுவனம்.

2005ம் ஆண்டு மேஜிக் ஏர் என்ற விமான நிறுவனத்தைத் தொடங்கி முயற்சித்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இதற்குக் காரணம், இந்திய குடியுரிமை இவரிடம் இல்லாததால்.

டாடா நானோ பிரச்சினை சிங்கூரில் வெடித்து வெளிக் கிளம்பியபோது அதைத் தணிக்கும் முயற்சியில் பல மாதங்கள் தீவிரமாக ஈடுபட்டார். தற்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

வெறும் பிஆர் அதிகாரியாக இருந்து வரும் நீராவின் தொடர்புகளைப் பார்த்தால் மலைக்க வைக்கிறது. காற்று புக முடியாத இடத்திலும் கூட நீராவின் பேச்சு புகுந்திருப்பதை உணர முடிகிறது. அந்த அளவுக்கு பல்வேறு பிரமுகர்களுடனும் வெகு சரளமான தொடர்பைப் பராமரித்து வந்துள்ளார் நீரா.

இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபரான ரத்தன் டாடாவுடன் அவர் பேசிய பேச்சில், நமக்கு நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன். சவாலான தருணங்கள் வந்து கொண்டுள்ளன என்று படு கூலாக கூறியுள்ளார் நீரா.

உண்மையில் இப்போது நீராவுக்குத்தான் நேரம் சரியில்லை. ஆனால் இது அத்தோடு நிற்காது போலத் தெரிகிறது. ராடியா பல்வேறு பிரமுகர்களுடன் பேசியதொலைபேசி அழைப்புகளின் 5800 பதிவுகளை அமலாக்கப் பிரிவு தோண்டி துருவிக் கொண்டிருக்கிறது.

50 வயதுகளில் இருக்கும் நீரா பஞ்சாபைச் சேர்ந்தவர். இவரது தந்தை சர்மா கென்யாவில் வசித்து வந்தார். 70களில் லண்டனுக்கு இடம் பெயர்ந்தார். லண்டனில் இருக்கும்போதுதான் குஜராத்தைச் சேர்நத் ஜனக் ராடியாவை மணந்து கொண்டார் நீரா. பின்னர் அவர் மூலம் மூன்று மகன்கள் பிறந்த பின்னர் விவாகரத்து செய்து விட்டு இந்தியா திரும்பினார். நீராவின் மகன்களில் ஒருவரான கரண், கடந்த 2003ம் ஆண்டு இந்தியா மீடியாக்களில் பரபரப்பாக அடிபட்டவர் ஆவார். அப்போது நீராவின் பிசினஸ் பார்ட்னரான தீரஜ் சிங் என்பவரால் கரண் கடத்தப்பட்டார். தீரஜ் சிங், மறைந்த ஹரியானா முதல்வர் ராம் பிரேந்தர் சிங்கின் பேரன் ஆவார். அன்று முதலே மீடியா வெளிச்சத்தில் விழுந்தார் நீரா.

2003ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாயுடன் நெருங்கும் வாய்ப்பு நீராவுக்குக் கிடைத்தது. கர்நாடக மாநிலம் பெஜாவார் மடாதிபதியுடன் அவருக்கு ஏற்கனவேஅறிமுகம் இருந்ததால் அதை வைத்து வாஜ்பாயியின் மருமகன் ரஞ்சன் பட்டச்சார்யாவுடன் நெருங்கினார் நீரா.

அதேபோல பாஜகவைச் சேர்ந்த ஆனந்தகுமாரும்நீராவின்நெருங்கிய நண்பர் ஆவார். அப்போது ஆனந்த் குமார் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில்தான் ஆனந்த்குமாருடன் நீரா நட்பை ஏற்படுத்திக் கொண்டார். நேரடியாக ஆனந்த்குமாரை போய்ப் பார்க்கும் அளவுக்கு அவருடன் நட்பு கொண்டிருந்தார் நீரா. உண்மையில் ஆனந்த்குமார் மூலமாகத்தான் பெஜாவர் மடாதிபதியின் நட்பு கிடைத்தது நீராவுக்கு.

ஆனந்த்குமார் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது தனியாக ஒரு விமான நிறுவனத்தைத் தொடங்க கடுமையாக முயற்சித்தார் நீரா. ஆனால் அவருக்கு பிரிட்டிஷ் பாஸ்போர்ட் இருந்ததால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை. ஆனந்த்குமாருடன் நெருக்கமாக இருந்தபோதும் அது முடியாமல் போனது. இதேசமயத்தில்தான் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஒரு விமான நிறுவனத்தை தொடங்க கடுமையாக முயன்றார் ரத்தன் டாடா. அது தோல்வியிலேயே முடிந்தது. இதற்கு காரணம் ஒரு தனி நபர்தான் என்று சமீபத்தில் ரத்தன் குற்றம் சாட்டியிருந்தார். அது வேறு யாரும் அல்ல ஜெட் ஏர்வேஸின் நரேஷ் கோயல்தான். டாடா-சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் திட்டம் அனுமதி பெறாமல் நரேஷ் கோயல் தடுத்ததாக அப்போதே பலத்த குற்றச்சாட்டு இருந்தது. நரேஷ் கோயலின் வேலையால் நீராவும் பாதிக்கப்பட்டார்.

அதன் பின்னர்தான் டாடாவுடன் நெருங்கினார் நீரா. டாடா குழும மக்கள் தொடர்புப் பணிகள் நீராவிடம் சென்றன. நுஸ்லி வாடியாவின் சிபாரிசின் பேரிலேயே டாடாவிடம் நீரா இணைந்ததாக கூறப்படுகிறது. தனது குழுமத்தின் 90 கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொள்ளும் பணியை நீராவின் வைஷ்ணவி கம்யூனிகேஷனிடம் ஒப்படைத்தார் டாடா.

2001ல் டாடா குழுமம் பெரும் நிதி சிக்கலை சந்தித்தது. அதை சரி செய்து கொடுத்தவர் நீரா என்கிறார்கள். இதனால் டாடாவிடம் அவருக்கு பெரும் பெயர் கிடைத்தது. இந்த சமயத்தில்தான் பாஜக ஆட்சிக்கு வரும் வாய்ப்புகள் கூடி வந்தன. இதையடுத்து அரசியல்வாதிகளுடன் தனது தொடர்புகளை நெருக்கமாக்கிக் கொண்டார் நீரா. இந்த சமயத்தில் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கும்,டாடா குழுமத்திற்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் நீரா தலையிட்டார். டாடா குழுமத்தை யாராவது புறக்கணித்தால் அது டாடாவைப் பாதிக்காது, மாறாக, புறக்கணிப்பவர்களுக்கே அது பாதகமாக முடியும் என மீடியா நிறுவனங்களை எச்சரித்தார்.

2004ல் பாஜக ஆட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்னர் ராடியா புதிய நண்பர்களைத் தேடத் தொடங்கினார். அதில் அவருக்கு வெற்றியும் கிடைத்தது. ஏ.ராஜாவுடன் அவர் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அதேபோல ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நெருக்கமான மேலும் சிலருடனும் அவர் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். ரத்தன் டாடாமூலமாகத்தான் நீராவின் தொடர்பு ராஜாவுக்குக் கிடைத்ததாக கூறப்படுகிறது. 2007ம் ஆண்டு ராஜாவை வெகுவாகப் பாராட்டி முதல்வர் கருணாநிதிக்கு ரத்தன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். இதன் பின்னரே ராஜாவுடன் நீரா தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

சிங்கூர் போராட்டத்தின்போது முகேஷ் அம்பானி டாடா குழுமத்திற்கு பகிரங்க ஆதரவு அளித்தார். இதற்குப் பின்னணியில் நீரா இருந்ததாக கூறப்படுகிறது. நீராவின் முயற்சிகளைத் தொடர்ந்தே, டாடாவுக்கு ஆதரவாக முகேஷ் வாய் திறந்தார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்துடனும் அவருக்கு நெருக்கமான தொடர்புகள் ஏற்பட்டது. அதன் மக்கள் தொடர்புப் பணிகளையும் நீரா கவனிக்க ஆரம்பித்தார். அதேசமயம், அனில் அம்பானியின் வில்லியாக மாறிப் போனார். டாடா குழுமமும், ரிலையன்ஸும் இணைந்து வருடத்திற்கு ரூ. 30 கோடி கட்டணத்தை நீராவுக்குத் தருவதாக கூறப்படுகிறது.

இப்படி இந்தியாவின் பெரும் பெரும் புள்ளிகளுடன் வெகு சரளமானநட்பையும், தொடர்புகளையும் ஏற்படுத்தி வைத்திருந்த நீரா முன்பு இன்று ஏகப்பட்ட கேள்விகள் வரி சை கட்டி காத்துள்ளன. ஆனால் இதில் நீராவை மட்டும் சேர்த்துப் பார்க்க முடியாது. மிகப் பெரிய புள்ளிகள் எல்லாம் இதில் தொடர்பு கொண்டுள்ளனர். நீரா ஒரு கருவி மட்டுமே.ஆனால் அவரை முன்னிறுத்தியது, அவரை பயன்படுத்திக் கொண்டது யார் என்பதையும் சேர்த்துப் பார்த்தால்தான் இதன் விஸ்வரூபம் தெரிய வரும் என்கிறார் இந்த விவகாரத்தில் அனுபவமுடைய ஒருவர். மேலும் ஆடியோ டேப்புகளை கோர்ட்டில் ஆதாரமாக சமர்ப்பிக்க முடியாது. அதேசமயம், நீரா மிகப் பெரிய சிக்கலில் உள்ளார் என்பது மட்டும் உண்மை என்றும் அவர் கூறுகிறார்.

எனவே நீரா ராடியாவுக்கு மிகப் பெரிய மிக நீண்ட சட்டப் போராட்டம் காத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

29 November 2010

உடல் நலம் குன்றிய நிலையிலும் ரயிலை செலுத்திய நிலையத்தை அடைந்த பின் மரணம்.

கொல்கத்தா: கொல்கத்தாவில் ரயில் ஓட்டுநர் ஒருவர் ரயிலை ஓட்டிக் கொண்டிருக்கும்போதே உடல்நலக் குறைவு ஏற்பட்டும் சாமர்த்தியமாக செயல்பட்டு ரயிலை போய்ச் சேர வேண்டிய இடத்திற்கு ஓட்டிச் சென்றார். ஸ்டேஷனை அடைந்த பின்னர் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது பெயர் டி.என்.மைத்ரா (56). ஹவ்ரா-பன்ஸ்குரா ரயிலை இன்று காலை 7. 30 மணிக்கு பன்ஸ்குரா ரயில் நிலையத்திற்கு ஓட்டி வந்தார். பின்னர் ரயில் கார்டிடம் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த தகவலை தென் கிழக்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

அப்போது அவருக்கு திடீர் என்று அதிகமாக வியர்த்துள்ளது. உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மைத்ரா வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

ரயிலை ஓட்டிக் கொண்டு வந்தபோதே அவருக்கு உடல் நலம் சரியில்லை. இருப்பினும் மிகவும் சாமர்த்தியமாக ரயிலை பன்ஸ்குரா வரை ஓட்டிக் கொண்டு வந்தவர், அங்கு உடல் நலம் மோசமாகி உயிரிழந்துள்ளார்.

விக்கிலீக்ஸ் பரபரப்பு தகவல்!

வாஷிங்டன்: பாகிஸ்தானின் அணு ஆயுதத்திட்டத்தை முடக்க முயன்று அமெரிக்கா தோல்வி அடைந்ததாக விக்கிலீக்ஸ் இணையதளம் பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா தொடர்பான பல்வேறு ராணுவ மற்றும் தூதரக ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது விக்கிலீக்ஸ்.இந்த நிலையில் பாகிஸ்தான், சீனா, சவூதி அரேபியா, ரஷ்யா, ஜெர்மனி தொடர்பான பல முக்கிய தகவல்களை அது வெளியிட்டுள்ளது.
Wikileaks Logo

பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டம்:

பாகிஸ்தானின் அணு ஆயுதத் திட்டத்தை முடக்க முயன்று அமெரிக்கா அதில் தோல்வி அடைந்ததாக ஒரு தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

2009ம் ஆண்டு மே மாதம் அமெரிக்க தூதர் அன்னி பேட்டர்சன், இஸ்லாமாபாத்தை அணுகி, அமெரிக்க அணு ஆயுத நிபுணர்கள் பாகிஸ்தானுக்கு வருவதாக கூறியுள்ளார். ஆனால் அதை ஏற்க பாகிஸ்தான் அரசு மறுத்து விட்டது.

இதுகுறித்து பாகிஸ்தான் தரப்பில் கூறுகையில், அவர்கள் வருவது பாகிஸ்தானிய மீடியாக்களுக்குத் தெரிந்தால், பாகிஸ்தான் அணு ஆயுதங்களை அமெரிக்கா தனது கையில் எடுத்துக்கொள்வதாக செய்தி பரவி விடும் என்று கூறி தடுத்து விட்டனர்.

உண்மையில்,பாகிஸ்தான் அணு உலையில், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஏற்றுவதைத் தடுக்கவே அந்த நிபுணர் குழு வருவதாக இருந்தது. ஆனால் பாகிஸ்தானின் கடுமையான எதிர்ப்பு காரணமாக அமெரிக்காவின் முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டனவாம்.

கூகுளை ஹேக் செய்ய உத்தரவிட்ட சீனா:

இதேபோல கூகுள் நிறுவனத்தின் இணையதளத்திற்குள் புகுந்து அவற்றை செயலிழக்க வைக்க சீனாவின் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ உத்தரவிட்டதாக இன்னொரு செய்தியை விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் கூகுள் நிறுவன கம்ப்யூட்டர் கட்டமைப்புக்குள் புகுந்து அவற்றை செயலிழக்க முயற்சித்தது சீனா. சீன அரசுடன் ஒத்துப் போக கூகுள் முன்வராததால் ஆத்திரத்தில் இதை செய்தது சீனா. இதற்காக ஹேக் செய்வதில் நிபுணர்களான தனியார்கள், அரசு அமைப்புகள் என பலரையும் பணியர்த்தியது சீன அரசு.

மேலும் அமெரிக்க அரசின் சில இணையதளங்கள், மேற்கத்திய நாடுகளின் கம்ப்யூட்டர் கட்டமைப்பு, தலாய் லாமாவின் கம்ப்யூட்டர் கட்டமைப்பு, அமெரிக்க வர்த்தகத் துறையின் இணையதளம் ஆகியவற்றுக்குள்ளும் கடந்த 2002ம் ஆண்டு முதல் ஊடுறுவி வந்துள்ளது சீன அரசு.

ஈரானை தாக்கக் கோரிய சவூதி அரேபியா:

அதேபோல ஈரானின் அணு ஆயுத திட்டத்தால் பெரும் கவலை அடைந்துள்ள சவூதி அரேபிய அரசு, ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. இதுதொடர்பாக சவூதி மன்னர் அமெரிக்காவுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தாராம்.

அதேசமயம், அல் கொய்தா அமைப்புக்கு தேவையான அனைத்து நிதிகளையும் சவூதி அரேபியாதான் தொடர்ந்து கொடுத்து வருவதாகவும் அமெரிக்காவுக்குத் தெரிய வந்துள்ளது. இதனால் சவூதி அரேபிய மன்னரின் கோரிக்கைகளை ஏற்காமல் அமெரிக்க நிர்வாகம் தாமதப்படுத்தி வருகிறதாம்.

பாகிஸ்தானுடன் நட்புடன் இருப்பது போல காட்டிக் கொள்ளும் சவூதி அரேபிய அரசு சர்தாரி மீது கடும் காழ்ப்புணர்ச்சியுடன் இருப்பதையும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. சர்தாரியை அழுகிப் போனவராக சவூதி மன்னர் அமெரிக்காவிடம் வர்ணித்துள்ளாராம். இதுகுறித்து சவூதி மன்னர் கூறுகையில், பாகிஸ்தானின் வளர்ச்சிக்கு சர்தாரிதான் பெரும் இடையூறாக இருக்கிறார். தலையே அழுகிப் போனதாக இருந்தால், உடல் முழுவதையும் அது பாதிக்கத்தான் செய்யும் என்று வர்ணித்துள்ளார் சவூதி மன்னர்.

'நிர்வாண ராஜா' சர்கோஸி!:

இதேபோல பல்வேறு உலகத் தலைவர்களுக்கு பல்வேறு பெயர்களையும் சூட்டி அமெரிக்கத் தரப்பு தகவல்களைப் பரிமாறிக் கொண்டுள்ளதாம்.
  Read:  In English
ஈரான்அதிபர் அகமதிநிஜாத்தை அமெரிக்க தரப்பு ஹிட்லர் என்ற பெயரில் வர்ணித்து வருவதாகவும், ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினை ஆல்பா டாக் என்று வர்ணிப்பதாகவும் விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

இதேபோல பிரான்ஸ் அதிபர் சர்கோஸிக்கு நிர்வாண ராஜா, வடகொரிய அதிபர் கிம் ஜோங் 2க்கு எபிலெப்சி, லிபிய அதிபர் கடாபிக்கு ஹாட் பிளான்ட், ஜெர்மனி அதிபர் மெர்க்கலுக்கு டெப்லான், ஆப்கன் அதிபர் கர்சாய்க்கு பரோனியாவால் பாதிக்கப்பட்டவர் என பெயரிட்டுள்ளனர்.

28 November 2010

தென் கொரியாவுன் அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி.

North Korean Missiles

இயோன்பியாங்: வட கொரியா, தென் கொரியா இடையிலான பதட்ட நிலை மேலும் அதிகரித்துள்ளது. தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கப் படைகள் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதைத் தொடர்ந்து தனது பகுதிக்குள் ஏவுகணைகளை தயார் நிலையில் வைக்கத் தொடங்கியுள்ளது
வட கொரியா.
தென் கொரிய தீவு மீத வட கொரியா திடீர்  பீரங்கித் தாக்குதல் நடத்தி 2 ராணுவ வீரர்களைக் கொன்றது. இந்தத் தாக்குதலில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இதனால் ஆத்திரமடைந்த தென் கொரியாவும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த மோதலால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் தற்போது அமெரிக்காவும் மூக்கை நுழைத்துள்ளது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அது களம் இறங்கியுள்ளது. தென் கொரியாவுடன் இணைந்து அமரிக்கப் படைகள் கூட்டு ராணுவப் பயிற்சியி்ல் இறங்கியுள்ளன.இதையடுத்து மஞ்சள் கடல் பகுதியில் தனது நிலம் தரையிலிருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணைகளை நிறுத்தி வைக்க ஆரம்பித்துள்ளது வட கொரியா.
இந்த நிலையில் பிரச்சினையைத் தணித்து அமைதியை நிலை நாட்ட முயற்சிக்கப் போவதாக சீனா கூறியுள்ளது.இதுதொடர்பாகதென் கொரிய அதிபர் லீ மியூங் பாக்கை சீனக் குழு சந்தித்துப் பேசியது.

கொரிய பிரச்சினையில் இதுவரை சீனா நேரடியாக தலையிட்டதில்லை. அதேசமயம், வட கொரியாவின் அத்துமீறல்களை அது கண்டித்ததும் இல்லை. ரஷ்யாவைப் போல வட கொரியாவின் பக்கமே சீனாவும் நிற்பதாக குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் இதை சீனா எப்போதும் மறுத்தே வந்திருக்கிறது. ஆனால் தற்போதையநெருக்கடியான நிலையில், வட கொரியாவுக்கு சீனா அறிவுரை கூறி அடக்கி வைக்க வேண்டும் என்று தென் கொரியா வலியுறுத்தியுள்ளது.

இந்தப் பின்னணியில் தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சியில் இறங்கியுள்ளதால் போர் மூளும் சூழ்நிலை அதிகரித்துள்ளது.