நியூயார்க்: விரைவான செயல்பாடு மற்றும் இன்டர்நெட் பக்கங்களை அதி வேகமாக லோட் செய்வதில் ஆப்பிளின் ஐபோன் 4-ஐ மிஞ்சிவிட்டது கூகுளின் ஆண்ட்ராய்ட் நெக்சஸ் ஸ்மார்ட்போன் என அறிவித்துள்ளது பிரபல சாப்ட்வேர் நிறுவனம்.
செல்போன் உலகில் மிக உயர்ந்த அந்தஸ்தை அனுபவித்து வருகிறது ஆப்பிளின் ஐ போன் 4 மாடல். ஆனால் இந்த செல்போனை விட சிறந்ததாக கூகுளின் ஆன்ட்ராய்ட் நெக்சஸ் ஸ்மார்ட்போன் வந்துவிட்டது.
இதுகுறித்து கனடாவின் பிரபல சாப்ட்வேர் நிறுவனமான பிளேஸ் சாப்ட் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதில் ஐபோனை விட, ஆன்ட்ராய்ட் போன் இன்டர்நெட் செயல்பாட்டில் அதிக வேகம் கொண்டதாக தெரிய வந்துள்ளது. ஐபோனை விட ஆன்ட்ராய்ட் போன் 84 சதவீதம் அதிக வேகமாக இன்டர்நெட் பக்கங்களைத் திறப்பதாக ப்ளேஸ் தெரிவித்துள்ளது.
வயர்லெஸ் நெட்வொர்க்கில் ஆப்பிள் போனை விட ஆன்ட்ராய்ட் போன் 52 சதவீதம் அதிக வேகத்தில் இயங்குவதாகவும் தெரிய வந்துள்ளது.
வேகமான இன்டர்நெட் செயல்பாடு குறித்து ஆப்பிள் கவலைப்படவில்லை. ஆனால் கூகுள் அந்த விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்துகிறது என மேலும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேபோல, இணையதள இயங்கிகளில், ஆப்பிளின் சபாரியைவிட, கூகுள் க்ரோம் பல மடங்கு அதிக வேகத்துடன் செயல்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment