டெல்லி: நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் பல்வேறு வழக்குகளால் ரூ 1.50 லட்சம் கோடி வரி வசூல் முடங்கிக் கிடப்பதாக இந்திய தலைமை கணக்கு அதிகாரி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த தொகை, அதற்கு முந்தைய ஆண்டு முடங்கிய தொகையை (ரூ.50 ஆயிரத்து 890 கோடி) விட 5 மடங்குக்கும் அதிகம்.
இவற்றில் ரூ.2.2 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட வரி பாக்கி தொடர்பான வழக்குகள், தீர்ப்பாயங்களிலும், மீதி பாக்கி தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ளன.
இவற்றில், ரூ.1 லட்சத்து 31 ஆயிரம் கோடி வரிபாக்கி தொடர்பான வழக்குகள், 5 ஆண்டுகளுக்கும் குறைவாக நிலுவையில் உள்ள வழக்குகள். மீதி 8 ஆயிரத்து 417 கோடி வரிபாக்கி தொடர்பான வழக்குகள், 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன.
கடந்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி, உற்பத்தி வரி வசூல் பாக்கியை வசூலிப்பது தொடர்பாக கோர்ட்டுகளில் 50 ஆயிரத்து 657 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதன் மூலம் வசூலாகாமல் உள்ள தொகை மட்டும் ரூ 3.1 லட்சம் கோடி. இந்தியாவின் கார்ப்பொரேட் வரி வசூலை விட அதிகம் (கார்ப்பொரேட் வரி வசூலே ரூ 2.4 லட்சம் கோடிதான்!). ஆண்டு வருமான வரி வசூலை விட இரண்டரை மடங்கு அதிகம் (மொத்த வருமான வரி வசூல் ரூ 1.31 லட்சம் கோடிதான்!)
No comments:
Post a Comment