டெல்லி: முன்னாள் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 81.பல்வேறு உடல் நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த அர்ஜூன் சிங் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று மாலை அவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவரான அர்ஜூன் சிங், மத்தியப் பிரதேச முதல்வர், மத்திய அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்தவர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்.
முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் திக்விஜய் சிங், அமேதி தொகுதியின் முன்னாள் எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோர் அர்ஜூன் சிங்கின் நெருங்கிய உறவினர்கள் ஆவர்.
மறைந்த பி.வி. நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது அர்ஜூன் சிங் அமைச்சராக இருந்தார். ஆனால் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்திற்குப் பின்னர் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் அவர் காங்கிரஸிலிருந்து விலகினார். என்.டி.திவாரியுடன் சேர்ந்து திவாரி காங்கிரஸை உருவாக்கினார். பின்னர் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.
மத்தியப் பிரதேச முதல்வராக 3 முறையும், மத்திய அமைச்சராக இருமுறையும், பஞ்சாப் மாநில ஆளுநராக ஒருமுறையும் இருந்தவர் அர்ஜூன் சிங். இரு முறையும் இவர் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மாநில ஆளுநராக இவர் இருந்தபோதுதான் ராஜீவ்-லோங்கோவால் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. 2000மாவது ஆண்டு சிறந்த நாடாளுமன்றவாதியாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆண்டர்சனை தப்ப விட்டவர்!
அர்ஜூன் சிங் மத்தியப் பிரதேச முதல்வராக இருந்தபோதுதான், போபாலில் விஷவாயுக் கசிவு சம்பவம் நடந்து பல ஆயிரம் பேர் உயிரைப் பறித்தது. அந்த சமயத்தில் யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சனை பத்திரமாக இந்தியாவிலிருந்து தப்ப உதவியவர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போபால் நகரை விஷவாயு தாக்கிய அந்த நாளில், அதிலிருந்து தப்புவதற்காக நகரை விட்டு வெளியேறி தனக்குச் சொந்தமான கேர்வா டாம் அரண்மனைக்குப் போய் தங்கினார் அர்ஜூன் சிங் என்ற குற்றச்சாட்டும் அப்போது எழுந்தது.
பூலான் தேவியை சரணடைய வைத்தவர்
நாட்டையே அதிர வைத்த பிரபல கொள்ளைக்காரி பூலான் தேவி, ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரணடைய முன்வந்தபோது அப்போதைய ம..பி முதல்வராக இருந்த அர்ஜூன் சிங் முன்னிலையி்ல்தான் சரணடைய விருப்பம் தெரிவித்தார். அதேபோல அர்ஜூன் சிங் முன்புதான் அவர் ஆயுதங்களைப் போட்டு சரணடைந்தார் பூலான் தேவி.
பூலான் தேவி சரணடையும் விவகாரத்தில் முக்கியப் பங்காற்றியவர் அர்ஜூன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
இட ஒதுக்கீட்டுக்காக பாடுபட்டவர்
அர்ஜூன் சிங் மீது பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் கூட இந்தியாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக அவரும் விளங்கினார். குறிப்பாக பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் மிகவும் முக்கியமான பங்காற்றியவர் அர்ஜூன் சிங்.
அரசு உதவி பெறாத தனியார்ர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற சட்ட மசோதாவைக் கொண்டு வந்தவர் அர்ஜூன் சிங். மேலும் ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் அர்ஜூன் சிங். மேலும், அர்ஜூன் சிங், மன்மோகன் சிங் அமைச்சரவையில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது 32 மத்திய கல்வி நிலையங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டு வந்த பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 100க்கும் மேற்பட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் செயல்படுத்த முயற்சி எடுத்து வந்தார்.
தனது இறுதிக் காலத்தில் காங்கிரஸ் தலைமையுடன் அவர் ஒத்துப் போக முன்வராததால் கட்சியால் கிட்டத்தட்ட கைவிடப்பட்டார். அரசியலிருந்தும் ஒதுங்கினார்.
காரியக் கமிட்டியிலிருந்து நீக்கியதும் மரணம்
இன்று பிற்பகலில்தான் காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர் பொறுப்பிலிருந்து அர்ஜூன் சிங்கை நீக்கியிருந்தனர். இந்த நிலையில் மாலையில் அவர் மரணமடைந்துள்ளார்

No comments:
Post a Comment