31 March 2011

இறுதி வேட்பாளர் பட்டியல்: தேர்தல் களத்தில் 2,773 வேட்பாளர்கள்.


சென்னை: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இறுதியாக தேர்தல் களத்தில் 2,773 வேட்பாளர்கள் உள்ளனர்.

தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 19ம் தேதி தொடங்கியது. மார்ச் 26ம் தேதி மனு தாக்கல் முடிந்தது. மொத்தம் 4,228 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் அனைத்தையும் பரிசீலிக்கும் பணி திங்கள்கிழமை நடந்தது. இதில் 1,153 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இந் நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெற புதன்கிழமை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. 313 வேட்பு மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன.

இதையடுத்து தேர்தல் களத்தில் 2,773 வேட்பாளர்கள் உள்ளனர்.

அதிகபட்சமாக, சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 31 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் தொகுதியில் 4 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

திருப்பூர் வடக்குத் தொகுதியில் மொத்தமாக 151 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், 81 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 60 பேர் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர். அந்தத் தொகுதியில் 10 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

No comments: