15 March 2011

உலகின் இளம் வயது சிஇஓ-வாக மாறி 14 வயது சென்னை சிறுமி சாதனை.


Sindhuja Rarajaramanசென்னை: உலகிலேயே மிகவும் இளம்வயதில் தலைமை செயலதிகாரி பதவியை வகிக்கும் பெருமையை சென்னையைச் சேர்ந்த 14 வயது சிறுமி சிந்துஜா ராஜாராமன் பெற்றுள்ளார்.

9வது வகுப்பு படித்து வரும் இவர் அனிமேஷன் திரைப்படங்கள் தயாரிக்கும் செப்பன் கம்பெனி என்ற நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிறுவனம், இவரது தந்தை உருவாக்கியதாகும்.

2010ம் ஆண்டு அக்டோபர் முதல் தலைமை செயலதிகாரியாக செயல்பட்டு வருகிறார் சிந்துஜா.

நாஸ்காம் நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டு ஹைதராபாத்தில் நடத்திய விளையாட்டு அனிமேஷன் போட்டியில், அதி விரைவாக 2டி மற்றும் 3டி படங்களை உருவாக்கி சாதனை படைத்தவர் சிந்துஜா.

இதுகுறித்து சிந்துஜாகூறுகையில், எனக்கு இப்பதவி கிடைத்துள்ளதன் மூலம் நான் பெரும் மேதை என்று நினைத்து விடவில்லை. அனிமேட்டராக நான் இன்னும் நிறைய கற்க வேண்டியுள்ளது.

தற்போது சிஇஓ பதவி கிடைத்துள்ளதன் மூலம் என்னை நான் மேலும் பட்டை தீட்டிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துள்ளேன். அனிமேஷன் யாருக்கும் கை கூடி வரக் கூடிய கலையாகும். இதற்கு வயது வித்தியாசம் இல்லை என்றார்.

சிந்துஜா தலைமை செயலதிகாரியாக செயல்படும் செப்பன் கம்பெனியில் 160 பேர் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: