வெளிநாடு வாழ் இந்தியர்கள் 5 மாநிலங் களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க முதன்முறையாக அனுமதிக்கப்பட உள்ளனர். எனினும் தங்க ளது வாக்குகளை இந்தியாவில் அவர்களின் சொந்த ஊரில் நேரில் வந்துதான் வாக்க ளிக்க வேண்டும்.
இதுதொடர்பாக வெளியுறவு மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் அமைச் சகங்களுடன் பலசுற்றுப் பேச்சுவார்த்தை களுக்குப் பிறகு என்.ஆர்.ஐக்களின் பெயர் களைச் சேர்ப்பதற்கான விதிமுறைகள் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது.
வேறு எந்த நாட்டிலும் குடியுரிமை இல்லாத, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் பாஸ்போர்ட்டில் கொடுத்துள்ள முகவரி உள்ள தொகுதியின் தேர்தல் பதிவு அதிகாரியிடம் படிவம் 6ஏ&ல் விண் ணப்பிக்கலாம் என வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகாரங்கள் தறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார்.
6 மாதங்களுக்கு மேல் வெளிநாட்டில் தங்கியிருந்தாலும் இந்தியாவில் தேர்தலில் வாக்களிக்க என்.ஆர்.ஐக்கள் முதன்முறையாக இந்த 5 மாநிலத் தேர்தல்களில்தான் அனும திக்கப்பட உள்ளனர் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
முந்தைய விதிமுறைகளின்படி 6 மாதங் களுக்கு மேல் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிடும்.
தங்களுக்கும் வாக்குரிமை வேண்டும் என்று வெளிநாடுவாழ் இந்தியர்கள் நீண்ட காலமாக கோரி வந்தனர். அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக பிரதமர் மன்மோகன் சிங்கும் கடந்த ஆண்டு உறுதி அளித்திருக்கிறார்.
வாக்காளர் பட்டிலில் பெயரைச் சேர்க்க என்.ஆர்.ஐக்கள் தேர்தல் அதிகாரிகளிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். தபால் மூலம் விண்ணப்பிக்கும்போது பாஸ்போர்ட்டின் நகல் மற்றும் சில ஆவணங்களை இந்திய தூதரக அதிகாரியின் கையொப்பம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
பெயரை சேர்த்த பிறகு தங்கள் பெயர் உள்ள தொகுகதியில் நேரிடையாகச் சென்று வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:
Post a Comment