புதுடில்லி: நாட்டில் மிக பொறுப்பான , அதிக நேர்மைக்கு உகந்த பதவியான இந்திய தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் நிலை சுப்ரீம் கோர்ட் வரை சென்று மத்திய அரசுக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறது. இவரது நியமனம் சட்ட விரேதாமானது என்றும் , இவர் நியமனத்தில் சட்டமீறல்கள் நடந்திருப்பதோடு மேல்மட்ட அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வருகிறது என்றும் , இந்த பொறுப்பில் அவர் நீடிக்க தகுதி இல்லையென்றும் சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நான் பதவி விலக வேண்டியதில்லை என்று கூறி வந்த தாமஸ் இன்று காலையில் அவசர, அவசரமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கேரளாவுக்கு பாமாயில் இறக்குமதியில் ஊழல் : தற்போது தலைமை ஊழல் கண்காணப்பு ஆணையராக இருந்து வரும் பி.ஜே., தாமஸ் கேரளாவில் உணவு துறை செயலராக இருந்தபோது ஊழல் செய்தார் என்பது குற்றச்சாட்டு. இவரது காலத்தில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாமாயில் விவகாரத்தில் பல கோடிக்கணக்கில் சுருட்டினார்.
இதனால் இவரை இந்த பொறுப்பில் நீடிக்க கூடாது என்றும் அவர் எப்படி நியாமான ஊழல் அதிகாரியாக செயல்பட முடியும் என்று கேள்வி எழுப்பி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் இந்த பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட வேண்டும். இவரை சட்ட விரோதமாக நியமனம் செய்தது செல்லாது என்றும் தீர்ப்ளித்தது. பிரதமர் தலைமையிலான உயர் மட்டக்குழுவினர் இவர் மீதான நிலுவை வழக்கை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை, இந்த பரிந்துரைகள் கவனமாக கையாளப்படாததையே காட்டுகிறது. வரும் காலத்தில் இது போன்று நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் இதற்கான சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இதனையடுத்து பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் உயர் அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி பிரதமரை சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து தாமஸ் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு முறைகேடு சர்ச்சை நடந்த போது, தொலைத் தொடர்பு செயலராக இருந்த பி.ஜே.தாமசை அது தொடர்பான விசாரணை நடக்கும் போது, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்க முடியும் என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவை நான் மதிக்கிறேன் என பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக பார்லி., கூட்டத்தில் விளக்கமளிக்கவுள்ளதாகவு்ம அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment