லண்டன்: பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 17 வயது ஜன்ரே பாலாவிங் விரைவில் உலகின் மிகச் சிறிய மனிதர் என்று பட்டம் பெறவிருக்கிறார்ர்.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஜன்ரே பாலாவிங் (17). அவரது உயரம் வெறும் 22 இன்ச் தான். 17 வயது வாலிபன் ஒரு வயது குழந்தையின் அளவு தான் இருக்கிறார். வரும் ஜூன் மாதம் தனது 18-வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். நடக்க சிரமப்படும் அவரால் நீண்ட நேரம் நிற்க முடியாது. எனினும் உலகின் மிகச் சிறிய மனிதர் என்ற பட்டத்தைப் பெறுவதை பெருமையாகக் கருதுகிறார்.
ஜன்ரேவின் தாயார் கன்சப்சியன் (35). அவர் தனது மகனுக்கு 2 வயதானபோது தான் அவனிடம் ஏதோ குறை இருப்பதையே கண்டுபிடித்தார். ஆனால் எந்த மருத்துவராலும் அவருக்கு உதவ முடியவில்லை.
அவனுக்கு எப்பொழுதும் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. அவன் வளரவும் இல்லை. அதனால் மருத்துவரிடம் கொண்டு சென்றோம். அவனைப் பார்த்து மருத்துவரே குழம்பிவிட்டார் என்று கன்சப்சியன் தெரிவித்தார்.
ஜன்ரேவுக்கு 12 வயது ஆனபோது மீண்டும் மருத்துவரிடம் கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் நிறைய புரோட்டீன் கொடுக்குமாறு கூறினார். ஆனால் வறுமை காரணமாக ஜன்ரேவுக்கு போதிய புரோட்டீன் கொடுக்க முடியவில்லை.
ஜன்ரேவை வீட்டில் விட்டுவிட்டு என்னால் வேலைக்கு செல்ல முடியாது. அவனைப் பார்த்துக் கொள்ள ஒரு ஆள் எப்பொழுதும் இருக்க வேண்டும். அவனால் மற்றவர்கள் உதவியுடன் தான் நடக்க முடியும். அவனால் நீன்ட நேரம் நிற்க முடியாது. அவன் வலியுடனேயே வாழ்கிறான். அவன் விரைவில் உலகின் மிகச் சிறிய மனிதனாகப் போகிறான் என்று நான் சொன்னபோது பெருமையுடன் சிரித்தான் என்கிறார் அந்த தாய்.
கின்னஸ் புத்தக்த்தின் படி தற்போதைய உலகின் மிகச் சிறிய மனிதரான கொலம்பியாவைச் சேர்ந்த ஹெர்னான்டஸ்(24) 27 இன்ச் உயரமானவர். இவருடன் ஒப்பிடுகையில் ஜன்ரே அளவு 5 இன்ச் குறைவு
No comments:
Post a Comment