ராமநாதபுரம்: ஓட்டளிக்க வரும் போது சோர்வடையும் வாக்காளருக்கு தெம்பு ஊட்டும் விதமாக, அனைத்து தொகுதிக்கும் "குளூகோஸ்' வினியோகம் தொடங்கி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. ஏப்.,13ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. வாக்காளருக்கு தேவையான வசதிகள் செய்து தருவதில் தேர்தல் கமிஷன் இம்முறை அக்கறையாக உள்ளது. வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் ஏப்ரலில் இன்னும் உக்கிரமாக இருக்கும். இதனால் வரிசையில் நின்று ஓட்டளிக்க வரும், வாக்காளர்கள் எளிதில் சோர்வடைய வாய்ப்புள்ளது. கடந்த தேர்தல்களில் நிறைய பேர் மயக்கம் அடைந்த சம்பவங்களும் நடந்துள்ளன. இதை தடுக்கும் வகையில் வாக்காளருக்கு தெம்பூட்டும் "குளூகோஸ்' (உப்பு-சர்க்கரை கரைசல்) வழங்கப்படுகிறது. பற்றாக்குறை இல்லாத வகையில், வாக்காளருக்கு போதிய அளவு "குளூகோஸ்' வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முன் கூட்டியே அனைத்து தொகுதிக்கும் "குளூகோஸ்' பெட்டிகள் அனுப்பபட்டுள்ளன. தொகுதி தேர்தல் அலுவலர் மூலம் சம்மந்தப்பட்ட "பூத்'களுக்கு அவை வினியோகம் செய்யப்படும்.
No comments:
Post a Comment