படித்தவர்கள் மத்தியிலேயே இன்னமும் இன்சூரன்ஸ் பற்றிய விழிப்புணர்வு பெரிய அளவில் ஏற்பட வில்லை என்பதுதான் வேதனையான அதை சமயத்தில் உண்மையான உண்மை. தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ் பற்றி 10 பேரிடம் கேட்டால் ஒருவருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது இந்த தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ்.
தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ்
சாலை விபத்தில் வாகனங்கள் மோதினால் அந்த வாகனத்துக்கு செய்யப்பட்ட தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ் மூலம் க்ளைம் பெறலாம். இதன் மூலம் நாம் இன்சூரன்ஸ் செய்திருந்தால் மட்டுமே க்ளைம் செய்யமுடியும் என்பதெல்லாம் இல்லை.
இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் :அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் க்ளைம் கொடுக்காது. ஏனென்றால் அந்த விபத்துக்களுக்கு போக்குவரத்து கழகமே க்ளைம் தரும். மற்றபடி தனியார் வாகனங்கள் மோதினால் அந்த வாகன உரிமையாளர் எந்த நிறுவனத்தில் தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ் எடுத்திருக்கிறாரோ அந்த நிறுவனம் க்ளைம் தரும். அப்படி ஒரு வேலை அவர் தரவில்லை என்றால் வாகன உரிமையாளர்தான் தரவேண்டும்
விபத்து நடந்தவுடன் க்ளைம் பெற என்ன செய்ய வேண்டும்?
விபத்து நடந்ததை முதலில் காவல் நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும். பிறகு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதா எனக் கவனித்து அந்த எப்.ஐ.ஆர் ஐ பெற வேண்டும்.
விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் எண், உரிமையாளர் பெயர், அவரது தொலைபேசி எண், இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதா என்பன போன்ற தகவல்களைத் திரட்ட வேண்டும். எஃப் . ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டால் அவர்களே இந்த விபரங்களைப் பெற்றுவிடுவார்கள். அவர்களிடம் இருந்தேபெற்றுக்கொள்ளலாம்.
விபத்து நடந்த இடத்தில் இரண்டு பேரை சாட்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களுடைய பெயர், முகவரி கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
விபத்தை பற்றி செய்திதாள்களில் வந்தால் அதனை சேகரித்துக் கொள்ளுங்கள்.
விபத்து நடத்தும் காவலர்கள் அந்த இடத்தை சாக்பீசால் வரைந்து இருப்பார்கள். அதனை போட்டோ எடுத்துக்கொள்ளுங்கள்.
விபந்து நடந்ததால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, தற்போதைய மற்றும் எதிர்கால வருமான இழப்புகள், மன உளைச்சல் , மருத்தவ செலவு(சிகிச்சைக்கான மருத்துவ பில்கள்) இதர செலவுகள் என அனைத்தையும் குறிப்பிட்டு க்ளைம் கேட்டு ட்ரிப்யூனலில் வழக்கு தொடர வேண்டும்.
விபத்து நடந்து எத்தனை வருடம் கழித்தும் க்ளைம் பெற விண்ணப்பிக்கலாம்
இந்தியாவில் எந்த பகுதியில் விபத்து நடந்தாலும் க்ளைமைப் பெற முடியும்.
நஷ்டஈட்டுத் தொகை எத்தனை லட்சங்கள் என்றாலும் பெற முடியும்.
வாகன விபத்து க்ளைம் ட்ரிப்யூனலில் மட்டுமே க்ளைம் பெற முடியும். அந்த ட்ரிப்யூனல் வழங்கும் தீர்ப்பின் மீது நம்பிக்கை இல்லை என்றால் நீதிமன்றங்களில் வழக்குத் தொடரலாம்.
பாதிக்கப்பட்டவர் விபத்து காப்பிட்டு பாலிசி எடுத்திருந்தால், தேரட் பார்ட்டி இன்சூரன்ஸ் மூலம் கிடைக்கும் நஷ்டஈட்டுத் தொகையுடன் விபத்து காப்பிடு மூலம் காப்பீட்டுத் தொகையும் கிடைக்கும்.
எனவே உங்களுக்காவது அல்லது வேறு யாருக்காவது விபத்து ஏற்பட்டால் இந்த அடிப்படை விஷயங்களையும் கொஞ்சம் கவனித்தில் வைத்து செயல்பட்டால், எதிர்காலத்தில் இழப்பீட்டைப் பெற எளிதாக இருக்கும்
No comments:
Post a Comment