லண்டன் அரசு ஒலிபரப்பு நிறுவனமான பி.பி.சி. நிறுவனம் ரேடியோ மற்றும் டி.வி. ஒலிபரப்புகளை நடத்தி வருகிறது. நீண்ட காலமாக பி.பி.சி. ரேடியோ 32 மொழிகளில் ஒலிபரப்பி வந்தது. இந்திய மொழிகளான இந்தி, தமிழ், வங்காளம், நேபாளி மொழிகளிலும் ரேடியோ ஒலிபரப்புகள் உள்ளன. இவற்றில் ஆயிரக் கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பல்வேறு மொழிகளிலும் ஒலிபரப்பு செய்வதில் அதிக அளவில் செலவாகிறது. இதை கட்டுப்படுத்த பி.பி.சி. நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 7 மொழிகளின் ஒலிபரப்பை நிறுத்த பி.பி.சி. முடிவு செய்துள்ளது. அல்பேனியன், வெசிடோனியன், போர்ச்சுகீஸ், ஆப்ரிக்கன், செர்பியன் மொழிகள் உள்ளிட்ட 7 ஒலிபரப்புகள் நிறுத்தப்படுகின்றன.
இதனால் இந்த துறைகளில் பணியாற்றிய 650 ஊழியர்களும் வேலை இழக்கின்றனர். பி.பி.சி. ஒலிபரப்பு செலவுக்கு இங்கிலாந்து வெளியுறவு இலாகா மூலம் பணம் ஒதுக்கப்பட்டு வந்தது. இப்போது செலவுக்கு தேவையான பணம் ஒதுக்கப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment