லண்டன்: தனது பணிகள் முழுவதையும் இந்தியர்களை வைத்து வெளிப்பணி ஒப்படைப்பு (அவுட்சோர்ஸிங்) செய்ய முடிவு செய்துள்ளது பிரிட்டிஷ் சுகாதாரத் துறை.
இதனை பிரிட்டிஷ் அரசு உதவியுடன் இயங்கும் என்எச்எஸ் ஷேர்டு பிஸினஸ் சர்வீஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ஜான் நீல்சன் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இப்படி இந்தியர்களுக்கு வெளிப்பணி ஒப்படைப்பு செய்வதால் பல லட்சம் பவுண்ட்கள் மிச்சப்படுத்த முடியும் என பிரிட்டன் அரசு கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
'அவுட்சோர்ஸிங்கில் இந்தியர்களின் வேலைத் திறன் சிறப்பாக உள்ளது. குறிப்பாக மருத்துவத் துறையில் இந்தியர்களின் பணிக்கு நிகராக வேறு எங்கும் பார்க்க முடிவதில்லை', என்று அவர் தெரிவித்தார்.
டெல்லி மற்றும் புனே நகரங்களில் உள்ள பல பிரபல அவுட்சோர்ஸிங் நிறுவனங்கள் ஏற்கெனவே பிரிட்டனின் சுகாதாரப் பணிகளைச் செய்யவும் ஆரம்பித்துவிட்டனவாம். அதே நேரம் பிரிட்டிஷ் நோயாளிகள் பலர் தங்கள் விவரங்களை வெளிநாடுகளில் வைத்திருப்பதை விரும்பாவிட்டாலும், பல லட்சம் பவுண்ட்டை மிச்சப்படுத்த இது ஒன்றே வழி என்பதால் ஒப்புக் கொள்வதாக நீல்சன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment