நேபாளத்தில் பிரதமராக இருந்த மாதவ்குமார் நேபாள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது.
கடந்த 7 மாதங்களில் 16 தடவை அதற்கான தேர்தல் நடந்தது. ஆனால் பிரதமர் தேர்வு தோல்வியில் முடிந்தது. இதை தொடர்ந்து அனைத்து கட்சிகள் அடங்கிய அரசை அமைக்க ஜனாதிபதி ராம்பரன்யாதவ் முயற்சி மேற்கொண்டார். அந்த முயற்சியும் தோல்வி அடைந்தது.
இதை தொடர்ந்து மீண்டும் பிரதமர் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. இது குறித்து பாராளுமன்ற அலுவல் ஆலோசனை கமிட்டி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.முடிவில், வருகிற பிப்ரவரி 3-ந் தேதி பிரதமர் தேர்தல் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதற்கான மனு தாக்கல் வருகிற 2-ந் தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பு ஆளும் கம்யூனிஸ்டு மற்றும் கூட்டணி கட்சிகள், நேபாளி காங்கிரஸ், மாவோஸ்யிட்டுகள் கட்சி தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு வெளியிடப்பட்டது.
No comments:
Post a Comment