15 January 2011

!!! மார்ட்டின் !!!


மார்ட்டின் வேறு யாரும் அல்ல.கலைஞரின் இளைஞன் படத்தின் தயாரிப்பாளர் தான்.  
இப்போது மார்ட்டின் எப்படிச் சிக்கிக் கொண்டார்.

 1990 முதல் 2003 வரையிலான காலத்தில் லாட்டரி தடை செய்யப் படாமல் இருந்த பொழுது, சேலத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவர் மார்டினிடம் இருந்து மொத்தமாக லாட்டரிச் சீட்டுகளை வாங்கி கொண்டிருந்தார். இவ்வாறு லாட்டரிச் சீட்டுக்ளை வாங்குவதற்கு உத்தரவாதமாக ஒரு பெரும் தொகையை மார்ட்டின் கேட்கிறார்.   பாலாஜியிடம் பெரும் தொகை இல்லாததால், சேலம் அக்ரஹாரம், எண் 42ல் உள்ள கட்டிடத்திற்கு பவர் ஆப் அட்டார்னி எழுதித் தருகிறார்கள். 
இவரைப் போலவே லாட்டரி தொழிலில் ஈடுபட்டிருந்த பாலாஜியின் தங்கையின் கணவரும் அவரது சொத்துக்கான பவர் ஆப் அட்டார்னியை எழுதித் தருகின்றனர். இதெல்லாம் நடந்தது 2000ம் ஆண்டில்.இதற்குப் பிறகு, தமிழக அரசு லாட்டரிகளை தடை செய்ததால், பாலாஜி தனது வியாபாரத்தை கர்நாடகத்திற்கு மாற்றிக் கொள்கிறார். மார்ட்டினுக்கு கொடுக்க வேண்டிய அத்தனை நிலுவைகளையும் கொடுத்த பின், தான் அளித்த பவர் ஆப் அட்டார்னி பத்திரத் திருப்பித் தருமாறு கேட்கிறார். 
மார்ட்டின் இதோ, அதோஎன்று இழுத்தடிக்கிறார்.   இவனிடம் எப்படி இந்தப் பத்திரத்தை வாங்குவது என்று பாலாஜி முழித்துக் கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் திடீரென்று 13.10.2010 அன்று, ஆயுதம் தாங்கிய ஒரு கும்பல், யுனிவர்சல் செல் நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்பட்டிருந்த அந்த கட்டிடத்தில் நுழைந்து, அடாவடியாக அந்நிறுவனத்தை காலி செய்தது. 
என்னடா இது என்று பாலாஜி விபரங்களை விசாரித்தால், 2009ம் ஆண்டில் 50 லட்ச ரூபாய்க்கு மார்ட்டின் அந்த சொத்தை சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. அடுத்த நடவடிக்கையை பாலாஜி எடுப்பதற்குள் சரசரவென்று காட்சிகள் அரங்கேறின.பெரிய திரையை போட்டு மூடி, கட்டிடம் இடிக்கப் படத் தொடங்கியது.அதிர்ந்து போன பாலாஜி, சேலம் சிவில் கோர்ட்டில் தடையாணை கேட்டு வழக்கு ஒன்றை தொடர்கிறார்.   சேலம் மாநகர காவல் ஆணையாளரிடமும், நகர காவல் நிலையத்திலும் புகார் ஒன்றை தொடுக்கிறார். 
கருணாநிதியே மார்ட்டினோடு கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கும் போது, மார்ட்டின் மீது எஃப்ஐஆர் போட, சேலம் மாநகர காவல் ஆணையாளர் என்ன பைத்தியமா? எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், வேறு வழியின்றி பாலாஜி, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுகிறார்.
வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் 
சென்னை உயர்நீதிமன்றம், மார்ட்டின் மீதும், அந்த வன்முறைக்கு காரணமானவர்கள் மீதும், வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.   இந்த வழக்கை திறம்பட வாதாடி மார்ட்டினுக்கு பொங்கல் பரிசு வழங்கிய வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு சவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. 
மார்ட்டின் கருணாநிதியோடு நெருக்கமாகி இளைஞன் தயாரிப்பை கையில் எடுத்தவுடன், முதல் பலிகடா யார் தெரியுமா ? முன்னாள் நண்பனும், இந்நாள் எதிரியுமான உஸ்மான் பயாஸ். 
கருணாநிதியோடு நெருக்கமான உடனே மார்ட்டின் வைத்த கோரிக்கை, உஸ்மான் பயாஸ் கைது செய்யப் பட வேண்டும் என்பது. அதன்படியே, கமிஷனர் கண்ணாயிரம், சென்னை மாநகர மத்திய குற்றப் பிரிவில் ஒரு வழக்கை பதிவு செய்யச் சொல்லி, உடனடியாக பயாஸை கைது செய்ய உத்தரவிடுகிறார். பயாஸும் கைது செய்யப் படுகிறார்.நினைத்ததை முடித்த திருப்தியில் இருக்கும் மார்ட்டின் பயாஸ் உருவத்தில் ஒரு தீராத பகையாளியை உருவாக்கிக் கொள்கிறார். பயாஸ், ‘என்னையா ஜெயில்ல போட்ட. உன்னை என்ன பண்றேன் பாருஎன்று கறுவுகிறார்.

பயாஸ், தன்னிடம் இருக்கும் பணம் மற்றும் செல்வாக்கை பயன்படுத்தி மார்ட்டினின் கள்ள லாட்டரி வியாபாரத்திற்கு பெரும் நெருக்கடியை உருவாக்குகிறார். 

வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி, பிறர் வயிறெரியச் சிரிப்பவர்கள் மிருக ஜாதி

இதன் விளைவாக மார்ட்டின் மீது, பஞ்சாப், கேரளா போன்ற மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப் படுகின்றன.கேரள உயர்நீதிமன்றத்தில் மார்ட்டின் சார்பாக காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். சிங்விக்கு ஒரு முறை நீதிமன்றத்தில் ஒரு வழக்குக்காக ஆஜரவாதற்கு 5 லட்சம் ரூபாய். நாள் முழுவதும் ஆஜரானால் 25 லட்சம் ரூபாய். 
கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் பிரதான குற்றச் சாட்டு, சிபிஎம் க்கும், மார்ட்டினுக்கும் உறவு இருக்கிறது என்பதும், மார்ட்டின் மீது சிபிஎம் அரசு போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும். இது குறித்து காங்கிரஸ் கட்சி போராட்டங்களையெல்லாம் நடத்தியிருக்கிறது.இப்படி இருக்கையில் அபிஷேக் மனு சிங்வி வந்து ஆஜரானால் என்ன ஆகும் ? கேரள காங்கிரஸ் கட்சியினர் கொதித்து எழுந்தனர். உடனடியாக சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து சிங்வி, காங்கிரஸ் கட்சி சார்பாக பத்திரிக்கையாளர்களை சந்திப்பதிலிருந்து இரண்டு மாத காலங்களுக்கு தடுக்கப் பட்டார். 
சோனியாவின் கண்டனத்தை அடுத்து, சிங்வி இவ்வழக்கிலிருந்து விலகிக் கொண்டார். (சார் ஃபீஸை திருப்பிக் கொடுத்தீங்களா சார் ?) இந்த சிங்வி பெரிய தில்லாலங்கடி. ஆயிரக்கணக்கான இந்தியர்களை கொன்ற போபால் விஷ வாயுச் சாவுக்கு காரணமான டவ் கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்கு 2006ல் ஆஜரானவர். 
சிங்வி விலகியதை அடுத்து களத்தில் இறங்கினார் கருணாநிதி. ஒரு கண்றாவி கதையை 60 கோடி ரூபாய் செலவில் படமாக்கிய தயாரிப்பாளருக்கு ஒரு கஷ்டம் என்றால் சும்மா இருப்பாரா ? உடனடியாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமனை, கேரளாவுக்கு மார்ட்டினுக்காக ஆஜராக அனுப்புகிறார்.

பி.எஸ்.ராமன் ஆஜரானதும், கேரள மக்களின் கோபம் இன்னும் அதிகமானது. பொதுமக்கள் கோபத்தைப் பார்த்த அச்சுதானந்தன், உடனடியாக கருணாநிதிக்கு பி.எஸ்.ராமன் ஆஜரானது தவறு என்று ஒரு கடிதத்தை எழுதுகிறார்.இந்தக் கடிதத்தையெல்லாம் பார்த்து ரோஷப் படுகிறவரா என்ன கருணாநிதி ? அவர் பதிலுக்கு உடன்பிறப்புகளுக்கு கடிதம் எழுதுகிறார்.   உடன்பிறப்பே, ராமன் ஒரு வழக்கறிஞர். வழக்கறிஞர் வழக்கிலே ஆஜராவதில் என்ன தவறு ? என்ற ரீதியில் ஒரு கடிதத்தை எழுதி விட்டு, பி.எஸ்.ராமன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
இதையெல்லாம் விடுங்கள். இதை விட ஒரு பெருங்கூத்து இருக்கிறது.   செம்மொழி மாநாடு என்ற ஒரு கூத்து நடந்ததல்லவா ? அந்த மாநாட்டில், தங்கும் இட ஏற்பாட்டுக் குழு என்று ஒன்று அமைக்கப் பட்டது. அந்தக் குழுவிற்கு தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி. அந்தக் குழுவின் உறுப்பினர் யார் தெரியுமா ? நம்ப மார்ட்டின் தான்.


ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையில், இளைஞன் திரைப்படம் குறித்து இவ்வாறு கூறியிருக்கிறார்.
விற்பனையாகாத தன்னுடைய திரைக் கதைகளுக்கு, கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத தொகைகளை, பல மாநிலங்களில் குற்ற நடவடிக்கைகளை எதிர் கொண்டு கிரிமினல் வழக்குகளை சந்தித்துக் கொண்டு இருப்பவரும், லாட்டரி மாஃபியா தலைவனாக இருந்து திரைப்படத் தயாரிப்பாளரானவர் கொடுத்திருக்கிறார் என்று மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் கருணாநிதியே ஒப்புக் கொண்டு இருக்கிறார்.” 
கருணாநிதி இதற்கு உரிய முறையில் ஜெயலலிதாவுக்கு பதில் அளித்து விட்டார். எப்படி என்று கேட்கிறீர்களா ? இந்தப் படங்களைப் பாருங்கள்.


 நன்றி - சவுக்கு 

No comments: