31 January 2011

பாட்டாளி மக்கள் கட்சி - ஒரு பார்வை


பாட்டாளி மக்கள் கட்சி, திமுக கூட்டணியில் சேர்ந்து 2011 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று கருணாநிதி இன்று டெல்லியில் அறிவித்துள்ளார்.  இந்த அறிவிப்பை அடுத்து, தேர்தல் களம் ஓரளவுக்கு தெளிவாகியிருக்கிறது.    ராமதாஸின் இந்த முடிவு, தேர்தல் வரையிலுமா, தொடர்ந்து நீடிக்குமா என்பது ராமதாஸுக்கே தெரியாது.  திமுக கூட்டணியில் இருந்து தேர்தலில் போட்டியிட்டு கணிசமான எம்எல்ஏக்களை வென்ற பிறகு, திமுகவில் இருந்து கொண்டே 'உள்குத்து' வேலைகளில் ஈடுபடுவதில் மருத்துவர் அய்யா வல்லவர்.   மருத்துவர் அய்யா கடந்து வந்த பாதையை சவுக்கு கடந்த ஜுன் மாதம் எழுதியிருந்தது.  இந்த நேரத்தில் அந்தக் கட்டுரையை மீள் பதிவு செய்வது, பொறுத்தமாக இருக்கும் என்பதால், மீள் பதிவு செய்யப் படுகிறது.

டாக்டர்.ராமதாஸ். இந்தப் பெயரோடு வன்னியர் சங்கத் தலைவராக தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார். பிறகு, தமிழார்வம் காரணமாக, மருத்துவர் ச.ராமதாசு என்று மாறி, பிறகு தமிழ்க்குடிதாங்கிஎன்று ஆகியது.

யார் இந்த ராமாதாஸ் ? தமிழகத்தின் மிக மிக முக்கியமான தலைவராக உருவாகியிருக்க வேண்டியவர். ஆனால், காலம் அவரை மிக மிக கடைந்தெடுத்த ஒரு சந்தர்ப்பவாதியாக மாற்றி, புயலில் சிக்கிய ஓலைக்குடிசையின் கூரையாக மாற்றிப் போட்டிருக்கிறது.

ஒரு சாதாரண மருத்துவராகத்தான் தன் பொது வாழ்வை துவக்கினார், மருத்துவர் ராமதாஸ். திண்டிவனத்தில் இன்று இருக்கும் பாலத்தின் அருகேதான் அவரது கிளினிக் இருந்தது. மிகக் குறைந்த செலவில் வைத்தியம் பார்த்ததாகவும், அவரது கிளினிக்கில் பணியாற்றும் ஊழியர்களைக் கூட, மிகுந்த மரியாதையோடு நடத்தியதாகவும் தகவல் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

வன்னிய சமுதாய மக்கள் ஒரு கணிசமாக வாக்கு வங்கியாக இருந்தாலும், தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் பதவி, அரசுப் பதவி போன்றவற்றில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப் படவில்லை என்பது அவர்களின் மிகப் பெரிய மனக்குறையாக இருந்தது. இது போன்ற நிராகரிப்புகளுக்கும், புறக்கணிப்புகளுக்கும் ஆட்சியாளர்கள்தான் காரணம் என்று வன்னிய மக்கள் பெரும்பாலும் நினைத்தனர்.

இந்தச் சூழலில்தான், வன்னியர் சங்கத்தின் முக்கியப் பொறுப்புக்கு வருகிறார் மருத்துவர் ராமதாஸ்.

1980களில், வன்னிய சமுதாயத்தின் இந்த குமுறல், பெரியதொரு போராட்டமாக வெடித்தது. தென் மாவட்டங்களுக்கும், வட மாவட்டங்களுக்கும் இருந்த தொடர்பு முற்றிலும் அறுந்து போனது. இந்தப் போராட்டம் நடக்கையில், மீன்சுருட்டியில் இருந்தது ஞாபகம் இருக்கிறது. நெடுஞ்சாலையின் குறுக்கே மரங்கள் வெட்டிப் போடப்பட்டன. போக்குவரத்து 10 நாட்களுக்கு முற்றிலும் ஸ்தம்பித்தது.

அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர், பேச்சுவார்த்தையின் மூலம், இந்தப் பிரச்சினையை முடிக்காமல், அப்போது உளவுத்துறை தலைவராக இருந்த மோகன்தாஸ் என்ற காவல்துறை அதிகாரியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, காவல் துறையை விட்டு போராட்டத்தை அடக்க முற்பட்டார். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோர் இறந்தனர்.

அந்தப் போராட்டம், மருத்துவர் ராமதாசை வன்னிய மக்கள் மத்தியில் பெரிய சக்தியாக அடையாளம் காட்டியது. அந்த அங்கீகாரத்தை சரியான முறையில் பயன் படுத்த வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ், உண்மையிலேயே முயன்றார்.

அப்போது வன்னியர் சங்கத்தின் முக்கிய முழக்கம், "தேர்தல் பாதை, திருடர் பாதை" "தேர்தலை புறக்கணியுங்கள்" என்பதுதான். இந்த முழக்கம், 80களின் தொடக்கத்தில், தமிழகத்தில் ஓரளவு பரவலாக கால் ஊன்றியிருந்த நக்சலைட் இயக்கத்தின் பார்வையை வன்னியர் சங்கத்தின் பக்கம் திருப்பின.

80களின் இறுதியில், நக்சலைட் இயக்கங்கள், காவல்துறையின் கொடிய அடக்குமுறையாலும், இப்போது போல, தகவல் தொடர்பு அப்போது வளர்ந்திருக்க வில்லை என்பதாலும், சிதைந்து போனது. அப்போது நக்சலைட் இயக்கங்களில், சித்தாந்த ரீதியாகவும், அறிவு ஜீவிகளாகவும் அறியப்பட்ட, பேராசிரியர்களும், கல்வியாளர்களும், சிந்தனையாளர்களும், நக்சலைட் இயக்கத்தின் சிதைவால், தங்களை வன்னியர் சங்கத்தோடு இணைத்துக் கொண்டனர்.இவ்வாறு இவர்கள் இணைத்துக் கொண்ட வேளையில் தான், மருத்துவர் ராமதாஸ், வன்னியர் சங்கத்தை, அந்த மிகப் பெரும் போராட்டம் தந்த பலத்தில் அரசியல் இயக்கமாக உருவாக்க வேண்டும் என்று முயற்சி எடுத்தார்.

அப்போது அரசியல் சித்தாந்த ரீதியாக மிகப் பெரிய அறிவு ஜீவிகளாக இருந்த, திருப்பூரைச் சேர்ந்த கருணா மனோகரன் மற்றும், பேராசிரியர் மூர்த்தி ஆகியோர், பாட்டாளி மக்கள் கட்சி என்று இக்கட்சிக்கு பெயர் வைக்க வேண்டும் என்று ஆலோசனை கூறுகின்றனர். பாட்டாளி என்ற பெயர் வருவதற்கு காரணம், இவர்கள் இருவரைப் போன்ற முன்னாள் நக்சலைட்டுகள் தான். அப்போது, இவர்களோடு இணைந்து இருந்தவர், இப்போது பிரபா.கல்விமணி என்று அறியப் படும், பேராசிரியர் கல்யாணி.

வன்னியர்கள் மட்டுமல்லாமல் பாட்டாளி மக்கள் அனைவருக்காகவும் பாடுபட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயரிடப் பட்டது.


கருணா மனோகரன் மற்றும், பேராசிரியர் மூர்த்தி ஆகிய இருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைத் திட்டங்கள் என்று, தனித்தனியே இரண்டு அறிக்கைகளை அளிக்கின்றனர்.

அந்த அறிக்கைகளில், தமிழ்வழிக் கல்வி, பிற்பட்டோர்-தாழ்த்தப் பட்டோர் ஒற்றுமை, உழைப்பாளி மக்களின் உரிமைகளை நிலைநாட்டுதல், சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவித்தல் போன்ற முற்போக்கான பல கொள்கைகள் அதில் இடம் பெற்றன.

இந்த இரண்டு அறிக்கைகளும், பேராசிரியர் கல்யாணியின் வீடு உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் பல முறை விவாதிக்கப் பட்டன. பேராசிரியர் மூர்த்தி அவர்கள், ஒரு அரசியல் கட்சி என்பது, சாதிகளின் கூட்டமைப்பே. அதனால், அனைத்து சாதியினருக்கும், உரிய அங்கீகாரம் பாட்டாளி மக்கள் கட்சியில் வழங்கப் பட வேண்டும் என்று முன் மொழிந்தார். இவரின் இந்த வாதத்தை மருத்துவர் ராமதாஸ் உடனடியாக ஏற்றுக் கொண்டார்.

அதன் படியே, வள்ளிநாயகம் என்ற தலித்துதான், பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் பொதுச் செயலாளராக நியமிக்கப் பட்டார். சிறுபான்மை சமுதாயத்தினருக்கு, உரிய அங்கீகாரம் வழங்கப் பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே, 13 ஆண்டுகளாக சிறையில் இருந்து சமீபத்தில் வெளி வந்திருக்கும், குணங்குடி ஹனீபா, பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் பொருளாளராக நியமிக்கப் பட்டார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைத் திட்டங்கள் ஏற்கப் பட்டு, தலித்துகளுக்கு ஆதரவாக, தமிழகத்தின் பல இடங்களில் மருத்துவர் ராமதாஸ் போராட்டங்களை நடத்தினார். பல இடங்களில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார்.

பேராசிரியர் மூர்த்தி, கருணா மனோகரன், பேராசிரியர் கல்யாணி போன்றோருடன், பாட்டாளி மக்கள் கட்சியை வழிநடத்தும் நிர்வாகக் குழுவில், பி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் தீரன், விமலா மூர்த்தி போன்ற பலர் இருந்து மருத்துவர் ராமதாசோடு சேர்ந்து, கட்சியை திறம்பட வழிநடத்தினர்.

பல்வேறு போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியிருந்தாலும், 1992ல் அக்கட்சி நடத்திய "தமிழர் வாழ்வுரிமை மாநாடு" பாட்டாளி மக்கள் கட்சியின் பலத்தையும், உணர்வையும் தமிழகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

1992 என்பது, ராஜீவ் மரணத்துக்கு மறு ஆண்டு. அப்போது "தடா" என்ற கடுமையான ஆள் தூக்கிச் சட்டம் அமலில் இருந்தது. விடுதலைப் புலிகள், பிரபாகரன் என்ற பெயரைச் சொன்னாலே, தடா சட்டம் பாயும் என்பதான ஒரு சூழல் அது.

அந்தச் சூழலில், பிரபாகரன் படங்களையும், புலிக் கொடிகளையும் ஏந்தி, பெரியார் திடலில், "தமிழர் வாழ்வுரிமை மாநாடு" நடை பெற்றது. மிகப் பெரும் பலத்தோடு அப்போது ஆட்சியில் இருந்த, காவல்துறையை வைத்து, நீதிபதியின் மருமகன் மேலெல்லாம்கஞ்சா வழக்கு போடும் நிலையில் செல்வி.ஜெயலலிதா இருந்தார். இருந்த போதும், பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய இந்த மாநாடு, ஜெயலலிதாவை திகைக்க வைத்தது. ஜெயலலிதா, இவரைப் பார்த்து உண்மையிலேயே அஞ்சினார் என்பதுதான் உண்மை. பழ.நெடுமாறன் உள்ளிட்டோரை தடா சட்டத்தின் கீழ், கைது செய்து சிறையில் அடைத்த ஜெயலலிதா, பின்னாளில் பயன்படுவார் என்று உத்தேசித்தோ என்னவோ, மருத்துவர் ராமதாசை கைது செய்ய எத்தனிக்க வில்லை. 

"தடா" சட்டத்தை எதிர்த்து, அடக்குமுறை சட்டம் எதிர்ப்பு இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை மருத்துவர் ராமதாஸ் தன் தோழர்களோடு சேர்ந்து தொடங்கி, தமிழகம் முழுக்க, தடா சட்டத்தை எதிர்த்து இயக்கங்களை நடத்தினார்.

இது தவிர தமிழகம் முழுக்கவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான நிகழ்வுகளில், மருத்துவர் ராமாதாசோடு இணைந்த அணி, பல்வேறு செயற்பாடுகளை நிகழ்த்தியது. தமிழகம் முழுக்க, தலித்துகள் தொடர்பான பிரச்சினைகளில், மருத்துவர் ராமதாஸ் தலையிட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறார் என்று, அவருடன் பணியாற்றியவர்கள் சொல்கிறார்கள்.

ஆரம்ப காலத்தில், மருத்துவர் ராமதாஸ், திண்டிவனத்தில் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த போது, அவரைச் சந்தித்தவர்கள் சொல்கிறார்கள். அவர் மேசையின் மேல் ஒரு சைபால்டப்பா வைத்திருப்பாராம். வைத்தியம் பார்க்க வரும் நோயாளிகளிடம், மருத்துவ கட்டணத்தை அந்த டப்பாவில் போடச் சொல்லுவாராம்“. யாராவது அவரைப் பார்க்க வந்தால், அந்த டப்பாவிலிருந்து, சில்லரைக் காசுகளை எடுத்து, அருகில் உள்ள தேநீர்க் கடையில் பால் வாங்கி வந்து, கொடுத்து உபசரிப்பார் என்று கூறுகிறார்கள்.

அப்போதெல்லாம் தனக்கு நெருக்கமானவர்களிடம், தனது மகன் அன்புமணி பற்றி, எப்போதும் குறை பட்டுக் கொள்வார் என்கிறார்கள். தனக்கு நெருக்கமானவர்களிடம், “பாருங்க சார், படிக்கவே மாட்டேங்குறான். எப்ப பாத்தாலும், அவங்க வீட்டுலேயே (சம்பந்தி கிருஷ்ணசாமி ) கெடக்குறான். பாருங்க இவன் டாக்டராவான்னு நம்பி, டிட்கோவுல 20 லட்ச ரூபா லோனப் போட்டு, மருத்துவமனை கட்டியிருக்கேன். இவன் என்னடான்னா படிக்கவே மாட்டேங்குறான். லோன எப்படிக் கட்டப் போறேன்னு தெரியலஎன்று புலம்புவார் என்று கூறுகிறார்கள். 

இப்போது லோன் திருப்பிக் கட்ட கஷ்டப் படக்கூடிய நிலையிலா டாக்டர் இருக்கிறார் ? இதுதான் அன்றைய மருத்துவர் ராமதாஸ்.

தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை விட, சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்போடு செயல்பட்டார்.

இதற்கு அவரோடு இணைந்து பணியாற்றிய பேராசிரியர் கல்யாணி போன்றோர் மிக முக்கிய காரணிகளாக இருந்திருக்கின்றனர். பேராசிரியர் கல்யாணியிடம் பேசிய போது, மருத்துவர் ராமதாஸ், அவரைப் போன்ற பேராசிரியர்களும், முன்னாள் நக்சலைட்டுகளும், வழங்கும் ஆலோசனைகளை உடனடியாக கேட்டுக் கொண்டு செயல்படுத்துவார் என்று நினைவு கூறுகிறார்.

இன்றைக்கு இருப்பது போன்ற வன்னியர் அறக்கட்டளையும், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களும், அப்போது ராமதாஸிடம் இல்லை.

ஒரே ஒரு கார் வைத்திருந்தாராம். அந்தக் காருக்கும் பெட்ரோல் போட்டு கட்டுப்படியாகாது என்பதால், கூட்டங்களுக்கு அழைப்பு வரும்போதெல்லாம், பேருந்தில் சென்று இறங்குவார். இறங்கிய இடத்திலிருந்து கட்சிக்காரர்கள் ராமதாசை காரில் அழைத்துச் செல்லுவார்கள் என்று, திண்டிவனத்தில், ராமதாசோடு சேர்ந்து பணியாற்றியவர்கள் கூறுகின்றனர்.

தேர்தல் பாதை திருடர் பாதைஎன்று வன்னியர் சங்கம் எந்த முழக்கத்தை முன் வைத்ததோ, அந்த முழக்கம் மருத்துவர் ராமதாஸ் விஷயத்தில் உண்மையாகிப் போனது. 1989 ஆண்டு முதலே, பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலில் போட்டியிட்டாலும், அக்கட்சிக்கு, ஒரு கணிசமான வெற்றியையும், அரசியல் அதிகாரத்தையும் பெற்றுத் தந்தது 1998ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்தான்.
 
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பயணம் 1989ல் தொடங்கியது.

1989ல் நடைபெற்ற தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியின்றி தனித்துப் போட்டியிட்டு, 15 லட்சத்து 36 ஆயிரத்து 350 வாக்குகளை பெற்றது. எனினும் ஓரிடத்தில் கூட அக்கட்சி வெற்றி பெறவில்லை.

1991ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பாமக போட்டியிட்டு, ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அப்பொழுது பாமகவின் சின்னம் யானை. அந்தத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வெற்றி பெற்ற வேட்பாளர் பன்ருட்டி ராமச்சந்திரன். யானை சின்னத்தில் வெற்றி பெற்றதால், முதல் நாள் சட்ட மன்றத்துக்கு, பன்ருட்டி ராமச்சந்திரன் யானையில் அழைத்து வரப்பட்டார். அதே ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டாலும், பாமக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

1996ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி, அப்போது, “திவாரி காங்கிரஸ்என்ற ஒரு உப்புமாகட்சியை நடத்திக் கொண்டருந்த வாழப்பாடி ராமமூர்த்தியோடு சேர்ந்து போட்டியிட்டு, 4 இடங்களில் வெற்றி பெற்றது.

பாமக ஒரு பெரும் சக்தியாக உருவெடுக்கவில்லை என்றாலும், அந்த ஆண்டு தேர்தலில் அடித்த ஜெயலலிதா எதிர்ப்பு அலையையும்மீறி, பாமக 4 இடங்களில் வெற்றி பெற்றது, அரசியல் நோக்கர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

1998ம் ஆண்டு, நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், எப்படியாவது தன் பலத்தை நிரூபித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த செல்வி ஜெயலலிதா, பாட்டாளி மக்கள் கட்சியோடு கூட்டு சேர்ந்தார். இக்கூட்டணியில் நான்கு எம்பிக்களை பெற்றது பாமக.

 இந்தத் தேர்தலில் இருந்துதான், மருத்துவர் ராமதாஸின் சறுக்கல் தொடங்கியது. தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் மந்திரி பதவியும் கிடைத்தது. அதுவும், மிக மிக வளமைவாய்ந்த பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் பதவி.

ஆண்டுதோறும், நலிவடைந்த மற்றும், தலித்துகளுக்கு, இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள், பெட்ரோல் பங்க் வழங்குவதற்காக நேர்முகத் தேர்வு நடத்தும். இந்த நேர்முகத் தேர்வுக்கு, சவுக்குடைய நண்பரோடு, நானும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. டிஎம்எஸ் எதிரில் உள்ள, ஸ்ரீலேகா இன்டர்நேஷனல் ஹோட்டலில்தான் நேர்முகத் தேர்வு நடந்தது.

அங்கே இருந்த, நேர்முகத் தேர்வு நடத்தும் அதிகாரியின் பி.ஏ, விண்ணப்பித்திருந்த சவுக்கின் நண்பரைப் பார்த்துச் சொன்னது, “இந்த இன்டர்வ்யூ எல்லாம் வெரும் ஐ வாஷ் சார். நேரா, தைலாபுரம் தோட்டத்துக்கு போயி, டாக்டர பாருங்க. அவர் நெனச்சா உங்களுக்கு அலாட்மென்ட் உண்டு. ஒரு அலாட்மென்ட்டுக்கு ரெண்டு லட்சம் ஆகும்என்று கூறினார்.

இந்த 1998ற்குள், ராமதோசோடு, ஆரம்பகாலத்தில் இருந்த அறிவு ஜீவிகள் அனைவரும் சிறிது சிறிதாக ராமதாஸ் கட்சி நடத்தும் போக்கைப் பார்த்த விலகத் தொடங்கினர்.
1998ல் பதவியில் இருந்த பிஜேபி அரசு, 13 மாதங்கள் பதவியில் இருந்தது. இந்த 13 மாதங்களில், ராமதாஸ், கோடிகளுக்கு அதிபதி ஆனார்.

திடீரென்று, பணமும், செல்வாக்கும் கொழிக்கத் தொடங்கின. இதில் ருசி கண்ட பூனையான மருத்துவர் அய்யா, கம்யூனிசம், தமிழ் உணர்வு, கொள்கை, கோட்பாடு, அனைத்தையும், பணம் சம்பாதிக்க ஒரு அருமையான வழி என்று உணர்ந்தார்.

 சில்லரை வாணிபத்தை ஒழிக்கும், எம்என்சிக்களுக்கு எதிராகவும், குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனம், சில்லரை வணிகத்தில் இறங்குவதற்கு எதிராகவும், பெரும் போராட்டத்தை அறிவித்த ராமதாஸ், சில நாட்களிலேயே, சத்தம் இல்லாமல், கொள்கையை கக்கத்தில் செறுகிக் கொண்டு, அமைதியானது இதற்கு ஒரு உதாரணம்.

இதற்கிடையில், தங்களுக்கு புதிதாக கிடைத்துள்ள அதிகாரம் பற்றி, வன்னிய சமுதாய மக்களுக்ளு ஒரே பூரிப்பு. தங்கள் சமுதாயத்தை வாழ்வாங்கு வாழ வைக்க வந்து விட்டார் தமிழ்க் குடிதாங்கி என்று மருத்தவர் ராமதாசை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர். ஆனால், ராமதாசைப் பொறுத்த வரை, வன்னிய சமுதாயம் என்பது, அவரது குடும்பத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதை, மக்கள் வெகு தாமதமாகத்தான் உணர்ந்தார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சி, தங்கள் கட்சியின் சின்னமாக, மாங்கனிக்குப் பதிலாக, குரங்கைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். அப்படி, மரத்துக்கு மரம் தாவும் குரங்கு போல, அடுத்த ஆண்டே நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுகவை அப்படியே தொங்கலில் விட்டு விட்டு, திமுக அணிக்குத் தாவினார், மருத்துவர் ராமதாஸ்.அந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 5 எம்.பி சீட்டுக்களைப் பெற்று, 22 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது.

2001ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் அடுத்த மரமான, அதிமுகவுக்கு வெட்கமேயில்லாமல் தாவியது. இப்போது, ஜெயலலிதாவை, போயஸ் தோட்டம் சென்று சந்தித்த, ராமதாஸ், தங்களுக்கு எத்தனை இடம் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு அன்புச் சகோதரி முடிவு செய்வார்என்று சகோதர பாசத்தை கொட்டினார். இத்தேர்தலில், 20 எம்எல்ஏக்களைப் பெற்றது பாமக.2004ம் ஆண்டு நடந்த சட்டசபைக்கான பொதுத் தேர்தலில், திமுக கூட்டணியில் இடம் பெற்று, 18 இடங்களில் வென்றது.இதையடுத்து, 2009ல் பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், “மரம் தாவும்தனது கொள்கையை மறந்து விடக் கூடாது என்று, மீண்டும் அதிமுக அணிக்குத் தாவி தேர்தலில் போட்டியிட்டது. 

இந்தத் தேர்தலில் இடம் ஒதுக்குகையில், ஜெயலலிதாவை சந்தித்து விட்டு, மருத்துவர் ராமதாஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இப்படி கூறினார்.

''அன்புச் சகோதரியை சந்தித்தது, மகிழ்ச்சியான தருணம். 45 நிமிடங்கள் அரசியல் நிலவரம், சமூகப்பிரச்னைகள் குறித்துப் பேசினோம்.ஈழத்தமிழர்கள் பற்றித்தான் அவர் நிறைய நேரம் பேசினார். அந்தப் பேச்சில், கலைஞரைப் போல எதுகை-மோனை வசனம் எல்லாம் இல்லை. உண்மையான இரக்கம் இருந்தது. அவரிடம் நிறைய மாற்றங்கள் தெரிந்தன''

இதுதான் ராமதாசின் பச்சோந்தித் தனம். இப்படிப் பேசி விட்டு, இன்று தன் மகனுக்கு, ராஜ்ய சபா சீட் வேண்டும் என்றவுடன், கருணாநிதிக்கு பாத பூஜை செய்ய பாமக எம்எல்ஏக்களை அனுப்பினால், அதை ஏற்றுக் கொண்டு, ராஜ்ய சபா சீட் கொடுக்க, கருணாநிதி என்ன அப்படி ஒரு ஏமாளியா ?
2009 பொதுத் தேர்தல், பாட்டாளி மக்கள் கட்சிக்கு நெப்போலியனின் வாட்டர்லூ வாக மைந்தது.போட்டியிட்ட அனைத்து இடங்களிலும், பாட்டாளி மக்கள் கட்சி மண்ணைக் கவ்வியது".

இந்தத் தேர்தலில், தேர்தலுக்குத் தேர்தல் அணி தாவும், இந்தக் கட்சிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று மக்கள் எண்ணியது மட்டுமல்லாமல், திமுகவும் கங்கணம் கட்டிக் கொண்டுவேலை செய்தது. இதனாலேயே, பாமக, அனைத்து இடங்களிலும் மண்ணைக் கவ்வியது.

அணி தாவும், குழப்பங்கள் மட்டுமின்றி, வன்னிய சமுதாய மக்களே, மருத்துவர் அய்யாவை கைவிட்டனர். இதுதான், பாமகவின் மிகப் பெரிய சரிவாக அமைந்தது.

1998ல் பதவி சுகத்தை அனுபவிக்கத் தொடங்கிய மருத்துவர் அய்யா, அதற்குப் பிறகு, எப்படியாவது, பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தொடர்ந்து அணி மாறியதன் விளைவே, இன்று தெருக் கோடியில் நிற்கிறார்.

நண்பரோடு ஒரு நாள், தைலாபுரம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நண்பர், ஒரு முக்கியமான பத்திரிக்கையாளர். திமுக அரசில் நடக்கும் ஊழல்கள் குறித்து சில முக்கிய ஆவணங்கள் அந்த நண்பருக்கு கிடைத்ததால், அதை மருத்துவர் அய்யாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று முதன் முறையாக அவரைச் சந்திக்கச் சென்றார். காலை 9.30 மணிக்கு தைலாபுரம் சென்றவர், மருத்துவரைச் சந்திக்க மதியம் 2 மணி ஆகி விட்டது.

அது வரை, தொண்டர்களோடு தொண்டர்களாக, மரத்தடியில் நண்பரோடு காத்துக் கிடந்தோம்.

அங்கே மருத்துவரைச் சந்திக்க இரு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். தனிமையில் ரகசியமாக சந்திக்க வேண்டியி ருந்ததால், கூட்டம் குறையும் வரை காத்திருக்கலாம் என்றார் நண்பர்.மதியம் சுமார் 12.30 மணிக்கு, ஒரு ஹோண்டா எஸ்யுவி வண்டி வந்தது. அந்த வண்டியில் மருத்துவர் அய்யாவின் மருமகள் சவும்யா வந்து இறங்கினார்.
 வண்டியின் டிக்கியை திறந்ததும், சுமார் 50க்கும் மேற்பட்ட, சென்னை சில்க்ஸின் பட்டுப் புடவை டப்பாக்கள் இருந்தன. அங்கே கூடியிருந்த, தொண்டர்கள் போட்டி போட்டுக் கொண்டு அய்யாவின் மருமகளுக்கு அந்தப் பெட்டியை தூக்கிச் செல்ல உதவிக்கு ஓடினர். ஐம்பது பட்டுப் புடவைகள் என்றால் விலை என்ன இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். இதுதான் மருத்துவர் அய்யாவின் இன்றைய நிலை.

அதற்குப் பிறகு, நண்பர், திமுக அரசுக்கு எதிரான ஆவணங்களை மருத்துவர் அய்யாவிடம் வழங்க, அந்த ஆவணங்களை வைத்து, ராமதாஸ், பல நாட்கள் அறிக்கை யுத்தம் நடத்தி, கருணாநிதிக்கு, காலில் தைத்த முள்ளாய் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது, வேறு கதை.

கட்சி தொடங்கிய காலத்தில் என் கட்சியில் யாராவது ஊழல் செய்தால், அவர்களை சவுக்கால் அடியுங்கள்என்று சொன்ன மருத்தவர் ராமதாஸ், முன்னாள் நக்சலைட்டுகளை தன் கட்சியின் கொள்கையை வகுப்பவர்களாக வைத்திருந்த மருத்துவர் ராமதாஸ், அம்பேத்கரின் கொள்கையை உயர்திப் பிடிப்பதற்கென்றே, கட்சியின் கொடியில் நீலத்தை சேர்த்த மருத்துவர் ராமதாஸ், கம்யூனிஸ்ட் கொள்கைகளை தூக்கிப் பிடிக்கும் லட்சியத்தோடு தன் கட்சியின் கொடியில் சிகப்பு நிறத்தை சேர்த்த மருத்துவர் ராமதாஸ், சில்லரைக் காசுகளை பெற்றுக் கொண்டு, ஏழைகளுக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர் ராமதாஸ், இன்று, தன் மகனுக்கு ஒரு எம்பி சீட் கொடுங்கள் என்று, கோபாலபுரத்தில் மடியேந்திப் பிச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
கருணாநிதி, எல்லாருக்கும் கொடுக்கும் அல்வாவைப் போலவே, அடுத்த முறை சீட் கொடுக்கப் படும் என்று சொல்கிறார். மீண்டும், ஜெயலலிதா பக்கம் போனால் சீட் கிடைக்குமா என்ற நப்பாசையோடு காத்திருக்கிறார். ஜெயலலிதா, அதிமுக வேட்பாளர்களை அறிவித்தவுடன், திமுகவுடன் கூட்டணி என்று அறிவிக்கிறார்.

ஒவ்வொடு முறை அணி மாறும் போது, அதிகாரம் கிடைத்த மமதையில், எந்த வன்னிய மக்களின் வாக்குகளால், வளர்ந்தாரோ, அந்த வன்னிய இன மக்களை மறந்து, தன் குடும்பத்தை தூக்கிப் பிடித்தால், கோடிகள் இருந்தாலும், தெருக் கோடிக்கு வந்து விட்டார்.

சிந்து பைரவி படத்தில் கதாநாயகன் சிவக்குமார், ஒரு பெரிய சங்கீத வித்வானாக இருப்பார். காதல் பிரச்சினையால் குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி வீடு வாசல், கார் அத்தனையையும் விற்று குடிக்கத் தொடங்கி விடுவார். ஒரு நாள் குடிக்க காசு இல்லாத போது, தனக்கு தொழில் எதிரியான சிவச்சந்திரனின் வீட்டில் நடக்கும் ஒரு பார்ட்டிக்கு போனால், சரக்கு கிடைக்கும் என்று போவார். பழைய தொழில் போட்டியில், சிவச்சந்திரன், சிவக்குமாரை அவமானப் படுத்த வேண்டும் என்பதற்காக மேடையில் பாடும் பாட்டு வேண்டாம், டப்பாங்குத்து பாட்டுப் பாடினால் சரக்குத் தருவதாக சொல்கிறார். குடி வெறியில், சிவக்குமாரும்,

தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக் குட்டி நான்….
இந்தச் சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி…. ….. ….. ….. ….. “
மகாராஜா பிச்சை கேட்டு இங்கு பாடுறான்…..“
என்று பாடுவார்.

பாடலின் முடிவில், சிவக்குமாரின் வேட்டி அவிழ்ந்து விழ, பட்டா பட்டி அண்டர்வேரோடு நிற்பார்.

சினிமாவில், சூரியன் வழுக்கி சேற்றில் விழுந்தது. அரசியலில், செந்தாமரை வழுக்கி சேற்றில் விழுந்து, சூரியனிடம் காய்கிறது
 நன்றி - சவுக்கு

செல்போன் கட்டணங்கள் உயருகின்றன!


Mobileடெல்லி: தொலைத் தொடர்பு கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் செல்போன் கட்டணங்கள் மீண்டும் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் தொலை தொடர்பு புரட்சியை ஏற்படுத்துவதற்காக செல்போன் சேவை தொடங்குவதற்கான லைசென்சும், 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடும் ஒன்றாக இணைத்து வழங்கப்பட்டு வந்தன.

இதற்கு மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்பட்டு வந்தது. 2001-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே 2008-ம் ஆண்டிலும் ஸ்பெக்ட்ரம் விற்பனை செய்யப்பட்டது. இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக தலைமை கணக்கு தணிக்கையாளர் குற்றம் சாட்டினார்.

இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து தொலை தொடர்பு கொள்கையில் மாற்றம் செய்து புதிய அறிவிப்பினை மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் கபில்சிபல் வெளியிட்டார்.

செல்போன் சேவை வழங்குவதற்கான லைசென்சும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடும் இனி தனித்தனியாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "1999-ம் ஆண்டில் புதிய தொலை தொடர்பு கொள்கை அறிமுகம் செய்யப்பட்டது. டெலிபோன் சேவையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட அக்கொள்கையில் தொலை தொடர்பு லைசென்சும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடும் சேர்த்து வழங்கவேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது தொலைத்தொடர்பு துறையில் போட்டி அதிகரித்து விட்டதால் புதிய கொள்கைக்கு மாற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

எனவே இனி லைசென்சும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடும் ஒன்றாக வழங்கப்பட மாட்டாது, உரிமம் பெற்றவர்கள் எந்த விதமான தொலைபேசி சேவையை வேண்டுமானாலும் தொடங்கி கொள்ளலாம். அதற்கு தேவையான ஸ்பெக்ட்ரத்தை சந்தை விலை கொடுத்து வாங்க வேண்டும். இந்த புதிய கொள்கை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது..." என்றார்.

புதிய தொலை தொடர்பு கொள்கை காரணமாக ஏர்டெல், ஏர்செல், வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் ஸ்பெக்ட்ரம் உரிமத்தை கூடுதல் விலைக்கு வாங்க வேண்டும்.

மேலும் லைசென்ஸ் வழங்கும்போது தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஏலம் அல்லது எந்த வழிமுறையை பரிந்துரைக்கிறதோ அந்த வழி முறை கடைபிடிக்கப்படும். இந்த புதிய கொள்கையால் செல்போன் கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளது.

இதுகுறித்து கேட்டபோது, "மொபைல் போர்ட்டபிலிட்டி வசதி இருப்பதால், அவ்வளவு சீக்கிரம் கட்டணம் உயராது" என்றார் கபில் சிபல்

30 January 2011

ஓட்டலில் எச்சில் இலை எடுக்கும் ஊராட்சி தலைவர்!


 காஞ்சிபுரம் அருகே, படிப்பறிவு இல்லாத ஊராட்சி தலைவர் பதவிக் காலம் முடிய உள்ளதால், ஓட்டலில் எச்சில் இலை எடுக்கும் பணியில் சேர்ந்துள்ளார். காஞ்சிபுரத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ளது வளத்தோட்டம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் வளத்தோட்டம், கமூகம்பள்ளம், வளத்தோட்டம் காலனி, திருவள்ளுவர் குடியிருப்பு ஆகிய பகுதிகள் உள்ளன.

இந்த ஊராட்சியின் தலைவர் பதவி, கடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது பழங்குடியின வகுப்பை (எஸ்.டி., பிரிவு) சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.இருளர் சமூகத்தைச் சேர்ந்த 16 குடும்பத்தினரில் வாசு (33) என்பவர் தேர்தலில் நின்றார். அவருக்கு ஊராட்சியில் ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்ததால், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். படிப்பறிவு இல்லாத வாசுவிற்கு, கையெழுத்து மட்டுமே போடத் தெரியும்.அவரை தேர்தலில் நிறுத்தியவர் வாசுவின் அறியாமையைப் பயன்படுத்தி தலைவர் போல் செயல்படத் துவங்கினார்.ஊராட்சியில் முறைகேடுகள் நடக்க துவங்கியதை அடுத்து, வாசு தன்னை தேர்தலில் நிறுத்தியவர் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறினார்.அதன்பின், ஊராட்சிப் பணிகளை கவனிக்கும் பொறுப்பு முழுவதையும் ஊராட்சி உதவியாளர் லோகநாதன் மேற்கொண்டார். அவர் காட்டிய இடங்களில் வாசு கையெழுத்திட்டார். ஊராட்சியில் எந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்ற விவரம் கூடத் தெரியாமல் இருந்தார்.

ஊராட்சித் தலைவ ராவதற்கு முன்பாக வாசு நெசவுத் தொழில் செய்து வந்தார். முதலாளி ஒருவரிடம் கூலிக்கு நெசவு செய்தார். அதன்பின் தொழில் நசிவு காரணமாக வேலைக்கு செல்லவில்லை. அவருக்கு பயணப் படியாக ஊராட்சி சார்பில் மாதம் 500 ரூபாய் வழங்கப்பட்டது.அவரது மனைவி பச்சையம்மாள். கூலி வேலை செய்து வந்தார். இவர்களின் மகன் கார்த்திக் ஒன்பதாம் வகுப்பு, மகள் நந்தினி ஆறாம் வகுப்பு, ராஜேஸ்வரி முதல் வகுப்பு படிக்கின்றனர். நான்கு மாதங்களுக்கு முன் நான்காவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.கூலி வேலை செய்து வந்த பச்சையம்மாள், நான்காவது குழந்தை பிறந்த பின் வேலைக்குச் செல்லவில்லை. இதனால், வீட்டில் சாப்பாட்டிற்கு சிரமம் ஏற்பட்டது.அதைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன் ஊராட்சித் தலைவரான வாசு, காஞ்சி புரம் காந்தி ரோட்டில், ஒரு ஓட்டலில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு சாப்பிட்டவர்களின் தட்டுகளை எடுப்பது, டேபிளை சுத்தம் செய்வது போன்ற பணியை செய்து வருகிறார்.கமூகம் பள்ளத்தில் ஓலைக் குடிசையில் வசித்து வருகிறார். அவரது குடிசைக்கு பின்னால் கான்கிரீட் வீடு முழுமை பெறாமல் உள்ளது. வீடு குறித்து கேட்ட போது, வாசுவின் மனைவி பச்சையம்மாள், ஊராட்சி கிளார்க் எங்களுக்காககட்டுகிறார் என்றார்.

ஊராட்சி உதவியாளரான லோகநாதன் கூறியதாவது:ஊராட்சித் தலைவருக்கு மாதம் 500 ரூபாய் மட்டும் வழங்கப்படுகிறது. ஊராட்சியில் 2006-07ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டது.அரசு வழங்கிய 20 லட்ச ரூபாயில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நூறு நாள் வேலை திட்டத்தின் கீழும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதில் ஊராட்சித் தலைவர் வேலை செய்ய முடியாது. தொகுப்பு வீடு, கலைஞர் வீடு வழங்கும் திட்டம் ஆகியவற்றில் ஊராட்சித் தலைவர் பயனாளியாக முடியாது. எனவே, அவருக்கு வீடு எதுவும் ஒதுக்கப்படவில்லை.அவர் சொந்த வருமானத்தில் சிறிது சிறிதாக சேமித்து வீடு கட்டுகிறார். பதவிக் காலம் முடிய உள்ளதால் ஓட்டலில் வேலைக்கு சேர்ந்துள்ளார் என்றார். அவருடனிருந்த வாசு அவர் கூறியதை வழிமொழிந்தார்.மாதம் 500 ரூபாயில் எப்படி குடும்பம் நடத்த முடிந்தது என்ற கேள்விக்கு பதில் அளிக்க இருவரும் தடுமாறினர். அனைத்து தரப்பு மக்களும் உள்ளாட்சி நிர்வாகத்தில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக பஞ்சாயத்து ராஜ் திட்டம் கொண்டு வரப்பட்டது.ஆனால், விவரம் தெரியாதவர்கள் தலைவராகும் போது, சிலர் அவர்களை கைப்பாவையாகப் பயன்படுத்திக் கொண்டு, தாங்கள் தலைவராக செயல்படுகின்றனர். ஊராட்சியில் என்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்ற விவரம் கூட அறியாமல் தலைவர் பதவிக் காலத்தை முடிக்க உள்ளார் வாசு.

Anti-Mubarak protesters take over Cairo - Egypt protests

Protesters have taken over the centre of the Egyptian capital Cairo on the sixth day of demonstrations against the rule of President Hosni Mubarak.The police, who have been involved in violent clashes with protesters in recent days, have largely disappeared from the streets.
There is a heavy military presence in the city, but soldiers are not intervening.The government has announced that al-Jazeera must halt operating in Egypt.The Arabic TV channel, which has been showing blanket coverage of the protests, says it has yet to receive a formal order from the authorities.
Clashes between protesters and the security forces - mostly riot police - are reported to have left at least 100 people dead across Egypt since rallies began on Tuesday. Thousands have been injured as violence has flared in cities including Cairo, Suez and Alexandria.
Vacuum of authority
In Cairo, many protesters defied an overnight curfew to camp out in Tahrir (Liberation) Square, the focal point of the demonstrations in the city.Chants of "Mubarak, Mubarak, the plane awaits" could be heard on Sunday morning, a reference to protesters' hopes that President Mubarak will step down and leave Egypt.Many protesters once again climbed onto tanks and armoured vehicles around the square, with many soldiers apparently on friendly terms with the anti-Mubarak demonstrators.Sunday is the start of the working week in the Middle East, but many businesses in the capital are closed. Internet access remains intermittent.The BBC's Jeremy Bowen says that although key government buildings are under heavy guard, there appears to be a vacuum of authority in large areas of the city.
Throughout the city, armed citizens' groups have formed to respond to the widespread looting and disorder that has accompanied the growing sense of lawlessness.Across Egypt, thousands of prisoners are reported to have escaped from jails after overpowering their guards.
Travel advice
Western leaders have urged President Mubarak to avoid violence and enact reforms.Mr Mubarak has appointed a vice-president - intelligence chief Omar Suleiman - as he struggles to regain control. Aviation Minister Ahmed Shafiq has been appointed prime minister.Israeli Prime Minister Benjamin Netanyahu has said his government is watching events in Egypt carefully, and hoping to maintain peaceful relations with its Arab neighbour.The Rafah crossing between Egypt and the southern Gaza Strip is closed, Palestinian officials say.
The US government, which previously had advised US citizens against non-essential travel to Egypt, is now advising Americans in Egypt to consider leaving the country as soon as possible.The UK has advised against all but essential travel to Cairo, Alexandria, Luxor and Suez.A number of other European countries have also advised against visiting the country.The unrest in Egypt follows an uprising in Tunisia two weeks ago which toppled President Zine al-Abidine Ben Ali after 23 years in power.
The Tunisian upheaval began with anger over rising food prices, high unemployment and anger at official corruption - problems which have also left many people in Egypt feeling frustrated and resentful of their leadership

வரதட்சணைக்கான மாற்று (இன்சூரன்ஸ்) பாலிசி!


மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய இன்சூரன்ஸ் திட்டத்தில் முதலீடு செய்த  பெண்ணுக்கு எந்த பிரச்னை வந்தாலும், இன்சூரன்ஸ் பணம் மூலம் அவரால் சமாளிக்க முடியும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கிருஷ்ணா திரத் கூறினார். டெல்லியில் அமைச்சர் கிருஷ்ணா திரத் அளித்த பேட்டி: புகுந்த வீட்டில் ஏற்படும் பிரச்னைகள், துரதிர்ஷ்டவசமாக மணமகன் இறக்க நேரிடுவது போன்ற சமயங்களில் புது மணப்பெண்களுக்கு பெரும் பிரச்னையாகி விடுகிறது.

அந்த சமயத்தில் அவர்களிடம் பணமும் இருப்பதில்லை. இதுபோன்ற சிக்கலான நிலையை சமாளிக்க, அவர்களுக்கு தகுந்த நிதியுதவி கிடைக்கும் வகையில், புதிய இன்சூரன்ஸ் பாலிசியை கொண்டு வருவது குறித்து, ஆலோசித்து வருகிறோம். இந்த மாத இறுதியில் சட்ட நிபுணர்கள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இதுதொடர்பாக பேச உள்ளேன். அதன்பின் விவரங்கள் முழுமையாக வெளியிடப்படும். இந்த இன்சூரன்ஸ் பாலிசி அறிமுகமான பின்னர், பெண்ணை பெற்றவர்கள் வரதட்சணை கொடுக்க கூடாது. அதற்கு பதிலாக இந்த இன்சூரன்சில் பணத்தை கட்டினால் அவர்களின் மகளுக்கு உதவியாக இருக்கும். பிரச்னைகளுக்காக மட்டுமின்றி, அவர்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுக்குபின், பெரிய தொகை கையில் கிடைக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ் ( Third Party Insurance Claim)


படித்தவர்கள் மத்தியிலேயே இன்னமும் இன்சூரன்ஸ் பற்றிய விழிப்புணர்வு பெரிய அளவில் ஏற்பட வில்லை என்பதுதான் வேதனையான அதை சமயத்தில் உண்மையான உண்மை. தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ் பற்றி 10 பேரிடம் கேட்டால் ஒருவருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது இந்த தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ்.

தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ்

சாலை விபத்தில் வாகனங்கள் மோதினால் அந்த வாகனத்துக்கு செய்யப்பட்ட தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ் மூலம் க்ளைம் பெறலாம். இதன் மூலம் நாம் இன்சூரன்ஸ் செய்திருந்தால் மட்டுமே க்ளைம் செய்யமுடியும் என்பதெல்லாம் இல்லை.

இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் :அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் க்ளைம் கொடுக்காது. ஏனென்றால் அந்த விபத்துக்களுக்கு போக்குவரத்து கழகமே க்ளைம் தரும். மற்றபடி தனியார் வாகனங்கள் மோதினால் அந்த வாகன உரிமையாளர் எந்த நிறுவனத்தில் தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ் எடுத்திருக்கிறாரோ அந்த நிறுவனம் க்ளைம் தரும். அப்படி ஒரு வேலை அவர் தரவில்லை என்றால் வாகன உரிமையாளர்தான் தரவேண்டும்

விபத்து நடந்தவுடன் க்ளைம் பெற என்ன செய்ய வேண்டும்?

விபத்து நடந்ததை முதலில் காவல் நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும். பிறகு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதா எனக் கவனித்து அந்த எப்.ஐ.ஆர் ஐ பெற வேண்டும்.

விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் எண், உரிமையாளர் பெயர், அவரது தொலைபேசி எண், இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதா என்பன போன்ற தகவல்களைத் திரட்ட வேண்டும். எஃப் . ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டால் அவர்களே இந்த விபரங்களைப் பெற்றுவிடுவார்கள். அவர்களிடம் இருந்தேபெற்றுக்கொள்ளலாம்.

விபத்து நடந்த இடத்தில் இரண்டு பேரை சாட்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களுடைய பெயர், முகவரி கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

விபத்தை பற்றி செய்திதாள்களில் வந்தால் அதனை சேகரித்துக் கொள்ளுங்கள்.

விபத்து நடத்தும் காவலர்கள் அந்த இடத்தை சாக்பீசால் வரைந்து இருப்பார்கள். அதனை போட்டோ எடுத்துக்கொள்ளுங்கள்.

விபந்து நடந்ததால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, தற்போதைய மற்றும் எதிர்கால வருமான இழப்புகள், மன உளைச்சல் , மருத்தவ செலவு(சிகிச்சைக்கான மருத்துவ பில்கள்) இதர செலவுகள் என அனைத்தையும் குறிப்பிட்டு க்ளைம் கேட்டு ட்ரிப்யூனலில் வழக்கு தொடர வேண்டும்.

விபத்து நடந்து எத்தனை வருடம் கழித்தும் க்ளைம் பெற விண்ணப்பிக்கலாம்
இந்தியாவில் எந்த பகுதியில் விபத்து நடந்தாலும் க்ளைமைப் பெற முடியும்.

நஷ்டஈட்டுத் தொகை எத்தனை லட்சங்கள் என்றாலும் பெற முடியும்.

வாகன விபத்து க்ளைம் ட்ரிப்யூனலில் மட்டுமே க்ளைம் பெற முடியும். அந்த ட்ரிப்யூனல் வழங்கும் தீர்ப்பின் மீது நம்பிக்கை இல்லை என்றால் நீதிமன்றங்களில் வழக்குத் தொடரலாம்.

பாதிக்கப்பட்டவர் விபத்து காப்பிட்டு பாலிசி எடுத்திருந்தால், தேரட் பார்ட்டி இன்சூரன்ஸ் மூலம் கிடைக்கும் நஷ்டஈட்டுத் தொகையுடன் விபத்து காப்பிடு மூலம் காப்பீட்டுத் தொகையும் கிடைக்கும்.

எனவே உங்களுக்காவது அல்லது வேறு யாருக்காவது விபத்து ஏற்பட்டால் இந்த அடிப்படை விஷயங்களையும் கொஞ்சம் கவனித்தில் வைத்து செயல்பட்டால், எதிர்காலத்தில் இழப்பீட்டைப் பெற எளிதாக இருக்கும்

Long and Short of Calcium and Vitamin D.


The new daily recommendations for calcium and vitamin D, issued in November by the Institute of Medicine, have left many people wondering whether they are getting enough, or perhaps too much, in their diets and supplements.

The institute’s expert committee, which included bone specialists, concluded that most people don’t need supplements of these critical nutrients and warned of serious health risks from the high doses some now take — including kidney stones and heart disease linked to calcium supplements, and the very falls and fractures that vitamin D is meant to protect against.

For bone health, vitamin D and calcium go hand in hand, because the vitamin must be present for calcium to be absorbed from the digestive tract. But who, if anyone, needs supplements — and how much? Can you get enough from foods naturally rich in these nutrients or fortified with them?

These are important questions, given the steady increase in life expectancy and the already epidemic levels of osteoporosis and fractures among older Americans, men and women alike. (Women are especially vulnerable, because estrogen loss at menopause can cause a precipitous decline in bone density.)

The answers depend on three things, not to mention which experts you happen to ask: the foods and drinks you regularly consume, your personal and family history of broken bones, and habits that influence bone health.

Dr. Robert P. Heaney, a bone specialist at Creighton University in Omaha, maintains that “at least one-third of all osteoporotic fractures have a nutritional basis.”

What you eat and drink, from childhood on, is critical to the amount of calcium in your bones. Dairy foods, especially milk, yogurt and cheese, are the primary sources of calcium in the American diet, and consumption of milk has been falling steadily for decades, especially in adolescence, when most bone development occurs. A British study concluded that frequent milk consumption before age 25 was an important determinant of bone strength among middle-aged and elderly women.

Other foods are not nearly as rich in absorbable calcium, or the amounts normally eaten do not come close to the calcium content of dairy products: 300 milligrams in a glass of milk, 400 milligrams in eight ounces of yogurt.

Sardines and canned salmon eaten with the bones are good sources, and almonds are a fair source if you eat enough of them. And calcium-fortified foods like orange juice, soy milk, breakfast cereals and tofu are now widely available.

Too Much of a Good Thing

But some other desirable foods are problematic, at least when it comes to calcium: you’d have to eat so much broccoli to approach the level in milk that it could be toxic to your thyroid gland. Other vegetables with calcium, like spinach, collards, kale and beans, contain oxalates that block calcium absorption.

For daily calcium intake, the institute now recommends 1,000 milligrams for children 4 to 8, women and men 19 to 50, and men 51 to 70; 1,300 milligrams for children 9 to 18; and 1,200 milligrams for women 51 and older and men 71 and older. The upper limit of safety, the institute said, is 2,000 milligrams a day for men and women over 51.

Thus, if you are a postmenopausal woman who typically consumes only one or two servings a day of dairy, you may be hard put to get 1,200 milligrams of calcium from the rest of your diet unless you take a supplement. Dr. Ethel Siris, director of the osteoporosis clinic at Columbia University Medical Center in New York, said such women could benefit from a supplement of calcium carbonate (600 milligrams a day) or calcium citrate (500 milligrams a day).

Be sure to read the product label carefully — a usual “serving” is two tablets. Calcium carbonate should be taken with meals to assure absorption, but calcium citrate can be taken at any time and may cause fewer digestive problems.

Most calcium supplements now also contain vitamin D (usually as cholecalciferol, or D3), supplying about 250 to 300 international units in two tablets. The Institute of Medicine recommends 600 units a day for everyone from age 1 to 70 and 800 units for men and women 71 and older, with a safe upper limit for everyone over the age of 9 of 4,000 units.

Vitamin D has one advantage over calcium: It is fat-soluble and can be stored in the body for later use. But getting enough of it can be tricky.

The body gets most of its vitamin D not from diet but from skin exposed to the ultraviolet B radiation in sunlight. Unprotected skin on the arms and legs may need about 15 minutes of sun exposure a day in spring, summer and fall to make enough of the vitamin.

Alas, this production is effectively blocked if you follow current advice to prevent skin cancer and wrinkles by always covering up or using ample amounts of sunscreen. Used properly, sunscreens with an SPF of 8 or higher completely block UVB radiation and prevent synthesis of vitamin D.

Also, people who are dark-skinned or housebound or who live in far northern latitudes may fail to make enough vitamin D. And as people age, their bodies are less able to convert the vitamin into the hormone that is its biologically active form.

Milk is fortified with vitamin D at a level of 400 units per quart, and some yogurts have it as well (check the label). Many breakfast cereals are also now fortified. The only naturally rich dietary sources are oily fish from the sea like salmon and mackerel, egg yolks, liver and fish liver oil.

Testing and Maintaining

An increasing number of physicians now routinely test vitamin D levels in the blood of their female patients, and if it is below 30 nanograms per milliliter, will suggest they take a supplement. The Institute of Medicine maintains that a level of 20 nanograms is adequate, but other experts say it should be higher to assure maximum calcium absorption and bone health.

In any event, unless you are a year-round sun worshiper, a daily supplement of calcium with D, or even a separate supplement of 1,000 units of D, is likely to keep you well below the institute’s upper safe limit. Based on current evidence, unless you have a severe deficiency requiring temporary megadoses to correct, there is no reason to go any higher.


At the same time, you’d be wise to get sufficient weight-bearing exercise and avoid several bone-robbing habits: smoking; eating a lot of salty foods; drinking more than two alcoholic drinks a day; consuming more than the caffeine equivalent of two cups of coffee a day (about 300 milligrams); and eating too little protein. As for soft drinks, Dr. Siris advises a daily limit of two 12-ounce cans, and she’d prefer that soda be only an occasional treat

29 January 2011

74 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது - விவரம்



2008 ஆம் ஆண்டுக்கான விருதுகள்


1.சசிரேகா பாலசுப்ரமணியன் - நாட்டியம்
2.காயத்ரி சங்கரன் - கர்நாடக இசை
3.வே. நாராயணப் பெருமாள் - கர்நாடக இசை
4.எம்.வி. சண்முகம் - இசைக் கலைஞர்
5.இளசை சுந்தரம் - இயற்றமிழ் கலைஞர்
6.பி. லெட்சுமி நரசிம்மன் - தவில் கலைஞர்
7.காளிதாஸ், திருமாந்திரை - நாதஸ்வரக் கலைஞர்
8.பிரேமா ஜெகதீசன் - நாட்டியம்
9.ரோபோ சங்கர் - சின்னத்திரை கலைஞர்
10.நாமக்கல் வேணுகோபால் - கிளாரிநெட்
11.திருக்குவளை சகோதரிகள் சுந்தரி, சாவித்ரி - நாதஸ்வரக் கலைஞர்கள்
12.கவிக்கொண்டல் செங்குட்டுவன் - இயற்றமிழ் கலைஞர்
13.ச. சுஜாதா க/பெயர் பீர் முகமது - நாட்டியம்
14.ராணி மைந்தன் - இயற்றமிழ் கலைஞர்
15.ஜி.கே. இராமஜெயம் - ஓவியக் கலைஞர்
16.கவிஞர் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன் - இயற்றமிழ் கலைஞர்
17.தஞ்சை சுபாஷினி மற்றும் திருமதி ரமா - பரதநாட்டியக் கலைஞர்கள்
18.சி.வி. ரமேஸ்வர சர்மா - சமையல் கலைஞர்
19.திருமுருகன் - சின்னத்திரை இயக்குநர்
20.பரத்வாஜ் - இசையமைப்பாளர்
21.ராஜீவ் மேனன் - ஒளிப்பதிவாளர்
22.சிற்பி குட்டப்பன் நாயர் - சிற்பக் கலைஞர்
23.தோஹா பேங்க் சீதாராமன் - பண்பாட்டுக் கலை பரப்புனர்
24.என். எத்திராசன் - கலைப் பரப்புனர்
25.கருணாஸ் - நகைச்சுவை நடிகர்

2009 ஆம் ஆண்டுக்கான விருதுகள்

1.காயத்ரி கிரீஷ் - கர்நாடக இசை
2.சேக்கிழார் - சின்னத்திரை வசனகர்த்தா
3.சாக்ஷி சிவா - சின்னத்திரை நடிகர்
4.மாளவிகா - சின்னத்திரை நடிகை
5.பூவிலங்கு மோகன் - சின்னத்திரை நடிகர்
6.எஸ். முத்துராமலிங்கம் - கூத்துக் கலைஞர்
7.பி. முருகேஸ்வரி - கரகாட்டக் கலைஞர்
8.ரேவதி சங்கரன் - சின்னத்திரை நடிகை
9.தஞ்சை சின்னப்பொன்னு குமார் - கிராமியப் பாடகர்
10.எல்.ஜான்பாவா - சிலம்பாட்டக் கலைஞர்
11.ரேவதி - வில்லுப்பாட்டுக் கலைஞர்
12.கே. கருப்பண்ணன் - ஒயிலாட்டக் கலைஞர்
13.கே.ஏ. பாண்டியன் - நையாண்டி மேளக் கலைஞர்
14.எம். திருச்செல்வம் - நையாண்டி மேளக் கலைஞர்
15.சிவகங்கை வி. நாகு - நையாண்டி மேளக் கலைஞர்
16.டி. சேகர் - கிராமியக் கருவி இசைக் கலைஞர்
17.மு. இளங்கோவன் - கிராமியக் கலை பயிற்றுனர்
18.சா. கந்தசாமி - இயற்றமிழ்
19.ராஜேஷ் குமார் - இயற்றமிழ்
20.நாஞ்சில் நாடன் - இயற்றமிழ்
21 ரோகிணி குணச் - சித்திர நடிகை
22 சரண்யா குணச் - சித்திர நடிகை
23 சின்னி ஜெயந்த் - நகைச்சுவை நடிகர்

2010 ஆம் ஆண்டுக்கான விருதுகள்

1.பொன். செல்வ கணபதி - இயற்றமிழ்
2.பேராசிரியர் தே. ஞான சேகரன் - இயற்றமிழ்
3.டாக்டர் சு. நரேந்திரன் - இயற்றமிழ்
4.டாக்டர் தமிழண்ணல் - இயற்றமிழ்
5.திண்டுக்கல் ஐ. லியோனி - இலக்கியச் சொற்பொழிவாளர்
6.சொ. சத்தியசீலன் சமயச் - சொற்பொழிவாளர்
7.தேச. மங்கையர்க்கரசி - சமயச் சொற்பொழிவாளர்
8.டி.வி. கோபாலகிருஷ்ணன் - இசை ஆசிரியர்
9.கே. என். சசிகிரண் - குரலிசைக் கலைஞர்
10.குடந்தை ஜெ. தேவிபிரசாத் - வயலின் கலைஞர்
11.ஐ. சிவக்குமார் - மிருதங்க ஆசிரியர்
12.என்.எஸ். ராஜம் - மிருதங்க கலைஞர்
13.ஸ்ரீனிவாசன் - வீணை கலைஞர்
14.ராஜேஷ் வைத்யா - வீணைக் கலைஞர்
15.திருவாரூர் எஸ். சாமிநாதன் - புல்லாங்குழல்
16.கே.வி. இராமானுஜம் -புல்லாங்குழல்
17.டாக்டர் தி. சுரேஷ் சிவன் -தேவார இசைக் கலைஞர்
18.கல்யாணி மேனன் -மெல்லிசைப் பாடகி
19.திருக்கடையூர் முரளிதரன்-நாதஸ்வரக் கலைஞர்
20.ரெட்டியூர் செல்வம் - தவில் கலைஞர்
21.ஏ.ஹேம்நாத் - பரத நாட்டியம்
22.பிரசன்னா ராமசாமி - நாடகக் கலைஞர்
23.எப். சூசை மாணிக்கம் - நாடக நடிகர்
24.ஆர்யா - திரைப்பட நடிகர்
25.அனுஷ்கா -திரைப்பட நடிகை
26.தமன்னா - திரைப்பட நடிகை

பி.பி.சி - 650 பேர் வேலை இழப்பு !!!


லண்டன் அரசு ஒலிபரப்பு நிறுவனமான பி.பி.சி. நிறுவனம் ரேடியோ மற்றும் டி.வி. ஒலிபரப்புகளை நடத்தி வருகிறது. நீண்ட காலமாக பி.பி.சி. ரேடியோ 32 மொழிகளில் ஒலிபரப்பி வந்தது. இந்திய மொழிகளான இந்தி, தமிழ், வங்காளம், நேபாளி மொழிகளிலும் ரேடியோ ஒலிபரப்புகள் உள்ளன. இவற்றில் ஆயிரக் கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பல்வேறு மொழிகளிலும் ஒலிபரப்பு செய்வதில் அதிக அளவில் செலவாகிறது. இதை கட்டுப்படுத்த பி.பி.சி. நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக 7 மொழிகளின் ஒலிபரப்பை நிறுத்த பி.பி.சி. முடிவு செய்துள்ளது. அல்பேனியன், வெசிடோனியன், போர்ச்சுகீஸ், ஆப்ரிக்கன், செர்பியன் மொழிகள் உள்ளிட்ட 7 ஒலிபரப்புகள் நிறுத்தப்படுகின்றன.

இதனால் இந்த துறைகளில் பணியாற்றிய 650 ஊழியர்களும் வேலை இழக்கின்றனர். பி.பி.சி. ஒலிபரப்பு செலவுக்கு இங்கிலாந்து வெளியுறவு இலாகா மூலம் பணம் ஒதுக்கப்பட்டு வந்தது. இப்போது செலவுக்கு தேவையான பணம் ஒதுக்கப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் பிரதமர் தேர்தல் 16 தடவை தோல்வி!!!


நேபாளத்தில் பிரதமராக இருந்த மாதவ்குமார் நேபாள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது.

கடந்த 7 மாதங்களில் 16 தடவை அதற்கான தேர்தல் நடந்தது. ஆனால் பிரதமர் தேர்வு தோல்வியில் முடிந்தது. இதை தொடர்ந்து அனைத்து கட்சிகள் அடங்கிய அரசை அமைக்க ஜனாதிபதி ராம்பரன்யாதவ் முயற்சி மேற்கொண்டார். அந்த முயற்சியும் தோல்வி அடைந்தது.

இதை தொடர்ந்து மீண்டும் பிரதமர் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. இது குறித்து பாராளுமன்ற அலுவல் ஆலோசனை கமிட்டி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.முடிவில், வருகிற பிப்ரவரி 3-ந் தேதி பிரதமர் தேர்தல் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதற்கான மனு தாக்கல் வருகிற 2-ந் தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பு ஆளும் கம்யூனிஸ்டு மற்றும் கூட்டணி கட்சிகள், நேபாளி காங்கிரஸ், மாவோஸ்யிட்டுகள் கட்சி தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு வெளியிடப்பட்டது.