ஒசாமா பின்லாடன் மீது அமெரிக்க & பாகிஸ்தான் கூட்டு நடவடிக்கை மூலம் சுட்டுக்கொல்லப்பட்டதை அமெரிக்க அதிபர் ஒபாமா உறுதிப்படுத்தியுள்ளார்.
தரைவழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்; கடந்த வாரமே இது நிகழ்ந்துவிட்டது; இருப்பினும் உறுதிப்படுத்துவதற்காகக் காத்திருந்தோம் என்று ஒபாமா கூறியுள்ளார்.
ஒசாமா கொல்லப்பட்டுவிட்டார் என ஏகாதிபத்திய சக்திகள் அறிவிப்பது இது 14வது தடவை. ஊடகங்கள் வாயிலாக ஓய்வு ஒழிச்சலின்றி பிரச்சாரம் செய்துவிட்டு தானாகவே அடங்கிவிடுவது வாடிக்கை தான் என்றாலும் இப்போது ஒபாமாவே அறிவித்து கொஞ்சம் உறுதிப்படுத்திருப்பது கொஞ்சம் புதியது.
நியூயார்க் வர்த்தக வளாக தாக்குதல் தொடர்பாக பின்லாடன் தேடப்படும் குற்றவாளி என அமெரிக்கா அறிவித்து, ஆப்கனிஸ்தான் முழுவதும் சல்லடை போட்டு தேடியது. ஆனால் பாகிஸ்தானில் கண்டுபிடிக் கப்பட்டு கொல்லப்பட்டதாக தற்போது அறிவித்திருக்கிறது.
ஒசாமா தன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாடுக்கள் குறித்து ஒருபோதும் ஒப்புக் கொண்டது இல்லை. செப்டம்பர் 11 தாக்குதல் சம்பவத்திலும் தான் மற்றும் தனது அமைப்பினர் சம்பந்தப்படவில்லை என தெரிவித்திருந்தார். எப்படியோ அந்த அத்தியாயம் முற்றுபெற்றது. ஆனால் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் இனி உலகத்தில் உள்ள அப்பாவிகளைத் துன்புறுத்தும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும் என ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகளின் கண்காணிப்பகம் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களைப் பலிவாங்கிய ஒசாமா பின்லேடன் என் ஆணையின்படி அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டுள்ளார். ‘அமெரிக்கா இஸ்லாத்துக்கு எதிராக இந்தப் போரை நடத்தவில்லை, இனியும் அவ்வாறு செய்யாது என்பதை மீண்டும் உறுதிபடுத்திக்கொள்கிறோம்’ என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார்.
எங்கள் நாட்டில் வெளியில் இருந்து யாரும் தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விடமுடியாது; அதை பாகிஸ்தான் ஒருபோதும் அனுமதிக்காது; இது தீவிரவாதத்திற்கு எதிரான முக்கிய வெற்றி என்று பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசாகிலானி தெரிவித்தார்.
பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டதோடு பாகிஸ்தான் மீது அமெரிக்கா நடத்தும் வான் தாக்குதல் ஒரு முற்றுப்புள்ளியாக மாறவேண்டும் என பாகிஸ்தானின் எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவரும் முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான்கான் தெரிவித்திருக்கிறார்.
பின்லாடன் கொல்லப்பட்டது இன்றைய உலகிற்கு முக்கியமான செய்தி. இதில் இருந்து தலிபான்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என ஆப்கன் அதிபர் ஹமித் கர்சாய் கூறியுள்ளார்.
அரபுலகின் புனிதப் போராளி ஒசாமாவின் படுகொலையை வன்மையாக கண்டிக்கிறோம். எல்லாம் வல்ல இறைவன் அவர் மீது கருணை காட்டி, உண்மை விசுவாசிகள், வீரதியாகிகள் வரிசையில் அவரை இணைத்துக் கொள்ளுமாறு பிரார்த்தனை செய்கிறோம் என பாலஸ்தீன முன்னணி அமைப்பான ஹமாசின் தலைவரும் பாலஸ்தீன முன்னாள் பிரதமருமான இஸ்மாயில் ஹனியா தெரிவித்துள்ளார்.
ஒசாமா கொல்லப்பட்டது நீதிக்கான வெற்றி, சுதந்திரத்திற்கான வெற்றி; இந்த வெற்றியின் மகிழ்ச்சியில் அமெரிக்கர்களுடன் இஸ்ரேலியர்களும் பங்குகொள் கின்றனர் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித் திருக்கிறார்.
ஒசாமா கொல்லப்பட்ட செய்தி உலக மக்களுக்கு நிம்மதி அளிக்கும் செய்தி என பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்திருக்கிறார்.
‘‘ஒண்ட இடமில்லாத, ஒழிய இடமில்லாத, நீட்டி படுக்க முடியாத, ஒரு தம்ளர் தண்ணீரில் ஒழு செய்துவிட்டு பல வேலை தொழுகையை நிறைவேற்றி, ஒரு நாளைக்கு ஒரு வேலை உணவு மட்டும் உண்டு, பல நாட்கள் மலை முகட்டிலும், பாறை இடுக்குகளிலும், அடர்ந்த காட்டிலும், வேர்வை ஆறாக ஓடும் பாலைவனத்திலும், கையில் ஒரு குவாட்ஸ் கெடிகாரம் கூட கட்டாமல் (சாட்டிலைட்டில் தெரிந்துவிடும் என்று) வாழ்ந்த கடந்தகால வாழ்க்கை ஒசாமா அவர்களுக்கு மறுமையில் சொர்க்கத்தை வாங்கி தரும் என்பது நிச்சயம்.
அவருடைய சொத்துக்கும் பணத்திற் கும் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து இருக்கலாம். தனது சிறுநீரக உபாதை, நீரிழிவு இவற்றிற்கு கூட சரியான மருத்துவம் செய்ய முடியாமல் இந்த அமெரிக்க நாய்களுக்கு பயந்து ஒளிந்து வாழ்ந்த வாழ்க்கைக்கு, இறைவன் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சொர்க்கத்தை கொடுப்பான், இத்தனை கஷ்டங்களையும் அவர் தாங்கிப் பிடித்து இஸ்லாமிய சகோதரன் அமெரிக்க நாயால் சாகக்கூடாது என்று தான் தவிர அவர் எந்த சுய நலத்திற்காகவும் இத்தனைக் கஷ்டங்களையும், துன்பங்களையும், வேதனைகளையும் அனுபவித்து செல்ல வில்லை’’
தமிழின் முன்னணி செய்தி நாளேட்டில் வெளிநாட்டு வாசகர் ஒருவர் மேற்கண்ட தனது கருத்தினை பதிந்து இருந்தார்.
வலைதளங்கள், காட்சி ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் என பலவும் ஒசாமாவின் மரணம் (?) குறித்து விரிவாக விவாதித்து வந்தாலும் ஒசாமா ஒரு கூர்மையான ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக விளங்கினார். சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பை அகற்றி பெரும் சாதனை படைத்தார். ஆப்கானிஸ்தானின் வீரப்போராளிகளோடு அவர் அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பையும் சாய்க்கும் முயற்சியில் இறங்கும்போது தான் அவருக்கு கடுமையாக எதிர்ப்புகள் வந்தன.
இரட்டைக் கோபுர வளாக தாக்குதலில் தானோ தனது அமைப்போ ஈடுபடவே இல்லை என ஒசாமா பகிரங்கமாக மறுத்தார். அதனை அல்ஜசீரா தொலைகாட்சிக்காக தய்சீர் அலூனி என்ர்கா செய்தியாளர் ஒசாமாவிடம் நேர்காணலாக பதிவு செய்தார். அதனை 2011 ஆம் ஆண்டு சி.என்.என் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. ஆனால் அமெரிக்காவை அம்பலப்படுத்த யார்தான் விரும்புவார்கள்?
உண்மையை வெளிக்கொண்டுவர முயன்ற செய்தியாளர் தய்சீர் அலூனி, ஸ்பெயின் அரசால் கைது செய்யப்பட்டு சிறைக்கொட் டடியில் இன்றும் வாடி வருகிறார்.
அல்காய்தா, ஒசாமா, பயங்கரவாதம், இஸ்லாமிய தீவிரவாதிகள் என்ற சொற்கள் எல்லாம் ஒரு தீய நோக்கத்தோடு, வியூக நோக்கத்தோடு பரப்பப்படும் பரப்புரை என்பதை ஏற்றுக்கொள்பவர்கள் கூட தவறாகப் பார்க்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எது எப்படியோ ஒசாமா ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இரண்டாம் சேகுவாராவாக இந்த பூமி பந்தில் வாழும் உரிமை சுவாசிக்கும் மக்களால் நம்பப்படுகிறார் என்பது உண்மை.
ஒசாமா பற்றிய விவகாரம் என்றாலே பொய்களுக்கு இறக்கை முளைத்து பூலோகம் முழுவதும் பறக்கத் தொடங்கி விடுகிறது.
எத்தனை முறைதான் கொல்வார்கள் ஒசாமாவை?
ஒசாமாவை தனது படையினர் சுட்டுக்கொன்று விட்டதாக எத்தனை முறைதான் கொல்வார்கள் ஒசாமாவை? ஒசாமாவை தனது படையினர் சுட்டுக்கொன்று விட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்திருக்கிறார். ஒசாமா கொல்லப்பட்டதாக அறிவிக்கப்படுவது இது முதல் முறையல்ல. பலதடவை இதுபோன்ற அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு சந்திசிரித்த கதை மனித உரிமை ஆர்வலர்களால் மறக்க முடியாதது.
டிசம்பர் 26, 2001ஆம் ஆண்டு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ, ஒசாமா கொல்லப்பட்டு விட்டதாக பாக்ஸ் தொலைக்காட்சியில் அறிவித்தார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து ஒசாமா மீண்டும் (?) கொல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஆதரவு ஊடகங்களும் ஒசாமா கொல்லப்பட்டதாக பல தடவை அறிவித்துள்ளன. ஆனால் சில காலங்கள் கழித்து மீண்டும் அவைகள் ஒசாமா கொல்லப்பட்டார் என கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் மீண்டும் மீண்டும் அறிவிப்பது வாடிக்கை.
திரும்பத் திரும்ப எப்படி ஒருவர் சாவார்? செத்து செத்து விளையாடுவது அவரது பொழுதுபோக்கா என்ன?
தற்போது அவர் இறந்து போனதாக குறிப்பிட்டு வெளியிடப்படும் புகைப்படங்கள் அனைத்தும் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட புகைப்படங்கள் என்றே நடுநிலை ஊடகங்கள் அடித்துக் கூறுகின்றன. நடைபெற்ற சம்பவங்கள் உண்மை என்றால் முழுமையான வீடியோ பதிவுகளை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் டி.என்.ஏ. ஆய்வுகள் செய்து உடலை உறுதிப் படுத்தி இருப்பதாக கூறப்படுவதையும் நம்ப முடியாததாகவே உள்ளது.
நடுநிலையான எப்பக்கமும் சாராத ஆய்வு நிபுணர்களைக் கொண்டு டி.என்.ஏ. ஆய்வுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் தனது அரசியல் செல்வாக்கை நிமிர்த்தவும் எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறவும் ஒபாமா செய்திருக்கும் சித்து வேலையாக இது இருக்கக்கூடும் என்றே அடித்துக் கூறுகிறார்கள் நடுநிலை செய்தியாளர்கள்.
Thanks - TMMK

No comments:
Post a Comment