தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் ப்ளஸ் 2 தேர்வில் 90 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தஞ்சை மாவட்டத்தில் ப்ளஸ் 2 தேர்வில் 177 பள்ளிகளைச் சேர்ந்த பத்தாயிரத்து 554 மாணவர்கள், 13 ஆயிரத்து 566 மாணவிகள் என 24 ஆயிரத்து 120 பேர் தேர்வு எழுதியதில் ஒன்பதாயிரத்து 162 மாணவர்கள், 12 ஆயிரத்து 508 மாணவிகள் என 21 670 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 90 சதவீத தேர்ச்சியாகும். தஞ்சை மாவட்டம் கடந்த 2008 - 09ம் ஆண்டில் 90.17 சதவீதம், 2009 - 10ல் 90 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
தஞ்சை மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களையும் பட்டுக்கோட்டை லாரல் மேல்நிலைப்பள்ளி கைப்பற்றியது. இப்பள்ளி மாணவர் வி.விக்னேஷ்வரன் தமிழ் 194, ஆங்கிலம் 192, இயற்பியல் 199, வேதியியல் 199, உயிரியல் 199, கணிதம் 200 என ஆயிரத்து 183 மார்க் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றார். இவரது தந்தை வெங்கடாசலம் ஆலடிக்குமூலை துவக்கப்பள்ளியில் ஆசிரியராகவும், அவரது தாயார் சாந்தி திட்டக்குடி அரசு பள்ளியில் ஆசிரியராகவும் பணி செய்கின்றனர்.
""வகுப்புக்கு விடுமுறை எடுக்காமல் முழுமையாக வந்து, பாடங்களை கவனிப்பேன். அன்றைய பாடத்தை அன்றே படித்து முடிப்பேன். தனி பயிற்சி ஏதும் எடுத்துக் கொள்ளவில்லை. நான் இதே பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., படித்து 484 மார்க் பெற்று, பள்ளியில் முதலிடம் பெற்றேன்.
தற்போது மாவட்டத்தில் முதலிடம் பெற்றது பெருமை. சிறு வயது முதல் விமானத்தை பார்க்கும்போது விமானம் ஓட்ட வேண்டும் என விரும்புவேன். ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து விமானியாக பணி செய்ய விருப்பம்,'' என்றார்.
அதே பள்ளி மாணவர் ராம்குமார் தமிழ் 196, ஆங்கிலம் 189, இயற்பியல் 199, வேதியியல் 200, உயிரியல் 196, கணிதம் 198 என ஆயிரத்து 178 மார்க் பெற்று இரண்டாம் இடம் பெற்றார்.
இவரது தந்தை கனகசபை வியாபாரம் செய்து வருகிறார். தாய் வாசுகி. அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த ராம்குமார், ""டாக்டராகி கிராமப்புறங்களில் சேவை செய்ய வேண்டும். எனது பெற்றோரும், வகுப்பாசிரியர்களும் எனக்கு வழிகாட்டினர்,'' என்றார். அதே பள்ளி மாணவர் முகம்மது இம்தியாஸ் தமிழ் 190, ஆங்கிலம் 191, இயற்பியல் 198, வேதியியல் 200, உயிரியல் 198, கணிதம் 200 என ஆயிரத்து 177 மார்க் பெற்று மூன்றாமிடம் பெற்றார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த இவர், ""பாடங்களை முழுமையாக படிப்பேன். மாநில அளவில் ரேங்க் பெறுவேன் என எதிர்பார்த்தேன்.
கம்ப்யூட்டர் இன்ஜினியராக வேண்டும் என்பது விருப்பம்,'' என்றார். இம்மாணவர்களை கலெக்டர் சண்முகம் பாராட்டி, நூல்கள் பரிசாக வழங்கினார்.

No comments:
Post a Comment