புதுடில்லி: இன்று வெளியான சட்டசபை தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. நலத்திட்டங்களுக்கு மக்கள் ஆதரவு தருவார்கள் எங்கள் ஆட்சி நல்ல ஆட்சி என்ற பேச்சுக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர். 5 மாநிலங்களில் வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகள் ஆளும் இடதுசாரி கட்சியினருக்கும், காங்கிரசுக்கும் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சட்டசபை ஆயுட் காலம் முடிந்த தமிழகம், புதுச்சேரி , மேற்குவங்கம், அசாம் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 13 ம் தேதி முதல் தமிழகம் , புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒரே கட்டமாகவும், அசாமில் 2 கட்டமாகவும், மேற்குவங்கத்தில் 5 கட்டமாகவும் தேர்தல் நடந்தது.இதுவரை இல்லாத அளவிற்கு தேர்தல் முடிவுகள் அறிந்து கொள்ள ஒரு மாதம் காத்திருக்க வேண்டியிருந்தது. இன்று காலை ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இதில் அனைத்து மாநிலங்களிலும் ஆளும்கட்சியினருக்கு பலத்த அடி விழுந்துள்ளது. தமிழகத்தில் தி.மு.க.,வுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டுள்ளது. மொத்தம் இந்த கூட்டணி 30 தொகுதிகளையாவது பிடிக்குமா என்ற நிலை எழுந்துள்ளது. அ.தி.மு.க., பெரும்பான்மை பெற்று வருகிறது. இந்த கூட்டணி 200 க்கும் மேற்பட்ட இடங்களை பிடிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழக அமைச்சர்கள் பலரும் தோல்வியை சந்தித்து்ள்ளனர். இது போல மேற்குவங்கத்தை பொறுத்தவரையில் 30 ஆண்டு காலமாக இடதுசாரி ஆதி்ககம் இருந்த இந்த மாநிலத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது..
இடதுசாரிகள் ஆட்சி செய்த கேரளா, மேற்குவங்கம் பெரும் தோல்வியை சந்திக்கிறது. காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த அசாம் மாநிலம் மட்டும் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் நிலையில் உள்ளது. தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியை இழக்கிறது. அ.தி,மு.க., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிபீடத்தில் அமருகிறது.புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர். ,காங்கிரஸ் - அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஆளும் காஙகிரஸ் ஆட்சியை இழக்கிறது.
ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி ;மம்தா மகிழ்சி: மேற்குவங்கத்தில் கிடைத்திருக்கும் இந்த வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மத்திய ரயில்வே துறை அமைச்சருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இன்றைய தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் மம்தா நிருபர்களிடம் கூறுகையில்;
இது மக்களுக்கும் , ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி . எங்கள் மீது நம்பிக்கையுடன் ஓட்டளித்துள்ளமைக்கு நாங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மக்கள் நலனில் அக்கறையுடன் மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவோம் , சர்வாதிகாரத்திற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. நாங்கள் நல்ல நிர்வாகத்தை தருவோம் . இவ்வாறு மம்தா கூறினார்.
தி.மு.க., ஆட்சியின் மீது வெறுப்பு ஜெ., பத்தரிகையாளர்களுக்கு பேட்டி : தேர்தல் வெற்றிக்காக தமிழக மக்களுக்கு முதலில் தமது நன்றியை உரித்தாக்குவதாக ஜெ., தெரிவித்தார். இந்த தேர்தல் வெற்றி ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்றார். தேர்தலில் பணபலம் தோற்கடிக்கப்பட்டுள்ளதி.மு.க., ஆட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். மக்கள் தேர்தலுக்காக காத்திருந்தனர். வாய்ப்பு கிடைத்ததும் தி.மு.க., ஆட்சியை தூக்கி எறிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தமிழகத்தின் பொருளாதார நிலையை அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு சீரமைக்கும். தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சியின் போது பொருளாதார நிலை சீர்தூக்கியே இருந்திருக்கிறது.
தேர்தல் கமிஷனுக்கு பாராட்டு : தமிழக சட்டசபை தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்திய தேர்தல் கமிஷனுக்கு மனமார்ந்த் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் 18 மாதங்களில் நிறைவேற்றப்படும் என்றார்.
No comments:
Post a Comment