09 May 2011

பிளஸ் டூ: பாடம் வாரியான ரேங்க் பட்டியல்.


சென்னை: இன்று பிளஸ் டூ முடிவுகள் வெளியாகின. இதில் ஒசூர் மாணவி கே. ரேகா 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

பாடம் வாரியான தரவரிசைப் பட்டியல் வருமாறு,

கணினி அறிவியல்:

கணினி அறிவியலில் 223 பேர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில் செங்கல்பட்டு எச்.எப்.சி. மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மகாலட்சுமி 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1189. கோவை அவிலா கான் மெட்ரிக் பள்ளி மாணவி அர்ச்சனா கணினி அறிவியலில் 200 மதிப்பெண்களுடன் மொத்தம் 1181 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். திருச்சி ஆர்.எஸ்.கே. பள்ளி மாணவி திவ்யா 1174 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவரும் கணினி அறிவியலில் 200 மதிப்பெண் பெற்றுள்ளார்.

விலங்கியல்:

இந்த ஆண்டு விலங்கியலில் ஒருவர் கூட 200க்கு 200 மதிப்பெண் வாங்கவில்லை. சேரன்மாதேவி, வீரவநல்லூர் புனித ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி சிவகாமி விலங்கியலில் 199 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் எஸ்,ஏ.பட்டினம் சகாயராணி பெண்கள் பள்ளி மாணவி ஏ.சங்கீதா இரண்டாவது இடத்தையும், கோவை மாவட்டம் சர்கார்சமக்குளம் அரசு பள்ளி மாணவி எல். சண்முகப்பிரியா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தாவரவியல்:

இந்த ஆண்டு தாவரவியலில் 4 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் 1167 மதிப்பெண் பெற்றுள்ள திருவாரூர் ரஹ்மத் மெட்ரிக் பள்ளி மாணவி அயனுல்மர்லியா தாவரவியலில் 200 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் 1150 மதிப்பெண்கள் பெற்றுள்ள தக்கலை புனித மேரி ஜார்ஜெட்டி பள்ளி மாணவி இர்பானும், மூன்றாவது இடத்தில் 1094 மதிப்பெண்கள் பெற்றுள்ள அருப்புக்கோட்டை எஸ்.எச்.என்., எத்தல் ஹார்வி பள்ளி மாணவி எஸ். மாலதியும் உள்ளனர். இவர்கள் இருவரும் தாவரவியலில் 200 மதிப்பெண் வாங்கியுள்ளனர்.

உயிரியல்:

இந்த ஆண்டு உயிரியல் பாடத்தில் 615 பேர் 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இதில் 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ள ஒசூர் ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகா உயிரியலில் 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். 1188 மதிப்பெண்கள் வாங்கியுள்ள சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி கணேஷ் இரண்டாவது இடத்தில் உள்ளார். 1187 மதிப்பெண்கள் பெற்றுள்ள நாமக்கல் மாவட்ட கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி மாணவி தக்சினி மூன்றாவது இடத்தில் உள்ளார். இவர்கள் அனைவரும் உயிரியலில் 200-க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

வேதியியல்:

இந்த ஆண்டு வேதியியல் பாடத்தில் ஆயிரத்து 243 பேர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் 1190 மதிப்பெண்கள் பெற்றுள்ள ஒசூர் ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகா வேதியியலில் 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளார். 1189 மதிப்பெண்கள் பெற்றுள்ள செங்கல்பட்டு எச்.எப்.சி. மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மகாலட்சுமி இரண்டாவது இடத்திலும், 1188 மதிப்பெண்கள் பெற்றுள்ள சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி கணேஷ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இவர்கள் இருவரும் வேதியியலில் 200 மதிப்பெண்கள் வாங்கியுள்ளனர்.

இயற்பியல்:

இந்த ஆண்டு இயற்பியல் பாடத்தில் 646 பேர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் 1190 மதிப்பெண்கள் பெற்றுள்ள ஒசூர் ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகா இயற்பியலில் 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளார். 1189 மதிப்பெண்கள் பெற்றுள்ள செங்கல்பட்டு எச்.எப்.சி. மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மகாலட்சுமி இரண்டாவது இடத்திலும், 1188 மதிப்பெண்கள் பெற்றுள்ள சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி கணேஷ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இவர்கள் இருவரும் இயற்பியலில் 200 மதிப்பெண்கள் வாங்கியுள்ளனர்.

கணிதம்:

இந்த ஆண்டு அதிகபட்சமாக 2 ஆயிரத்து 720 மாணவ-மாணவிகள் கணிதப் பாடத்தில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் 1190 மதிப்பெண்கள் பெற்றுள்ள ஒசூர் ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகா இயற்பியலில் 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளார். 1189 மதிப்பெண்கள் பெற்றுள்ள செங்கல்பட்டு எச்.எப்.சி. மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மகாலட்சுமி இரண்டாவது இடத்திலும், 1188 மதிப்பெண்கள் பெற்றுள்ள சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி கணேஷ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இவர்கள் இருவரும் கணிதத்தில் 200 மதிப்பெண்கள் வாங்கியுள்ளனர்.

ஆங்கிலம்:

ஆங்கிலத்தில் ஒசூர் ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளி மாணவிகள் கே.ரோகா 1190 மதிப்பெண்களுடன் முதல் இடத்திலும், அதே பள்ளியைச் சேர்ந்த மாணவி பி. எஸ். ரேகா 1186 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்திலும், சென்னை சூளைமேடு டி.ஏ.வி., மெட்ரிக் பள்ளி மாணவி கே.அட்சயா மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இதில் ஒசூர் மாணவிகள் 200-க்கு 195 மதிப்பெண் எடுத்துள்ளனர்.

No comments: