தமிழகத்தை மின் வெட்டு இல்லாத மாநிலமாக்கவும், மின் பற்றாக்குறையை போக்கவும், மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் சூரிய ஒளி மின்சார பயன்பாட்டை கொண்டு வருவது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக கடுமையான மின் தட்டுப்பாடு நிலவுகிறது. மின் பற்றாக்குறையை சமாளிக்க, மாநிலம் முழுவதும் தினசரி மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது. சென்னையில் தினமும் ஒரு மணி நேரமும், மற்ற இடங்களில் மூன்று மணி நேரமும் மின் வெட்டு உள்ளது. இது தவிர, சென்னையில் மின் பராமரிப்பு பணி என்ற பெயரில், ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, எட்டு மணி நேர மின் தடையும் அமல்படுத்தப்படுகிறது.மின் வெட்டால் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டதுடன், தொழிற்சாலைகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வேலைவாய்ப்பு பற்றாக்குறை, உற்பத்தி பாதிப்பு, பொருளாதார வீழ்ச்சி போன்ற பல பின்விளைவுகள் ஏற்படுகின்றன. மின் வெட்டு பிரச்னை, சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிரான கதாநாயகனாகவே விளங்கியது.
இந்நிலையில், புதிதாக அமைந்துள்ள அ.தி.மு.க., அரசு, "மின் வெட்டை நீக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என அறிவித்துள்ளது. இதன்படி, இன்னும் மூன்று மாதங்களில் மின் வெட்டை பாதியளவாகக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரிகளுடன், மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் முதற்கட்ட ஆலோசனை நடத்தியுள்ளார். மின் தட்டுப்பாட்டை போக்க, மின் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க ஆலோசனை நடந்து வருகிறது.
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் வினியோக கழக பொறியாளர் ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் 10 ஆயிரம் மெகா வாட்டுக்கான மின் உற்பத்தி மையங்கள் அரசு சார்பிலும், 5,600 மெகா வாட் மின் உற்பத்தி மையங்கள் தனியார் சார்பிலும் அமைக்கப்பட்டுள்ளன. நிலக்கரியை பயன்படுத்தி அனல் மின் நிலையம், நீர்தேக்க அணைகளில் ஹைட்ரோ நிலையங்கள், காற்றாலை, வாயு மின் உற்பத்தி மற்றும் பயோமாஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, 10 ஆயிரம் மெகா வாட் உற்பத்திக்கு பதில் 7,300 மெகா வாட் மின்சாரம் தான் சராசரியாகக் கிடைக்கிறது. இதனால், ஏற்கனவே இருந்த உற்பத்தியில் 3,000 மெகா வாட் உற்பத்தி குறைவு ஏற்பட்டுள்ளது. இதுதவிர, கூடுதலாக 1,500 மெகா வாட் மின்சாரம் வழக்கத்தை விட கூடுதலாக தேவைப்படுவதால், தற்போது 4,500 மெகா வாட் பற்றாக்குறை உள்ளது. காற்றாலை மற்றும் ஹைட்ரோ நிலையங்களில், வெயில் காலத்தில் மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும்.
இதற்கு, வெயில் கால சூரிய சக்தியை பயன்படுத்தி, மின் உற்பத்தி திட்டங்களை அதிகரித்தால், பற்றாக்குறையை பெருமளவு சமாளிக்க முடியும். இந்தியாவில் பெங்களூரிலும், மும்பையிலும் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்கள் உள்ளன. பெங்களூரில் அரசு மற்றும் தனியார் கட்டடங்களில், சூரிய ஒளி மின் உற்பத்தி கருவிகள் பொருத்துவது, கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு, மின் பற்றாக்குறை ஓரளவு கட்டுப்படுத்தப்படுகிறது.இதேபோல், தமிழகத்திலும் சூரிய ஒளி மின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை செயல்படுத்த, மத்திய மரபு சாரா எரிசக்தி துறையிலிருந்து மானியமும் கிடைக்கும். நேரு சூரியசக்தி மின் உற்பத்தி திட்டத்தில், சூரிய சக்தி மின் உற்பத்தி கருவிகள் பொருத்துவதற்கு, மத்திய அரசு 30 சதவீத மானியம் தருகிறது.
இத்துடன் தமிழக அரசும் சில சலுகைகளை வழங்கி, சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முந்தைய அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், மழைநீர் சேமிக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது போல், அனைத்து வகை தகுதியான அரசு மற்றும் தனியார் கட்டடங்களிலும் சூரிய மின் உற்பத்தி திட்டத்தை கட்டாயமாக்குவது குறித்து, உரிய ஆலோசனை நடந்து வருகிறது.

No comments:
Post a Comment