முல்லைப் பெரியாறு அணைக்கட்டு உயரத்தை உயர்த்த மறுத்து, அதன்மூலம் பயனடையும் தென்மாவட்ட விவசாயிகளின் வேளாண்மைத் தொழிலை வீணடித்த கேரளா, ஈழத்தமிழர் விஷயத்திலும் மலையாள வெறிபிடித்த உயரதிகாரிகள் துரோகத்தையே செய்தனர்.
தற்போது எஞ்சியிருக்கும் தமிழகத்தின் பொருளாதாரத்தைச்சுரண்ட தமிழகத்துக்குள்ளேயே வேறூன்றி விட்டார்கள். நம்மை ஓட்டாண்டியாக்காமல் விட மாட்டார்கள்'' என்ற பகீர் தகவலுடன் பேசினார் பாலமுருகன் என்ற இளைஞர்.
தமிழ் சமுதாயத்தில் தங்கம் என்பது திருமணம், காதுகுத்து, சடங்கு நிகழ்ச்சிகளில்தான் பயன்படுத்துவார்கள். அப்போதுதான் நகைக்கடைக்குச் சென்று நம் மக்கள் நகைகள் வாங்குவார்கள். ஆனால் சமீப காலமாக அத்தியாவசியப் பொருட்களை தினசரி வாங்குவதுபோல, நகைகள் வாங்குவதைப் பழக்கப்படுத்தி வருகிறார்கள். இதுக்குக் காரணம், தமிழகத்தில் பிரம்மாண்ட ஷோரூம்களை திறந்து வைத்திருக்கும் கேரள நிறுவனங்கள். "கல்யாண்', "பீமா', "மலபார் கோல்டு', "ஜாய் ஆலுக்காஸ்', "ஜோஸ் ஆலுக்காஸ்', "கஸானா' என்று ஏகப்பட்ட கேரளக்காரர்களின் நகைக்கடைகளும் தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் திறக்கப்பட்டு விட்டன. இவர்களுக்கு அரபு நாட்டிலிருந்து தங்கம் எப்படி வருகிறது என்பதற்கு பல கதைகள் சொல்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்படி உருவான பல கேரள நகை ஷோரூம்கள் நகை வாங்குவது மக்களின் கவுரவத்திற்கு முக்கியமானது; வாழ்க்கைக்குத் தேவையானது என்பதுபோலும், தாங்கள்தான் மிகவும் குறைவான விலையில் சுத்தமான தங்கத்தை கொடுப்பதாகவும் விளம்பரம் செய்வதால், இப்போது வார விடுமுறையில் ஷாப்பிங் செய்வதுபோல் நம்ம மக்கள் நகைக்கடைகளில் தங்கம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் பலகோடி ரூபாய்க்கு தமிழர்களிடம் விற்று விடுகிறார்கள் கேரளாக்காரர்கள். இதனால், குறைந்த அளவில் வியாபாரம் செய்து கொண்டிருந்த பாரம்பரியமான தமிழக நகை வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு சென்று விட்டார்கள். பிறந்த நாள், கல்யாண நாள், பண்டிகை மட்டுமில்லாமல், ஜவுளிக்கடைகள் தள்ளுபடி அறிவிக்கும் ஆடி மாதத்தில் கூட, ஏதாவதொரு பொய் விளம்பரம் செய்து நகைகளை விற்கிறார்கள். தமிழகத்திலுள்ள சில ஜோசியக்காரர்கள், புரோகிதர்கள், ஊடகங்களுக்கு பணத்தைக் கொடுத்து அட்சய திரிதியை அன்றும் பலகோடி ரூபாய்க்கு நகைகளை விற்று தமிழர்களை ஓட்டாண்டியாக்குகிறார்கள். இப்படி ஒரு ஊர் விடாமல் எல்லா ஊர்களிலும் மெகா ஷோரூம்களை திறக்கும் கேரளாக்காரர்களுக்கு ஒரு உச்சவரம்பைக் கொண்டு வரவேண்டும்'' என்றார்.
நாம் தமிழர் கட்சி' ஜெரோம்குமார், ""அதிகமான நகைக்கடைகளை மட்டும் மலையாளிகள் தமிழகத்தில் திறக்கவில்லை. வட்டிக்கடைகளையும் திறந்து வருகிறார்கள். கிராமப்புறங்களிலெல்லாம் முத்தூட் ஃபைனான்ஸ், முத்தூட் மின்கார்ப், மணப்புரம் லோன் என்று திறந்து வைத்துள்ளனர். ஒரு கிராம் தங்கத்துக்கு யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு 2000 ரூபாய் தருவதாக விளம்பரம் செய்கிறார்கள். கிராம மக்கள் வழக்கமாக வைக்கும் கூட்டுறவு பேங்கில் கிராமிற்கு 1200 ரூபாய்க்கு மேல் தருவதில்லை. அதுமட்டுமில்லாமல் அங்கு நகையை அடகுவைத்து பணம் வாங்கி வருவதற்கும் ரொம்ப லேட்டாகும். ஆனால், மலையாளிகள் மிகவும் நவீனமயமாக தங்களது வட்டிக்கடைகளை வைத்து ஆட்கள் போனவுடனேயே அவங்க கேட்ட பணத்தை கொடுத்துடுறாங்க. ஆனா ரொம்ப விவரமாப் பண்றாங்க. ஒரு பவுனுக்கு எட்டாயிரம் ரூபா வாங்குனா ஒரு ரூபா வட்டி, பத்தாயிரம் வாங்குனா இரண்டு ரூபா வட்டி, அதுக்கு மேல போனா மூணு ரூபா வட்டி. வட்டிய மாசா மாசம் கட்டணும். இல்லேன்னா... அபராத வட்டி, அந்த வட்டி, இந்த வட்டினு ஏத்திப் போட்டு, நம்ம நகைய நாம திரும்ப மீட்க முடியாது.
இப்படி டெக்னிக்கலா தமிழர்களை இந்த மலையாளிகளின் வட்டிக்கடைகள் சுரண்டி வருகின்றன . இதுக்கு ஒரு கட்டுப்பாடே கிடையாது. இப்படி தமிழர்களின் ஏழ்மையையும், கஷ்டத்தையும் பயன்படுத்திச் சுரண்டுற மாதிரி, தமிழர்கள் யாராவது கேரளாவுல எந்த வியாபாரமாவது செய்ய முடியுமா? விரைவில் கேரள ஆதிக்கத்துக்கு எதிராப் போராடுகின்ற சூழல் தமிழகத்துல வரும்'' என்றார்.
ராமேஸ்வரம் அப்துல்லாவோ, நகைக்கடை, வட்டிக்கடை மட்டுமல்ல, தமிழகத்துல உள்ள சிறுவியாபாரமான டீக்கடையிலிருந்து பெரிய தொழில் வரைக்கும் மலையாளிகள் எவ்விதப்பிரச்சினையுமில்லாமல் செய்யுறாங்க. தமிழக கடற்கரையோரம் மீன், இறால்களை மொத்தமாக பர்ச்சேஸ் செய்பவர்கள் மலையாளிகள்தான். இந்த எக்ஸ்போர்ட் நிறுவனங்கள் தங்களுக்குள் பேசி வைத்துக்கொண்டு குறைந்த விலைக்குத்தான் கடல் உணவுப் பொருட்களை வாங்குகிறார்கள். "பேச்சாளை' என்ற ஒரு வகை மீன். அதை அவர்கள் "மத்தி' என்பார்கள். தமிழக மக்கள் யாரும் இதை உண்பதில்லை. ஆனால் மலையாளிகளோ தங்கள் கடலில் இந்த மீன் கிடைக்காது என்பதால், நம்ம ஊரில் தடை செய்யப்பட்ட வலைகளை கொடுத்து பிடிக்கச் சொல்கிறார்கள். பிடித்தவுடன் இந்த மீன் அழுக ஆரம்பித்துவிடும். அதனால் நாற்றம் குடலைப் புரட்டும். லாரியில் கொண்டு போகும் போது அந்த கழிவுநீர் வடிந்து நாள் முழுக்க ஏரியாவே துர்நாற்றம் வீசும். மாவட்ட நிர்வாகம் எவ்வளவோ எச்சரித்தும், கேரளக் காரர்கள் அழுகல் மீன் கொண்டு செல்வதை கட்டுப்படுத்த முடியவில்லை. அதுபோல் மண்டபம் பகுதியில் நண்டு எக்ஸ்போர்ட் செய்கிறவர்களும் மலையாளிகள்தான். தமிழர்களை லேபர் கான்ட்ராக்ட் போல் வைத்துக் கொண்டு, தொழிலாளர் சட்டத்தையோ, தொழிற்சாலை சட்டத்தையோ பின்பற்றாமல் தொழில் செய்கிறார்கள். இதில் நடிகர் மோகன்லாலின் கம்பெனியும் அடக்கம்'' என்று சுகாதார ரீதியாகவும் தமிழகத்தை நாசம் செய்யும் விவரங்களைக் கூறுகிறார்.
பணப்புழக்கம் அதிகமுள்ள நகரங்களில் நகைக்கடைகளையும், விவசாயம், மீன்தொழில், சிறு வியாபாரம் நடக்கும் ரூரல் நகரங்களில் வட்டிக்கடைகளையும் திறந்து தமிழக பொருளாதார வளத்தை மோசடியாக சுரண்டுகின்றனர் மலையாளிகள். முத்தூட் ஃபைனான்சின் ஒரு கிளையில், ""மக்களை ஏமாற்றும் விதத்தில் விளம்பரம் செய்து அளவுக்கதிகமான வட்டி போடுகிறீர்களாமே?'' என்றோம்.
அப்படியெல்லாம் இல்லை. வழக்கமான வட்டிக்கடைகளை விட நாங்கள் குறைவாகத்தான் வட்டி போடுகிறோம். அது மட்டுமில்லாமல் வாங்கிய கடனை தவணை முறையில் செலுத்தவும் ஏற்பாடு செய்திருக்கிறோம். துரிதமாக மக்களுக்கு பணியாற்றுகிறோம்'' என்று தங்கள் நிறுவனத்துக்கு வக்காலத்து வாங்கியே பேசினார்கள், தமிழர்களான அந்த பணியாளர்கள்.(Thanks. Nakkeeran)
திறமை இருக்கிறது இதனால் என்ன என்பது பலபேர் வாதம் செய்கின்ரனர். நன்றாக சிந்தித்துப்பாருங்கள். தமிழ்நாட்டில் பலபேர் வேறுதொழில் தெரியாமல் ஒரு பொற்கொல்லராகவோ, அல்லது வேறு எதாவது தொழில் செய்து பிழைக்கின்றனர். தமிழ்நாட்டு மக்களின் வறுமையையும், கஷ்டத்தையும் கண்டுபிடித்து இவர்களுக்கு வேலை தருவதுபோல் தந்து இவர்கள் வயிற்றில் அடிக்கின்றனர், பலபேர் வாழ்க்கையை பறிக்கின்றனர். இது என்ன நியாயம். பொருளாதார ரீதியாகத்தான் இந்திய தேசத்தையே கிழக்கிந்திய கம்பெனி கபளீகரம் செய்தது என்பதை, தமிழகத்தில் வேறூன்றி வரும் மலையாள நகைக்கடைகள், வட்டிக் கடைகளை பார்த்து தமிழர்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதே தமிழர் உணர்வாளர்களின் விருப்பம்.
Thanks - azifair-sirkali.
No comments:
Post a Comment