சானா: ஏமன் நாட்டில் அதிபர் பதவியிலிருந்து விலகுவதாக அதிபர் அலி அப்துல்லா சலேஷ் தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகளின் ஆலோசனையின்படி இம்முடிவை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் தான்வகித்து வந்த பொறுப்புகள் அனைத்தும் துணை அதிபரிடம்ஒப்படைப்பதாக அதிபர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 32 ஆண்டு காலமாக பதவி வகித்து வந்ததார்.
அதிபர் பதவிவிலக கோரி கடந்த 30 நாட்களுக்கும் மேலாக பல்வேறு போரட்டங்கள் நடைபெற்று வந்தது.
போராட்டத்தில் சுமார் 120 பேர் வரை கொல்லப்பட்டனர்.அதிபரின் பதவி விலகல் முடிவை அமெரிக்கா வரவேற்றுள்ளது.பதவி விலகல்குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏமன் எதிர்கட்சிதலைவர் யாசின் நோமன் உடனடியாக தேசிய ஐக்கிய அரசு பதவி ஏற்க இயலாது என்று தெரிவித்துள்ளார்.
பதவி இழந்த டுனிஷியா அதிபர் ஜினி அல் அபிதினி பென் அலி, எகிப்து அதிபர் ஹோசினி முபாரக், வரிசையில் தற்போது ஏமன் அதிபரும் இணைந்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட் நாடுகள் ஏமன் அதிபர் பதவி விலக ஒப்பந்தங்கள் செய்திருந்தன.
அதன்படி துணை அதிபரிடம் அதிகாரத்தை ஒப்பøடைப்பது, இடைக்கால அரசு மூலம் அதிபர் தேர்தலை நடத்துவது, அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது போன்ற ஒப்பந்தங்கள் செய்திருந்தன.

No comments:
Post a Comment