சென்னை: தமிழகத்தில் எழுத்தறிவு விகிதம் 6.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியா அளவில் எழுத்தறிவில் தமிழகம் 13-வது இடத்தில் உள்ளது.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கண்க்கெடுப்பின்படி இந்தியாவில் அதிக மக்கள் தொகையுள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 7-வது இடத்தை தக்க வைத்துள்ளது.
பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
தமிழகத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 995 பெண்கள் விகிதம் உள்ளது. இதுவே கடந்த 2001-ம் ஆண்டில் ஆயிரம் ஆண்களுக்கு 987 பெண்களாக இருந்தது.
இந்திய மக்கள் தொகை 17.64 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் மகக்ள் தொகை 15.60 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலத்தில் உள்ள பெண்களை விட 1 லட்சத்து 78 ஆயிரத்து 784 ஆண்கள் அதிகம் உள்ளனர்.
குழந்தைகள் எண்ணிக்கை குறைவு
தமிழகத்தில் 3 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 871 ஆண்களும், 3 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரத்து 87 பெண்கள் உள்ளனர்.கடந்த 2001-ம் ஆண்டில் தமிழகத்தில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 72 லட்சத்து 35 ஆயிரத்து 160 பேர் இருந்தனர். ஆனால் தற்போது 68 லட்சத்து 94 ஆயிரத்து 821 பேர் தான் இருக்கின்றனர்.
இது தவிர தமிழகத்தில் எழுத்தறிவு விகிதம் 6.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியா அளவில் எழுத்தறிவு விகிதத்தில் தமிழகம் 13-வது இடத்தில் உள்ளது.
No comments:
Post a Comment