30 April 2011

இளமை காக்கும் உணவு முறைகள்!


சிலருக்கு எப்போதும் சூடாகவே இருக்கும். இதற்குக் கணைச்சூடு என்று பெயர். இந்தக் கணைச்சூடு உள்ளவர்கள் உடம்பில் மினுமினுப்பு இருக்காது. முகத்தில் களை இருக்காது. நடையில் சுறுசுறுப்பு இருக்காது. புத்தியில் தெளிவு இருக்காது. இந்தக் கணைச்சூட்டைப் போக்கச் சிறந்த மருந்து தேனும் வெங்காயமும். உணவில் வெங்காயத்தை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினசரி தேன் சாப்பிட வேண்டும். கணைச்சூடு மாறிவிடும்.

நோய்களைப் பரப்பும் விஷக்கிருமிகள் பெனிசிலின் மருந்தைவிட வெள்ளைப் பூண்டு மிக வேகமாகக் கொல்கிறது. வெள்ளைப் பூண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு நோய்கள் அவ்வளவாக வருவதில்லை.

எலுமிச்சப்பழ சர்பத்தில் கொஞ்சம் இஞ்சி இரசத்தைச் சேர்த்துப் பருகினால் அஜீரணம் சீக்கிரம் குணமாகும்.

எலுமிச்சம் பழத்தை வாரம் ஒரு முறை தலையில் தேய்த்துக் குளித்து வாருங்கள். வந்தால் இது கண்களுக்கும் உடலுக்கும் நல்லது. உடல் சூட்டைத் தணிப்பதில் எலுமிச்சம் பழத்திற்கு இணை எலுமிச்சம் பழந்தான்!

சிரியுங்கள்; சும்மா சிரியுங்கள் சிரிப்பு உடலுக்கு நலத்தையும் பலத்தையும் கொடுக்கிறது. சிரிக்கும்போது உடல் குலுங்குகிறது. உடல் குலுங்கும்போது அதனால் உறுப்புகள் பிடித்துவிடப் படுகின்றன. கணையம் என்னும் உறுப்பும் உற்ற உறுப்புகளும் இந்தச் சிரிப்பினால் பலம் பெறுகின்றன. இயற்கை மருந்துகளில் சிறந்த மருந்து சிரிப்பே. சிரிப்பின் மூலம் உடம்புக்குக் கிடைக்கும் பயிற்சியை வேறு எதன் மூலமாகவும் பெற முடியாது.

பீட்ரூட் கிழங்கிலிருந்து சர்க்கரை தயாரிக்கிறார்கள். இந்தப் பீட்ரூட் சர்க்கரை நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. இந்த பீட்ரூட் சர்க்கரை நம் நாட்டில் செய்யப்படுவது இல்லை. நம் நாட்டில் கரும்பில் இருந்து தயாரிக்கும் கரும்புச் சர்க்கரைதான் கிடைக்கிறது.

உடம்பில் அலர்ஜி ஏற்பட்டு உடம்பு அரிக்க ஆரம்பித்தால் கொஞ்ச நாட்களுக்கு உடம்புக்குச் சோப்புப் போட்டுக் குளிக்கக் கூடாது. சிகைக்காய்த் தூளையோ பாசிப்பயறு மாவையோதான் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

No comments: