24 April 2011

சமையல் எரிவாயு... இனி ஆன்லைனில் பதிவு செய்யலாம்!


Gas Cylinderசென்னை: இனி வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான சமையல் எரிவாயுவை ஆன்லைனில் முன் பதிவு செய்து கொள்ளலாம்.

சமையல் எரிவாயு கேட்டு விண்ணப்பித்து வீட்டிற்கு வந்து சேரும் வரை பெண்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். கேஸ் ஏஜென்சிகளின் டெலிபோன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புக் செய்வதற்குள் கேஸ் தீர்ந்து விடும் நிலை.

எப்போது போன் செய்தாலும் தொடர்பும் கிடைப்பதில்லை. எனவே பதிவு செய்வதற்கு பெரும் பாடுபட வேண்டி உள்ளது. அதனால் கேஸ் ஏஜென்சிக்கே நேரில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த சிரமங்கள் குறித்து எண்ணை நிறுவனங்களுக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து ஆன்லைனில் எரிவாயுவை முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இண்டேன் எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு 25-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

கம்ப்யூட்டர் அல்லது செல்போன் மூலமாக இண்டேன் சமையல் கியாஸ் வாடிக்கையாளர்கள் 8124024365 என்ற பத்து இலக்க எண்ணை அழுத்தி பதிவு செய்யவேண்டும்.

இந்த எண் அனைத்து இண்டேன் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். அதன் பின்னர் ஒவ்வொன்றாக அழுத்தி நடைமுறைப் படுத்தவேண்டும்.

தமிழ் வழியில் பதிவு செய்ய எண்-1, ஆங்கில வழியில் பதிவு செய்ய எண்-2 அழுத்த வேண்டும். நுகர்வோர் எண், செல்போன் எண், வினியோகஸ்தர் எண் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக பதிவு செய்யவேண்டும். இவ்வாறு 8 நடைமுறைகளை பின்பற்றினால் வாடிக்கையாளர்கள் பதிவு ஏற்றுக்கொள்ளப்பட்டு உறுதி செய்யப்படும். இதற்கு கட்டணம் எதுவும் இல்லை.

இந்த முறையில் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் கியாஸ் புக்கிங் செய்யலாம்.

எச் பி கேஸ் வாடிக்கையாளர்கள்...

தாங்கள் விரும்பிய நேரத்தில் பதிவு செய்து கொள்ள முடியும். இதேபோல எச்.பி. கேஸ் வாடிக்கையாளர்கள் 9092223456 என்ற எண் மூலம் பதிவு செய்ய வேண்டும். ஆன்லைனில் எரிவாயு பதிவு செய்வதில் பெண்கள், வயதானவர்கள், படிக்காதவர்கள் சிரமப்படுவார்கள் என்பதால், அவர்கள் எளிதாக பதிவு செய்வதற்கு வழிமுறைகளை கேஸ் ஏஜென்சிகள் வழங்கி வருகிறார்கள்.

சென்னையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டம், படிப்படியாக மற்ற நகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.

No comments: