12 April 2011

ஐநா இளையோருக்கான தூதராக விக்ரம் நியமனம்.


Vikramசென்னை: பிரபல நடிகர் 'சியான்' விக்ர‌ம் ஐக்கிய நாடுகள் சபையின் ஹாபிடேட் (ஐநாவின் மனித குடியேற்ற திட்டம்) பிரிவின் இளைஞர் தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் இருந்து நான்கு நபர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஆசியாவில் இருந்து தேர்வு நடிகர் விக்ரம் தேர்வாகியுள்ளார். கென்யாவின் நைரோபியில் நடைபெறும் 23 வது நிர்வாக் குழு கூட்டத்திற்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார். 11 ம் தேதி துவங்கி 15 ம் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற நைரோபி சென்றுள்ளார் விக்ரம்.

வறுமை ஒழிப்பிற்கும், நீடித்த நகர்புற வளர்ச்சிக்கும், குறிப்பாக ஏழைகளின் வாழ்வு மேம்படவும் பாடுபடும் பெருமைக்குறிய அமைப்போடு இணைந்து பணியாற்ற வாய்பு கிடைத்தது மிகப்பெரிய கவுரவம் என்று நைரோபியில் இருந்து நடிகர் விகரம் கூறியுள்ளார்.

"ஐநா சபையின் ஹாபிடேட் பிரிவின் நோக்கம், ஆரோக்கியமான நகர்புற வளர்ச்சி மற்றும் சுற்றுசூழல் வளர்ச்சி மூலம் பசுமை பொருளாதாரத்தை உருவாக்குவது, மக்களுக்கு அவசர தேவை, தினசரி பயன்பாடு மற்றும் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வசதி வழங்குவதோடு, வீட்டு வசதியை அளித்து சேரிகளே இல்லாமல் செய்வதே. அந்தப் பணியில் என்னையும் சந்தோஷத்துடன் இணைத்துக் கொள்கிறேன்" என்றார் விக்ரம்.

சினிமாவில் மக்கள் தனக்கு அளித்துள்ள இந்த நல்ல நிலைக்கு நன்றி கடனாக ஐநா அமைப்பு மூலம் அதன் நோக்கம் நிறைவேற உதவி செய்து மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக விக்ரம் தெரிவித்தார்.

வளமான எதிர்காலத்திற்காக நகரங்களை மாற்ற இந்த அமைப்பு முயல்வதாகவும் இந்த மாற்றத்தில் பங்கெடுக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

ஏற்கெனவே 'சஞ்ஜீவினி' என்ற அறக்கட்டளையின் தூதராக உள்ளார் விக்ரம். சிறப்பு தேவை கொண்ட மாணவர்களின் பள்ளியான வித்யா சுதாவின் நல்லெண்ண தூதாரகவும் உள்ளார்.

மாற்றுத்திறனாளிகள், பெண்கள், ஏழைகள், மற்றும் குழந்தைகள் நலனுக்கான விகரம் பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனராகவும் விக்ர‌ம் உள்ளார். இலவச கண் சிகிச்சை முகாம்களை நடத்தி வரும் காசி கண் சிகிச்சை முகாம் திட்டத்தின் பின்னணியிலும் அவர் இருக்கிறார். இந்தியா முழுவதும் ஆயிரகணக்கான ஏழைகளின் பார்வையை இந்த திட்டம் மீட்டுத் தந்துள்ளது.

No comments: