ஜார்ஜ்டவுன்: மரண தண்டனையை ஒழிக்கும் சட்டத்திற்கு கயானா நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து அங்கு மரண தண்டனை முறை முடிவுக்கு வருகிறது.
புதிய சட்டப்படி கொலைக் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் இனி மரண தண்டனை விதிக்கப்படாது. மாறாக, பாதுகாப்புப் படையினர் மற்றும் நீதித்துறையைச் சேர்ந்தவர்களை கொலை செய்வோருக்கு மட்டும் மரண தண்டனை விதிக்கப்படும்.
மரண தண்டனை முறை ஒழிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஏற்கனவே தண்டனை விதிக்கப்பட்டு மரணத்தை எதிர்நோக்கியுள்ள 40 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அந்த நாட்டு எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து எதிர்க்கட்சி செய்தித் தொடர்பாளர் கிளாரியாஸா ரிஹெல் கூறுகையில், 40 பேருக்கும் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்றுஅரசைக் கோரியுள்ளோம்.
அவர்களுக்கு மரண தண்டனைக்குப் பதில் ஆயுள் தண்டனை தரலாம் என்று அறிவுறுத்தியுள்ளோம் என்றார்
No comments:
Post a Comment