வாஷிங்டன், அக்.27- ஆப்கன் போர் தொடர்பாக விக்கிலீக்ஸ் இணையதளத்திடம்(www.wikileaks.org) மேலும் பல ரகசிய ஆவணங்கள் இருக்கலாம் என்று அமெரிக்க ராணுவத்தின் தலைமையகமான பென்டகன் கூறியுள்ளது.
இத்தகவலை பென்டகனின் செய்தித்தொடர்பாளர் டேவ் லபான் வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"ஆப்கானிஸ்தான் போர் தொடர்பாக விக்கிலீக்ஸ் இணையதளத்திடம் இன்னும் 15 ஆயிரம் ஆவணங்கள் உள்ளன. மேலும், ஆப்கன் தொடர்பாக அவர்களிடம் விடியோவும் உள்ளது. இதுகுறித்து அந்த இணையதளத்தின் நிர்வாகம் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளது. அவர்களிடம் மேலும் பல ரகசிய ஆவணங்கள் இருக்கலாம் என்று நம்புகிறோம்." என லபான் தெரிவித்துள்ளார்.
ஆப்கன் போர் தொடர்பான ஆவணங்களை வெளியிட வேண்டாம் என்றும், அவற்றை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் விக்கிலீக்ஸ் நிர்வாகத்திடம் அமெரிக்க பாதுகாப்புத்துறை ஏற்கெனவே பகிரங்கமாக கேட்டுக்கொண்டது. ஆனாலும், அந்த ஆவணங்களை வெளியிடப்போவதாக விக்கிலீக்ஸ் இணையதளம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment