டெல்லி: காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் வெற்றி டென்னிஸ் மூலம் வந்துள்ளது. இன்று காலை நடந்த ஒற்றையர் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபன்னா, உகாண்டாவின் ராபர்ட் புயின்சாவை வீழ்த்தினார்.
காமன்வெல்த் போட்டிகள் நேற்று பிரமாண்ட தொடக்க விழாவுடன் தொடங்கின. இன்று முதல் போட்டிகள் தொடங்கியுள்ளன.
இந்தியாவுக்கு முதல் வெற்றி டென்னிஸ் மூலம் வந்துள்ளது. இன்றுகாலை நடந்த ஆடவர் ஒற்றையர் போட்டியில் போபண்ணா தன்னை எதிர்த்து மோதிய உகாண்டா வீரர் ராபர்ட்ஸை 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.
அடுத்து இன்று நடைபெறும் கலப்பு இரட்டையர் போட்டியில் போபண்ணா-நிரூபமா சஞ்சீவ் ஜோடி, ஆஸ்திரேலியாவின் பால் ஹென்லி-ரோடினோவா அனஸ்டாசியா ஜோடியை எதிர்கொள்கிறது.
இன்று நடைபெறும் பிற போட்டிகளில் பூஜாஸ்ரீ வெங்கடேஷ், ருஷ்மி சாட்டர்ஜி ஆகியோர் ஒற்றையர் போட்டிகளிலும், சானியா மிர்ஸா, லியாண்டர் பயஸ் கலப்பு இரட்டையர் போட்டியிலும் மோதவுள்ளனர்
No comments:
Post a Comment