தட்கல் முறையில் ரேஷன் கார்டுகள் சப்ளை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. பணிமாற்றம், பழைய ரேஷன் கார்டுகளில் பெயர் நீக்கத்திற்கு பின் புதிய கார்டு வாங்க 2 மாதம் காத்திருக்க வேண்டியுள்ளது. இவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதில் பாதிக்கப்படுகின்றனர். இவர்களுக்கு தட்கல் முறையில் ரேஷன் கார்டுகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இம்முறையில் கார்டு பெற சிவில் சப்ளை தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு வாரத்திற்குள் தட்கல் ரேஷன் கார்டு வழங்கப்படும். சிவில் சப்ளை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பணிமாற்ற சான்றிதழ்/பழைய ரேஷன்கார்டிலிருந்து பெயர் நீக்கத்திற்கான ஆதாரம், வி.ஏ.ஓ., சர்டிபிகேட் போன்றவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் (ரூ. 100 கட்டணத்துடன்). புதிய கார்டு வழங்கும் வரை விண்ணப்பதாரர் தரும் முகவரிக்குட்பட்ட ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கலாம். வழக்கமான ஆய்வு பணிக்கு பின் 2 மாதத்திற்குள் புதிய கார்டு வழங்கப்படும். தட்கல் கார்டு காலாவதியாகிவிடும்,' என்றார்
No comments:
Post a Comment