திருவனந்தபுரம் : விவாகரத்து கோரி பிரிய இருந்த ஐந்து தம்பதிகள், குடும்ப நல கோர்ட்டில் ஆஜராக வக்கீல்கள் வராததால், அத்தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர முடிவெடுத்தனர்.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் வக்கீல் மீது போலீசார் பொய் வழக்கு போட்டதாகவும், தாக்கியதாகவும் கூறி, வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள வஞ்சியூர் குடும்ப நல கோர்ட்டிலும், வக்கீல்கள் பலர் ஆஜராகாமல் இருந்து வருகின்றனர். கடந்த 20, 21 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த விவாகரத்து கோரிய மனுக்கள் மீதான விசாரணையில், வக்கீல்கள் ஆஜராகவில்லை. இதனால், 20ம் தேதி நான்கு தம்பதியினரும், 21ம் தேதி ஒரு தம்பதியும் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து, மீண்டும் ஒன்றாக வாழ முடிவெடுத்தனர். குடும்ப நல கோர்ட் நீதிபதி இ.எம்.முகமது இப்ராகிம் நடத்திய சமாதான பேச்சு வார்த்தையின் முடிவில், அத்தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர முடிவெடுத்தனர். இத்தம்பதியினர் பல ஆண்டுகளாக விவாகரத்து கோரி குடும்ப நல கோர்ட் படியேறி இறங்கி வந்தனர்
No comments:
Post a Comment