04 October 2010

தர்மபுரியில் கைலி-டீ சர்ட்டில் போய் பஸ்களில் ரெய்டு-கலக்கிய கலெக்டர் ஆனந்தகுமார்

தருமபுரி: தர்மபுரி மாவட்டத்தில் தனியார் பஸ்களில் கடந்த ஒரு வாரமாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பது குறித்து வந்த புகார்களைத் தொடர்ந்து, கைலி, டீ சர்ட் அணிந்து போய், பஸ்களில் ஏறி இறங்கி அதிரடியாக சோதனை நடத்தினார் தர்மபுரி மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார்.

தர்மபுரி மாவட்டத்தில் தனியார் பஸ்களில் கடந்த ஒரு மாதமாக வழக்கத்திறக்கு மாறாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இது குறித்த புகார் கலெக்டருக்கு சென்றது.

இதனையடுத்து, தர்மபுரி மாவட்டத்திற்குப் புதிய கலெக்டராகப் பொறுப்பேற்றுள்ள டாக்டர் ஆனந்தகுமார் நேற்று டி-சர்ட் மற்றும் கைலியுடன் மாறுவேடத்தில் சென்று தனியார் பஸ்சில் சோதனை செய்தார்.

பெண்ணாகரத்தில் இருந்து அவர் டிக்கெட் எடுத்து அருகில் உள்ள ஒரு ஊருக்கு பயணம் செய்தார். அந்த பஸ்சில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்ட கலெக்டர் ஆனந்தகுமார் அந்த தனியார் பஸ் மீதுநடவடிக்கை [^] எடுக்க உத்தரவிட்டார்.

இதற்கிடையே, தர்மபுரி- திருப்பத்தூர் மெயின் ரோட்டில் நாயக்கன்கொட்டாய் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் [^] இன்று காலை 7 மணிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து 6 தனியார் பஸ்களை சிறைபிடித்தனர்.

இதில் 3 பஸ்கள் தர்மபுரியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற பஸ்கள் ஆகும். 3 பஸ்கள் திருப்பத்தூரில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த பஸ்கள் ஆகும்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், தர்மபுரி தாசில்தார், மதிகோன் பாளையம் மற்றும் கிருஷ்ணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளனர். அவர்கள் கிராம மக்களுடன் பேச்சு நடத்தி வருகின்றனர்.

கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக ஏற்கனவே சேலம், ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பொதுமக்கள் பஸ்களை சிறைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.

தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகளில் அவர்களாகவே கட்டணத்தை உயர்த்தி வசூலித்து வருகின்றனர். ஆனால் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

சமீபத்தில் கூட சேலத்தில் தனியார் பேருந்துகளின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக [^] எம்.எல்.ஏ ஒருவர் சாலை மறியலில் தனியாக ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட கலெக்டரின் அதிரடி நடவடிக்கை அப்பகுதி மக்களுக்கு சற்றே ஆறுதலை அளித்துள்ளது.

No comments: