மெக்சிகோ: 20 வயதேயான குற்றவியல் படிப்பு படித்து வரும் மாரிசால் வாலஸ் கார்சியா என்ற மாணவி வன்முறைக்கு பெயர் போன மெக்சிகோவின் குவாடலுப் டிஸ்ட்ரிடோ பிராவோ நகரின் தலைமை காவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பதவிக்கு விண்ணப்பித்த ஒரே நபர் இவர் தான். இந்த தகவலை மெக்சிகோ ஊடகம் தெரிவித்தது.
மாரிசால் வாலஸ் கார்சியா கடந்த திங்கட்கிழமை அன்று அமெரிக்க எல்லையில் இருக்கும் இந்நகரின் பாதுகாப்பு அதிகாரியாக
பொறுப்பேற்றார்.
இந்நகரின் மக்கள் தொகை வெறும் 10,000தான். ஆனால் மெக்சிகோவில் இருக்கும் நகரங்களிலேயே இந்நகரம் தான் வன்முறை அதிகம் நடக்கும் இடம் ஆகும். இது சியுடாட் ஜுவாரஸில் இருந்து கிழக்கில் 80 கிமீ தொலைவில் உள்ளது.
இதன் முன்னாள் மேயர் ஜீசஸ் மானுவல் லாரா ரோட்ரிகஸ் கடந்த ஜூன் 19-ம் தேதி சியுடாட் ஜுவாரஸில் உள்ள அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு இறந்தார்.
காவல்துறை தலைமை அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளது குறித்து வாலஸ் கார்சியா கூறுகையில்,
போதைப் பொருட்கள் கும்பலை எதிர்த்து நான் போராடப்போவதில்லை. அதை மற்ற அதிகாரிகள் கவனித்துக் கொள்வார்கள். மாறாக மக்களையும், பள்ளிகளையும் காப்பது தான் என் கடமை. மேலும், அபகரிக்கப்பட்டுள்ள இடங்களை மீட்டு உரியவர்களிடம் கொடுப்பதும் என் கடமை என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment