31 October 2010
மாவட்ட வக்ப் அலுவலகங்களின் முகவரிகள்.
வக்ப் ஆய்வாளர்
822 அண்ணா சாலை
மக்கா மஸ்ஜித் வளாகம்
மவுண்ட் ரோடு
சென்னை 600002
தொலைபேசி:044 -28520477
காஞ்சிபுரம் & திருவள்ளூர்
வக்ப் ஆய்வாளர்
பெரிய பள்ளிவாசல் வளாகம்
பூவிருந்தவல்லி
சென்னை 600056
தொலைபேசி: 044 - 26494523
கடலூர் & விழுப்புரம்
வக்ப் ஆய்வாளர்
(நூர் முஹம்மது ஷா அவுலியா தர்கா)
512 காந்தி ரோடு
பண்ருட்டி
கடலூர் மாவட்டம்
தொலைபேசி: 04142 - 242660
வேலூர் & திருவண்ணாமலை
வக்ப் ஆய்வாளர்
12 / 16 காந்தி ரோடு
வேலூர் - 632004
தொலைபேசி: 0416 - 2225770
சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி & தர்மபுரி
வக்ப் ஆய்வாளர்
எண் 4 A & 5 A , முதல் மாடி
திப்பு சுல்தான் மார்கெட்
முதலாவது அக்ரகாரம்
சேலம் - 636001
தொலைபேசி - 0427 - 2263126
கோயம்புத்தூர், ஈரோடு & நீலகிரி
வக்ப் ஆய்வாளர்
எண்: 14 - 15 பள்ளிவாசல் வளாகம்
அவினாசி சாலை
உப்பிபாளையம்
கோயம்புத்தூர் - 641018
தொலைபேசி - 0422 - 2380685
திருச்சி, புதுகோட்டை, கரூர் & பெரம்பலூர்
வக்ப் ஆய்வாளர்
எண்: 12 கிலேடர் தெரு
திருச்சி - 2
தொலைபேசி - 0431 - 2703407
மதுரை, திண்டுக்கல் & தேனீ
வக்ப் ஆய்வாளர்
எண்: 1 டவுன் ஹால் ரோடு பள்ளிவாசல்
டவுன் ஹால் ரோடு
மதுரை - 625001
தொலைபேசி - 0452 - 2346053
ராமநாதபுரம், விருதுநகர் & சிவகங்கை
வக்ப் ஆய்வாளர்
தர்பம்சயனம் சாலை
வெளிப்பட்டினம்
ராமநாதபுரம் - 623 504
தொலைபேசி: 04567 - 220053
தஞ்சை, திருவாரூர் & நாகப்பட்டினம்
வக்ப் ஆய்வாளர்
27 நீதி நகர்,
ஜும்மா பள்ளிவாசல்
கோர்ட் ரோடு
தஞ்சாவூர் - 613 001
தொலைபேசி: 04362 273077
திருநெல்வேலி, தூத்துக்குடி & கன்னியாகுமரி
வக்ப் ஆய்வாளர்
54 ஹை ரோடு
திருநெல்வேலி - 627001 தொலைபேசி: 0462 - 2334062
'காவி பயங்கரவாதம்'
எல்லோரையும்போல் எனக்கும் முஸ்லிம் இளைஞர்கள் மேல்தான் சந்தேகம் வந்தது. அவர்களுக்குப் பிரச்னை இருந்தது உண்மைதான்... ஆனால், 'அதற்காக இப்படிச் செய்யலாமா?' என நினைத்தேன். ஊடகங்களும், முஸ்லிம் பயங்கரவாதம், தீவிரவாதம்பற்றி எழுதித் தள்ளின. ஆனாலும் எனக்குள் ஒரு சந்தேகம். அங்கு உள்ள முஸ்லிம்கள் ரொம்பவும் பயந்துபோய்த் தற்காப்பு நிலையில்தான் இருந்தார்கள். அவர்களா இப்படிச் செய்திருப்பார்கள்?
அடுத்த இரண்டு வாரங்களுக்குள், எனக்கு பதில் கிடைத்தது. தென் மண்டலக் காவல் துறை ஐ.ஜி-யான சஞ்சீவ் குமார் மற்றும் டி.ஐ.ஜி-யான கண்ணப்பன் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து வெடிகுண்டு வைத்தது இந்து முன்னணி உள்ளிட்ட இந்துத்துவவாதிகள்தான் என்பதை வெளிப்படுத்தினர். அது மட்டும் அல்ல, இரு சமூகங்களுக்குள் மோதலை உருவாக்கும் நோக்குடன், முஸ்லிம்கள் மீது பழி போடும் எண்ணத்துடன் இது செய்யப்பட்டது என்பதையும் விளக்கினர். அதில் 14 பைப் வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன. முன்னதாக பாபநாசம் காடுகளில் வெடித்துச் சோதனையும் செய்திருந்தனர். ரவி பாண்டியன், குமார், நாராயண தர்மா உள்ளிட்ட காவிக் கொடி ஏந்திய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதத்தைச் செய்து முடித்தவர்கள் இந்துத்துவ தீவிரவாதிகள். அப்போது கொல்லப்பட்டது தேசத் தந்தை என மக்களால் வணங்கப்பட்ட காந்தியடிகள். அவர் செய்த குற்றம், இந்தியாவை இந்து ராஷ்டிரமாக ஆக்குவதற்குத் தடையாக இருந்ததும், காவியும் திரிசூலமும் நம்முடைய அடையாளங்களாக வைக்க விடாமல் , அசோகச் சக்கரத்தை அதில் இடம் பெறக்கூடிய சூழலை உருவாக்கியதும் தான்.
காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே, முதல் குற்றவாளியாக நிறுத்தப்பட்ட சாவர்க்கர் ஆகிய இருவரின் பரம்பரையிலும் வந்த ஹிமானி சாவர்கரின் 'அபினவ பாரதம்' என்கிற அமைப்பு தொடர்புடைய தொடர் பயங்கரவாதச் செயல்களில் ஒன்று, கடந்த செப்டம்பர் 2008-ல் அம்பலப்பட்டபோதுதான் 'காவி பயங்கரவாதம்' என்கிற சொல்லைப் பலரும் உச்சரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மலேகான் என்னும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நகர் ஒன்றில் வெடிகுண்டு வெடித்து ஆறு பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். சாத்வி பிரக்ஞா தாகூர், தயானந்த தேஷ்பாண்டே என்ற இரு காவி உடைதாரிகள், ஸ்ரீகாந்த் புரோஹித், ரமேஷ் உபாத்யாயா என்ற இரு ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சாத்வி பிரக்ஞா, ஏ.பி.வி.பி., விசுவ ஹிந்து பரிஷத் முதலிய அமைப்புகளில் இருந்தவர். ராணுவ அதிகாரிகள், ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்தைக் கொண்டுவந்தவர்கள். இவர்கள் எல்லோரும் நாசிக்கில் உள்ள போன்சாலா மிலிட்டரி ஸ்கூல் என்கிற தனியார் ராணுவப் பள்ளியுடன் தொடர்பு உடையவர்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு பயங்கரவாதப் பயிற்சி அளிப்பது இந்தப் பள்ளியின் முக்கியப் பணி. இவர்கள் எல்லோரும் அபிநவ பாரதத்துடன் இணைந்து செயல்பட்டவர்கள். முசோலினியுடன் நேரடித் தொடர்பு வைத்திருந்த டாக்டர் மூஞ்சே இவர்களின் ஆதர்சம். இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றுவது இவர்களின் லட்சியம். பல்பானி (2003), ஜல்னா (2004), புர்னா (2004) ஆகிய இடங்களில் தொழுதுகொண்டு இருந்த முஸ்லிம்கள் மீது குண்டு வீசியவர்களும் இவர்களே என்றது விசாரணைக் குழு.
ஹைதராபாத்தில் மக்கா மசூதி, ஆஜ்மீர், நாண்டிட், மர்கோவா ஆகிய இடங்களில் நடைபெற்ற தாக்குதல்கள், விபத்துகள், குண்டு வெடிப்புகள் எல்லாவற்றுக்கும் இந்துத்துவ அமைப்புகளே பின்புலமாக இருந்துள்ளன. மலேகானில் சாத்வி பிரக்ஞாவின் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டு இருந்த குண்டுகள் வெடிக்கப்பட்ட இடம் 'சிமி' என்ற தடை செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்பு இருந்த கட்டடம் அருகில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்துத்துவவாதிகளிடம் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளுடன் ஒட்டுத் தாடி, தொப்பி முதலியவையும் இருந்தன.
கிழக்கு வர்ஜீனியாவில் உள்ள 'பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்புத் தொடர்பான ஆய்வு மையம்' பயங்கரவாத அமைப்புகளாக அறிவித்துள்ள பட்டியலில் உள்ள ஒன்று - ஆர்.எஸ்.எஸ்!
ப.சிதம்பரம் உள்துறை அமைச்சர் என்கிற வகையில் சரியான நேரத்தில் செய்துள்ள பொறுப்பான எச்சரிக்கை இது. இதற்கு இந்துத்துவவாதிகள் செய்யும் ஆர்ப்பாட்டம் முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைக்கும் முயற்சி. சிதம்பரம், இந்துக்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறார் என்றும், துறவின் அடையாளமாகவும், இந்திய மரபாகவும் உள்ள காவி என்கிற கருத்தாக்கத்தைக் கொச்சைப் படுத்திவிட்டார் எனவும் மோடி, ராஜ்நாத் சிங் முதலான பி.ஜே.பி. தலைவர்கள் கூச்சலிடுகின்றனர். உண்மை யிலேயே காவி மீது இந்த மரியாதை இருக்குமேயானால் காவி உடை அணிந்து இன்று கம்பி எண்ணிக் கொண்டு இருப்பவர்களைத்தான் கண்டித்திருக்க வேண்டும். அதைச் செய்யும் துணிவு உண்டா இவர்களுக்கு? மாறாக, இந்தக் காவி உடை தரித்தவர்கள் கைது செய்யப்பட்டபோது வெளிப்படையாக ஆதரித்தவர்கள் அல்லவா இவர்கள்!
'மென்மை இந்துத்துவா' என்னும் பெயரை சம்பாதித்துள்ள காங்கிரஸ், இதிலும் பின்வாங்குகிறது. வன்முறை என்பது எந்த ரூபத்தில் வந்தாலும் கண்டிக்க வேண்டியதுதான். முஸ்லிம் செய்தால் மட்டும் தவறு, இந்து செய்தால் சரி என்ற இரட்டை அளவுகோல் நாட்டுக்கு ஆபத்தானது!
நன்றி
ஜூனியர் விகடன்
Bomb plot raises doubts over UPS plane crash
"I think it would be very prudent to connect the dots in this incident," Dr Max Abrahms, a leading terrorism expert in the United States, told Gulf News.
Radio 2: Dubai Police issue a statement. Malak Harb
"It seems like common sense now and clearly there are similarities between the crash and this latest incident."
Both bombs found on Friday were addressed to synagogues in the Chicago area, contained PETN — a highly explosive material which could have brought down the planes. One bomb arrived on Thursday and had to remain at Dubai International Airport for 24 hours. Dubai Police received a tip-off via an international call.
Dubai Police Chief Lieutenant-General Dahi Khalfan Tamim said Dubai Police succeeded in detecting the package while security authorities charged with carrying out security tasks on Western cargo companies failed.
Dahi told Emirates TV that the UAE would announce the source of the packages "within the next 48 hours."
"The package arrived on Thursday and had to remain in the airport for 24 hours in what is known as a cooling series in order for the package to be searched," Saif Al Suwaidi, director of the General Civil Aviation Authority (GCAA) told Gulf News. "All packages receive extensive searching for security reasons."
Suspicious packages
On Saturday night, a GCAA source said that the package which was discovered was shipped from Sana'a on a Qatar Airways plane heading to Doha and then forwarded from that flight to Dubai. In Sana'a on Saturday, security authorities were questioning airport and cargo staff and checking at least 26 other suspicious packages.
US security officials say the plot has all of the hallmarks of Al Qaida, with President Barack Obama's counter-terror chief John Brennan laying the blame on the Yemeni franchise.
Saudi intelligence sources tipped off US officials about the threat to air cargo from Yemen.
The bomb found inside a cargo plane at East Midlands Airport could have exploded, British Home Secretary Theresa May said, adding that if it had detonated, the explosion could have brought down the aircraft.
An Emirates spokesperson said that its flights are all operating normally, after a flight from Dubai landed at JFK International Airport on Friday afternoon with a precautionary fighter escort.
இந்திய நாட்டிற்கு ரூ. 45 ஆயிரம் கோடி இழப்பு
மேலும் நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய மின் தொகுப்பில் இருந்து மின்சாரம் பகிர்ந்து அளிப்பது போன்ற வற்றால் மொத்த இழப்பு உற்பத்தியில் 29 சதவீதம் ஆகும்.
9 ஆண்டுகளுக்கு முன்னதாக கடந்த 2001-ல் வெறும் 3 சதவீத அளவு மட்டுமே இழப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த தகவலை மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த பத்தாண்டுகளை காட்டிலும் மின்சார இழப்பு என்பது அதிகரித்துவந்துள்ளது. ஆண்டு தோறும் இரண்டு மெகா திட்டங்கள் நடைபெற்றுவருகிறன்ன. அதன்மூலம் தலா 4 ஆயிரம் மொகாவாட் மின்சாரம் என 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகின்றன என கூறினார்.விழாவில் தொடர்ந்து பேசிய மத்திய மின்துறை அமைச்சர் சுபோத்கான்சகாய் கூறுகையில் : மின்சார இழப்ப்பை பொறுத்தவரையில் கடந்த 2001-02-ல் 32.86 சதவீதத்தில் இருந்த 2003-04-ல் 34.78 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2008-09-ல் 28.44 சதவீதத்தில் இருந்து 2009-10-ல் 29 சதவீதமாக அதிகரித்துள்ளது. மாநில அளவில் ஜார்கண்ட் மாநிலம் 51 சதவீதம், மத்தியபிரதேசம் 45 சதவீதம், பீகார் மாநிலம் 40 சதவீத அளவிற்கு மின்சார இழப்பு ஏற்படுகிறது.தனிமனிதன் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு 704 யூனிட் முதல் 712 யூனிட்வரை தேவைப்படுகிறது. இதில் 29 சதவீதம் இழப்பு உட்பட ஆகும். ஆண்டுதோறும் மின்சார பயன்பாடு அதிகரித்து வரும் வேளையில் மேலும் உற்பத்தியை பெருக்க மத்திய அரசு பல வழிகளில் முயற்சி செய்து வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.
30 October 2010
‘நேச்சர் 2010’
துபாய் நகராட்சி சார்பில் ‘நேச்சர் 2010’ எனும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று காலை அல் ஜடாஃப் பகுதியில் நடைபெற்றது.
துபாய் முனிசிபாலிட்டி கடந்த 1994-ம் ஆண்டு முதல் வருடந்தோறும் சுற்றுச்சுழல் விழிப்புணர்வு நிகழ்வினை நடத்தி வருகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.இந்நிகழ்வில் ஈடிஏ நிறுவன ஊழியர்கள், தமிழகம் , கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில அமைப்புகள் பங்கேற்றன.
இந்த நிகழ்ச்சிக்கு ஈடிஏ ஜீனத் நிறுவனம், யூனியன் பேப்பர் மில், டல்ஸ்கோ, அல்பா எமிரேட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் அனுசரணை வழங்கியிருந்தன.
அரோமா மொபைல்ஸின் புதிய டச் ஸ்கிரீன் போன் அரோமா ஏடி335
செல்போன்கள் மற்றும் உதிரி பாக விற்பனையில் புதிதாக நுழைந்துள்ள நிறுவனம் அரோமா மொபைல்ஸ். இது முதல் டச் ஸ்கிரீன்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பெயர் அரோமா ஏடி 335.இரட்டை சிம்களைப் பொருத்தக் கூடிய இந்த போனில், 2.0 இன்ச் டிஎப்டி டச் ஸ்கிரீ்ன் உள்ளது. ப்ளூடூத், டிஜிட்டல் கேமரா, வீடியோ பிளேயர், ரெக்கார்டர் போன்ற வசதிகள் உள்ளன. 1000 போன் எண்கள் வரை சேமிக்கலாம். மெமரி 4 ஜிபி வரை வைத்துக் கொள்ள முடியும்.ஜிபிஆர்எஸ், வாப், எம்எம்எஸ் ஆகிய வசதிகளையும் இதில் பெற முடியும். மொபைல் டிராக்கர், டார்ச், வாய்ஸ் சேஞ்சர்/பின்னணி இசை, ஆட்டோ கால் என சகல வசதிகளும் நிறைந்த போனாக இது உள்ளது. மொபைல் போனின் விலை ரூ. 2299 ஆகும்.
போனை வெளியிட்டுப் பேசிய நிறுவனத்தின் இயக்குநர் பவன் சத்தா பேசுகையில், வாடிக்கையாளர்களுக்கு புதியவற்றைத் தரும் நோக்கிலேயே இந்த புதிய வகை செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளோம். அந்த வகையில் டச்ஸ்கிரீன் வசதி கொண்ட போனாக அரோமா ஏடி335 விளங்குகிறது.விலையும் அதிகம் இல்லை. இதனால் சகல தரப்பினரும் இதை வாங்க முடியும் என்றார்.
ரூ. 3500க்கு லெமன் மொபைல்ஸின் 3ஜி போன்.இதேபோல லெமன் மொபைல்ஸ் நிறுவனம் ரூ. 3,500க்கு 3ஜி ஹேன்ட்செட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. நவம்பர் மாதத்திலிருந்து இது விற்பனைக்கு வருகிறது.இதுகுறித்து பாஸ்ட்டிராக் கம்யூனிகேஷனின் இயக்குநர் கோபால் கர்லா கூறுகையில், வாடிக்கையாளர்களுக்கு அதிக அம்சங்களைக் கொண்ட செல்போன் சாதனங்களை வழங்குவதே எங்களது நோக்கமாகும். அதிலும் 3 ஜி ஹேன்ட்செட் விற்பனை வரும் நாட்களில் பெரிய அளவில் அதிகரிக்கும். எனவேதான் புதிய வகை 3ஜி ஹேன்ட்செட்டை குறைந்த விலையில் நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்.
29 October 2010
2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ
யார் இந்த கிருஷ்ணன்...?!!
சமையல்கலை படிப்பு படித்து தங்க பதக்கம் வாங்கியவர் இவர்....பல விருதுகளையும் பெற்ற இவர் சில காலம் பெங்களூரில் பிரபல ஹோட்டலில் வேலை பார்த்தார், பின்னர் சுவிட்சர்லாந்தில் வேலை கிடைத்து அங்கே செல்வதற்கான ஏற்பாடுகளை யதேச்சையாக வழியில் ஒரு திடுக்கிடச் செய்யும் காட்சியை காண்கிறார். புத்திசுவாதீனமில்லாத ஒரு 80 வயது முதியவர் பல நாள் உணவில்லாமையால், தன் மலத்தை தானே எடுத்துண்ணும் கொடுமையான காட்சி! உடனே நம்மைப்போல, அருவருப்புடன் ஒதுங்கிச்செல்லாமல், கிருஷ்ணன் ஓடிச்சென்று அருகிலுள்ள கடையில் இட்லிப்பொட்டலத்தை வாங்கிக்கொண்டு வந்து, அந்த முதியவரின் கைகளை சுத்தப்படுத்திவிட்டு, தானே அந்த இட்லியை ஊட்டிவிடுகிறார்! அதற்கான சன்மானம், அந்த முதியவரின் பனித்துப்போன கண்களுடன்கூடிய ஒரு பார்வை! இந்தச் சம்பவம் அவரின் சராசரி இளைஞரின் கனவான “ஒரு பெரிய ஓட்டல் முதலாளியாவதை” தூள்தூளாக்கிவிடுகிறது! இந்த மாதிரி புத்தி சுவாதீனமில்லாதவர்களுக்காக உதவணும் என்று இவர் முடிவு செய்த போது இவரது வயது வெறும் 21
இப்போது 29 வயதாகும் கிருஷ்ணன் அவர்கள் காலை மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேலை உணவையும் கிட்டத்தட்ட 400 புத்திசுவாதீனம் இல்லாதவர்களுக்கு தினம் அளிக்கிறார் .... !! இத்துடன் முடிவது இல்லை இவரது வேலை....அந்த மக்களில் சிலருக்கு முடிவெட்டுவது, நகம் வெட்டுவது தொடங்கி அவர்கள் இறந்து விட்டால் கொல்லி போடுவது வரை இவரது தொண்டு நீள்கிறது.......!!
இப்பணிக்காக அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்தான், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த பத்து ஹீரோக்களுள் ஒருவர் என்னும் உயரிய பட்டத்துக்கான போட்டிக்குத் தேர்வானது! சி.என்.என். தேர்வு பட்டியலில் இடம்பெற்றதால் இப்போது 25,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றால், கிருஷ்ணனுக்கு 1,00,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும். அது, அவரது கனவுத் திட்டத்துக்கு உறுதுணை புரியலாம்.....!
கிருஷ்ணனுக்கு எப்படி ஓட்டு போடுவது
இவருக்கு எப்படி நாம் ஓட்டு போடுவது என்று பார்ப்போம். இந்த லிங்கில் செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். http://heroes.cnn.com/vote.aspx
இதில் நான் கட்டம் போட்டு காட்டி இருப்பது தான் நம்மாளு அவர் படத்தின் மீது க்ளிக் செய்யுங்கள்.
உடனே அவருடைய படம் கீழே இருக்கும் காலி கட்டத்தில் வந்திருக்கும்.
அடுத்து உங்களுக்கு தெரியும் இரண்டு வார்த்தைகளை அந்த காலி கட்டத்தில் சரியாக நிரப்புங்கள்.
அடுத்து கீழே உள்ள VOTE பட்டனை அழுத்துங்கள் அவ்வளவு தான் நம் தமிழனுக்கு உங்களால் ஒரு ஓட்டு அதிகமாகியது என்ற பெருமையோடு அந்த தளத்தில் இருந்து வெளியேறுங்கள்.
முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை தெரிவியுங்கள். நவம்பர் மாதம் 18 ஆம் தேதியோடு ஓட்டு போடுவது முடிகிறது. அதற்குள் மற்றவர்களுக்கு தெரிவிக்கவும்.
28 October 2010
அமைச்சர் உபயத்துல்லா மகன் உசேன் மரணம்.
தமிழக வணிகவரித்துறை அமைச்சர் உபயத்துல்லாவின் மகன் உசேன் (40). இவர் தஞ்சாவூர் மேரிஸ் கார்னர் பகுதியில் வசித்து வந்தார். அதே பகுதியில் வேறு ஒரு வீட்டில் அமைச்சர் வசித்து வருகிறார்.
திருமணமான உசேனுக்கு குழந்தைகள் இல்லை. தந்தைக்குச் சொந்தமான வணிக நிறுவனங்களை நடத்தி வந்தார். இவர் ஒரு முறை கைதாகி சிறைக்குச் சென்றுள்ளார்.
இன்று காலை வீட்டில் இருந்த உசேன் திடீர் என்று தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அதற்குள் அவர் வலி தாங்க முடியாமல் துடிதுடித்து இறந்தார். அவரின் உடலுக்கு தஞ்சை மாவட்ட திமுகவினர் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
27 October 2010
விக்கிலீக்ஸ் இணையதளத்திடம் மேலும் ரகசிய ஆவணங்கள்: பென்டகன்
இத்தகவலை பென்டகனின் செய்தித்தொடர்பாளர் டேவ் லபான் வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"ஆப்கானிஸ்தான் போர் தொடர்பாக விக்கிலீக்ஸ் இணையதளத்திடம் இன்னும் 15 ஆயிரம் ஆவணங்கள் உள்ளன. மேலும், ஆப்கன் தொடர்பாக அவர்களிடம் விடியோவும் உள்ளது. இதுகுறித்து அந்த இணையதளத்தின் நிர்வாகம் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளது. அவர்களிடம் மேலும் பல ரகசிய ஆவணங்கள் இருக்கலாம் என்று நம்புகிறோம்." என லபான் தெரிவித்துள்ளார்.
ஆப்கன் போர் தொடர்பான ஆவணங்களை வெளியிட வேண்டாம் என்றும், அவற்றை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் விக்கிலீக்ஸ் நிர்வாகத்திடம் அமெரிக்க பாதுகாப்புத்துறை ஏற்கெனவே பகிரங்கமாக கேட்டுக்கொண்டது. ஆனாலும், அந்த ஆவணங்களை வெளியிடப்போவதாக விக்கிலீக்ஸ் இணையதளம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஊழலில் உலகிலேயே முதலிடம் சோமாலியாவுக்கு!
பெர்லின்: ஊழலில் உலக அளவில் முதலிடம் வகிக்கிறது ஆப்ரிக்க நாடான சோமாலியா. இந்தப் பட்டியலில் 87 வது இடம் வகிக்கிறது இந்தியா!
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் இயங்கும் ஊழல் கண்காணிப்பு நிறுவனம் உலக அளவில் ஊழலில் முன்னணி வகிக்கும் நாடுகள் பட்டியலை ஆண்டு தோறும் வரிசைப்படுத்தி வெளியிட்டு வருகிறது. அந்த பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
உலக நாடுகள் உள்ள அதிகாரிகள், பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடம் இருந்து பல்வேறு கேள்விகளை கேட்டு அதற்கு அவர்களிடம் இருந்து பதில்களை பெற்றது. அதன் அடிப்படையில் ஊழல் புரியும் நாடுகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
அதன்படி சோமாலியா நாடுதான் ஊழலில் முதலிடத்தில் உள்ளது (ரேங்க் 178). இங்கு அரசுக்கு எதிராக தீவிரவாதிகள் ஈடுபடும் வன்முறை செயல்கள், கொலை, கொள்ளை போன்றவற்றால் அந்த நாடு வறுமையில் வாடுவதாக கூறப்படுகிறது.
178 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் ஜப்பான் 17வது இடத்திலும், இங்கிலாந்து 20-வது இடத்திலும், அமெரிக்கா 22-வது இடத்திலும், பாகிஸ்தான் 34-வது இடத்திலும் உள்ளது. இந்தியாவுக்கு இதில் 87 வது இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு 84வது இடத்திலிருந்தது.
அதே நேரத்தில் ஊழல் குறைந்த நாடுகள் வரிசையில் டென்மார்க், நியூசிலாந்து, சிங்கப்பூர், பின்லாந்து, சுவீடன், கனடா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லார்ந்து, நார்வே, போன்ற நாடுகள் உள்ளன.
ஊழல் குறைந்த டாப் 10 நாடுகள் பட்டியலில் 10-க்கு 9.3 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது டென்மார்க். இதற்கடுத்த இடத்தில் அதே புள்ளிகளுடன் நியூஸிலாந்தும், அடுத்த இடத்தில் 9.3 புள்ளிகளுடன் சிங்கப்பூரும், 9.2 புள்ளிகளுடன் பின்லாந்து நான்காவது இடத்திலும் உள்ளன.
ஸ்வீடன் 9.2 புள்ளிகள் பெற்று 5வது இடத்தில் உள்ளது. கனடா 8.9 புள்ளிகளுடனும், நெதர்லாந்து 8.8 புள்ளிகளுடன் 6வது இடத்திலும், ஸ்விட்ஸர்லாந்து 8.7 புள்ளிகளுடன் 7வது இடத்திலும், நார்வே 8.6 புள்ளிகளுடன் 8வது இடத்திலும் உள்ளன.
சோமாலியாவுக்கு 1.1 புள்ளி மட்டுமே பெற்று 178 வது ரேங்கில் உள்ளது.
ஆசிய கண்டத்தில் உள்ளவற்றில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியா, இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகள் அதிக ஊழல் மலிந்தவையாக பட்டியலிடப்பட்டுள்ளன.
26 October 2010
இலங்கையின் போர்க்குற்றம்.
| ||
இறந்த பிறகும் பெரும் பணம் ஈட்டுவோர் பட்டியலில் ஜாக்சனுக்கு முதலிடம்
மரணத்திற்குப் பிறகும் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் குறித்த போர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியலில் மைக்கேல் ஜாக்சன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
மறைவுக்குப் பின்னர் மட்டும் ஜாக்சன் 275 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளார். இந்த சாதனையை உயிருடன் உள்ள அல்லது இறந்த எந்த இசைக் கலைஞரும் நிகழ்த்தியதில்லை என்பது ஜாக்சனின் சிறப்பம்சமாகும்.
தனது வாழ்நாளின்போது போர்ப்ஸ் பட்டியல் எதிலும் இடம் பெற்றதில்லை ஜாக்சன். ஆனால் மரணத்திற்குப் பின்னர் முதல் முறையாக உலகின் 100 பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்றார். தற்போது மறைவுக்குப் பிறகும் பெரும் பணம் ஈட்டும் பிரபலங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
மறைவுக்குப் பின்னர் பெரும் பணம் ஈட்டிய பிரபலங்கள் வரிசையில் இதற்கு முன்பு இருந்து வந்த எல்விஸ் பிரஸ்லி, ஜான் லென்னான் ஆகியோரையும் அவர் பின்னுக்குத் தள்ளி விட்டார்.
தனது 50வது வயதில் கடந்த ஆண்டு ஜூன் 25ம் தேதி ஜாக்சன் மறைந்தார் என்பது நினைவிருக்கலாம்
25 October 2010
பிரிய இருந்த தம்பதிகள் ஒன்று சேர்ந்தனர்!!!
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் வக்கீல் மீது போலீசார் பொய் வழக்கு போட்டதாகவும், தாக்கியதாகவும் கூறி, வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள வஞ்சியூர் குடும்ப நல கோர்ட்டிலும், வக்கீல்கள் பலர் ஆஜராகாமல் இருந்து வருகின்றனர். கடந்த 20, 21 ஆகிய தேதிகளில் நடக்கவிருந்த விவாகரத்து கோரிய மனுக்கள் மீதான விசாரணையில், வக்கீல்கள் ஆஜராகவில்லை. இதனால், 20ம் தேதி நான்கு தம்பதியினரும், 21ம் தேதி ஒரு தம்பதியும் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து, மீண்டும் ஒன்றாக வாழ முடிவெடுத்தனர். குடும்ப நல கோர்ட் நீதிபதி இ.எம்.முகமது இப்ராகிம் நடத்திய சமாதான பேச்சு வார்த்தையின் முடிவில், அத்தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர முடிவெடுத்தனர். இத்தம்பதியினர் பல ஆண்டுகளாக விவாகரத்து கோரி குடும்ப நல கோர்ட் படியேறி இறங்கி வந்தனர்
மருந்து சோதனைகளில் ஏற்படும் உயிரிழப்புகளை அறிந்து கொள்ள புதிய சாப்ட்வேர் !!!
புதுடில்லி : உலக நாடுகள் அனைத்திலும், புதிதாக கண்டுபிடிக்கப்படும் மருந்துகளின் தன்மை மற்றும் செயல்பாடுகளை அறிந்து கொள்வதற்காக, பொதுமக்கள் அல்லது நோயாளிகள் மீது பரீட்சார்த்த சோதனைகள் மேற்கொள்ளப்படும். பொதுவாக, இந்த சோதனைகள் குறித்த விவரங்கள் ரகசியமாகவே வைக்கப்படும். நம் நாட்டிலும் இதுவரை, இந்த சோதனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் போன்ற விவரங்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை. சோதனை முறைகளில் பங்கேற்கும் மக்கள் அல்லது நோயாளிகளுக்கு கூட அதுபற்றிய விவரங்கள் முறையாக தெரிவிக்கப்படாது. சோதனை விவரங்களை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என, பல்வேறு தரப்புகளில் இருந்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், 2009ம் ஆண்டில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் சார்பில் புதிய இணையதளம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும், மருந்து சோதனைகள் பற்றிய அனைத்து விவரங்களையும், அதில் பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது. இதை கருத்தில் கொண்டு, மத்திய சுகாதார அமைச்சகம் புதிய சாப்ட்வேரை அடுத்த மாதம் அறிமுகப்படுத்துகிறது. இதில், சோதனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள், எந்தெந்த மருத்துவமனைகளில் சோதனை நடக்கிறது உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம். தனியார் மருத்துவமனைகள், சோதனைகள் நடத்த முறையாக அனுமதி பெற்று, அதைப் பிற மருத்துவமனைகளுக்கு அதிக விலைக்கு விற்கும் அவலம் இந்தியாவில் உள்ளது. இதை கட்டுப்படுத்தி, மருத்துவத் தொழில் மீது அழுத்தம் தர இந்த முறை உதவும். அதாவது, தனிப்பட்ட டாக்டர் ஒருவர் மேற்கொள்ளும் சோதனைகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுவதோடு, சோதனை நடத்த எந்த மருத்துவமனை அனுமதி பெற்றுள்ளது எனவும் தெரிந்து கொள்ள முடியும்.
சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில், சோதனை முயற்சிகளில் ஏற்படும் 80 சதவீத உயிரிழப்புகள் சோதனை மருந்துகளால் ஏற்படுவதில்லை. சோதனைகளில் பங்கு பெறுபவர் ஏற்கனவே நோய் தாக்கியவராக இருப்பது தான் காரணம் என தெரிய வந்துள்ளது.'புதிய சாப்ட்வேரில், சோதனைகளின் எண்ணிக்கை, நோக்கம் மற்றும் நோயாளிகளின் உடல் நல விவரம், உயிரிழந்த முறைகளையும் தெரிந்து கொள்ளலாம். மருத்துவ சோதனை முறைகள் குறித்து பொதுமக்கள் தெளிவு பெற முடியும்' என, மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்
கோப்பை வென்றது இந்தியா.
நேற்று கோவாவில் உள்ள மர்கோவாவில் மூன்றாவது போட்டி நடக்க இருந்தது. இங்கு கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால், இந்த போட்டியும் நடக்குமா என சந்தேகம் ஏற்பட்டது. நேற்று காலையில் நல்ல வெயில் அடித்தது. ஆனாலும் மைதானத்தின் பெரும்பாலான பகுதிகள் ஈரமாக காணப்பட்டது. ஆங்காங்கே காணப்பட்ட நீரை "சூப்பர் சோப்பர்' இயந்திரம் மூலம் வெளியேற்றினர். பின் காலை 11 மணிக்கு மைதானத்தை ஆய்வு செய்த அம்பயர்கள், மீண்டும் 12.15க்கு சோதனை செய்வதாக தெரிவித்தனர்.
பின் 12.15க்கு மைதானத்தை ஆய்வு செய்த "மேட்ச் ரெப்ரி' கிறிஸ் பிராட் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், போட்டியை கைவிடுவதாக அறிவித்தார். இதையடுத்து மூன்றாவது ஒருநாள் போட்டியும் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தானது.
கோவா, ஜவகர்லால் நேரு மைதானத்தில், மூன்று ஆண்டுகளுக்கு பின் ஒருநாள் போட்டி நடக்க இருந்தது. ஆனால், போட்டி ரத்தாக, அரங்கில் திரண்டிருந்த 27 ஆயிரம் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். டிக்கெட் கட்டணத்தை திரும்ப அளிக்கப்படும் என்ற கோவா கிரிக்கெட் சங்கத்தின் அறிவிப்பு இவர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.
புதிய வரலாறு:
இப்போட்டி ரத்தானதை தொடர்ந்து, இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை, 23 ஆண்டுகளுக்குப்பின் 1-0 என கைப்பற்றி அசத்தியது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை 2-0 என வென்றிருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை, இந்திய அணி வென்று அசத்துவது இது தான் முதன்முறை.
"ஸ்கிரீன்' சரிந்தது
நேற்று ஜவகர்லால் நேரு மைதானத்தில் வைக்கப்பட்டு இருந்த "சைடு ஸ்கிரீன்' சரிந்து விழுந்தது. இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஏற்கனவே மைதானத்தை மழையில் இருந்து பாதுகாக்க உதவும் தார்பாய்கள் போதிய அளவு இல்லை என புகார்கள் எழுந்த நிலையில், "ஸ்கிரீன்' சரிந்தது போட்டி ஏற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
பெங்களூரில் கழுதைப் பாலுக்கு கிராக்கி-1 லிட்டர் ரூ. 200!
கழுதைப் பால் குழந்தைகளுக்கு நல்லது என்ற எண்பது மக்களின் பொதுவான எண்ணம். குறிப்பாக குழந்தைகளுக்கு வரும் நோய்களை கழுதைப் பால் குணப்படுத்துகிறது என்றுமக்கள் நம்புகிறார்கள். இதில் பாதியை டாக்டர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். அதாவது கழுதைப் பாலில் புரதச் சத்து அதிகம் உள்ளது என்பதை டாக்டர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். அதேசமயம், அதன் மருத்துவப் பயன் குறித்து டாக்டர்கள் இதுவரை முழு அளவில் ஒப்புக்கொள்ளவில்லை.
இப்படி இருவேறு கருத்துக்கள் இருந்தாலும் கழுதைப் பால்மோகம் மக்களிடையே குறையவில்லை. கம்ப்யூட்டர் நகரான பெங்களூரில் இந்த கழுதைப் பால் பிசினஸ் அமோகமாக நடக்கிறதாம்.
இதை பலர் தொழிலாகவே செய்துவருகின்றனர். புட்டராஜ் என்பவர் கூறுகையில், இது எங்களுக்குப் பரம்பரைத் தொழிலாகும். எனது தாத்தா காலத்திலிருந்தே நாங்கள் கழுதைப் பால் விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம். நான் மல்லேஸ்வரம் வண்ணார் பகுதியில் நான் முக்கிய பால் சப்ளையராக உள்ளேன். அதுபோல பல்வேறு பால் டீலர்களுக்கு கழுதைகளையும் நான் சப்ளை செய்கிறேன்.
எனக்கு மடிவாளா, தாசரஹள்ளி, எலஹங்கா, சேஷாத்ரிபுரம், ஸ்ரீராமபுரா, ராஜாஜி நகர், கன்டோன்மென்ட் ஆகிய பகுதிகளில் நிறைய வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
அதிகாலை ஒரு மணிக்கு சிலர் என்னை போனில் அழைத்து உடனே பால் தேவை என்று கேட்பார்கள். ஒரு முறை ஒரு தம்பதியினர் தங்களது ஒரு வயதுக் குழந்தையுடன் காலை 6 மணிக்கு எனது வீட்டுக்கு வந்து பால் வேண்டும் என்று கேட்டனர். தொடர்ந்து 2 நாட்கள் அவ்வாறு வந்து வாங்கிச் சென்றனர்.
குழந்தைக்கு பசியே எடுக்கவில்லை என்பதால் தினசரி ஐந்து மில்லி பாலைக் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டதால் அவர்கள் வந்து சென்றனர். வயிற்று வலி, சளி, இருமல், ஆஸ்துமா, வலிப்பு போன்றவற்றிற்கு கழுதைப் பால் நல்லது என்பது பொதுமக்களின் எண்ணமாகும் என்கிறார் புட்டராஜு.
இவரிடம் 20 கழுதைகள் உள்ளனவாம். சமீபத்தில் கர்னூலிலிருந்து ஒரு வெள்ளைக் கழுதையையும், அதன் 2 மாதக் குட்டியையும் வாங்கி வந்து லிஸ்ட்டில் சேர்த்துள்ளார்.
கழுதைப் பால் அவ்வளவு உயர்ந்ததா என்று பெங்களூர் மாநகராட்சியின் கால்நடைத்துறை இணை இயக்குநர் பர்வேஸ் அகமது பிரானிடம் கேட்டால், கழுதைப் பாலின் மருத்துவ மகிமை குறித்து எனக்கு உறுதியாகத் தெரியாது. ஆனால் அதேசமயம், அதில் புரதச் சத்து மிக அதிகம் உள்ளது என்பது உண்மை. நிச்சயம் தாய்ப்பாலுக்கு சமமானது என்று கூட கூறலாம். தாய்ப்பாலுக்கு மாற்றாகக் கூட கொடுக்கலாம் என்றார்.
ஆனால் டாக்டர்கள் இந்தக் கருத்தில் முரண்படுகிறார்கள். இதுகுறித்து லேக்சைட் மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவு மருத்துவர் டாக்டர் எச்.பரமேஷ் கூறுகையில், கழுதைப் பாலின் மருத்துவ குணங்கள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. அதேசமயம், தாய்ரப்பாலைப் போலவே இதிலும் புரதச் சத்து அதிகம் உள்ளது என்பது உண்மையே என்றார்.
மகப்பேறு மருத்துவர் டாக்டர் மீனாட்சி பரத் என்பவர் கூறுகையில், கழுதைப் பாலில் சக்தி உள்ளது என்தை என்னால் ஏற்க முடியாது. ஒருவேளை அதில் சக்தி இருந்து, மருத்துவ பலன்கள் நிறைய இருந்தால் நகரில் உள்ள அத்தனை குழந்தைகள் நல மருத்துவர்களும் கூடவே ஒரு கழுதையையும் வளர்க்கலாம் அல்லவா? குழந்தைகளுக்கு கழுதைப் பாலை கொடுப்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை என்றார்.
எது எப்படியோ கழுதைப் பால் பிசினஸ் பெங்களூரை கலக்கிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை
முன்னாள் பிரதமர் பிளேரின் மைத்துனி இஸ்லாமுக்கு மாறினார்
பிளேரின் மனைவி செரி பிளேரின் ஒன்று விட்ட சகோதரிதான் இந்த பூத். பிறப்பால் கத்தோலிக்க கிறிஸ்தவர் ஆவார். சமீபத்தில் ஈரான் சென்றிருந்த அவர் அங்கு இஸ்லாம் மதத்தின்பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாமியராக மாறியுள்ளார்.
உலக அளவில் பிரபலமாகி வரும், ஈரான் தொடங்கியுள்ள 24 மணி நேர ஆங்கில சர்வதேச தொலைக்காட்சியான பிரஸ் டிவியில் இவர் பத்திரிக்கையாளராகப் பணியாற்றுகிறார். அமெரிக்க, இங்கிலாந்து ஆதரவு சிஎன்என், பிபிசி போன்றவற்றுக்குப் போட்டியாக அறிமுகமான பிரஸ் டிவி தற்போது உலக அளவில் பிரபலமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பூத் ஒரு மனித உரிமை ஆர்வலரும் கூட.
சமீபத்தில், இஸ்லாமியர்கள் பலரும் கலந்துகொகண்ட உலக அமைதி மற்றும் ஒற்றுமை என்ற பெயரிலான பேரணியில், பூத்தும் கலந்து கொண்டார். அப்போதுதான் அவர் மதம் மாறியிருக்கலாமோ என்ற பேச்சு எழுந்தது. தற்போது அதை உறுதிப்படுத்தியுள்ளார் பூத்.
43 வயதாகும் பூத், இதுகுறித்து இங்கிலாந்து மீடியாக்களிடம் கூறுகையில், ஈரானில் உள்ள ஒரு தர்காவில் ஆறு வாரங்களுக்கு முன்பு எனக்கு அருமையான இறை அனுபவம் கிடைத்தது. அதன் பின்னரே நான் இஸ்லாம் மார்க்கத்தின் பால் ஈர்க்கப்பட்டேன். இப்போது நான் தினசரி ஐந்து வேளை தொழுகிறேன். சில சமயம் மசூதிக்கும் போகிறேன். கடந்த 45 நாட்களாக நான் ஆல்கஹால் கலந்த பானம் எதையும் அருந்தவில்லை என்றார்.
தற்போது வெளியில் செல்லும்போது முஸ்லீம் பெண்களைப் போல தனது தலையைச் சுற்றிலும் துணி கட்டிக் கொள்கிறார் பூத். எதிர்காலத்தில் புர்க்கா அணியவும் முடிவு செய்துள்ளாராம். குரானை தினசரி படிக்கிறாராம்.
தனது இந்த மதமாற்றம் சர்ச்சைகளை ஏற்படுத்தலாம் என்பது தனக்குத் தெரியும் என்று கூறும் பூத், ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினையுண்டு என்பதை நான் அறிவேன் என்கிறார்.
பூத்தின் மதமாற்றம் குறித்து செரி பிளேரும், டோனி பிளேரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
டோனி பிளேரே 2007ம் ஆண்டு வரை சர்ச் ஆப் இங்கிலாந்தில் உறுப்பினராக இருந்தவர்தான். அதன் பின்னர்தான் அவர் ரோமன் கத்தோலிக்கராக மாறினார். செர்ரி பிளேர் ஆரம்பத்திலிருந்தே ரோமன் கத்தோலிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பூத், மார்னிங் ஸ்டார் என்ற கம்யூனிஸ்ட் நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், டோனி பிளேரை கடுமையாக விமர்சித்திருந்தார். அதில், பாலஸ்தீனத்தின் ரபா, நபுலஸ் ஆகிய நகரங்களில் இஸ்ரேலின் தாக்குதல்களில் உயிரிழந்து போன தங்களது உறவினர்களின் உடல்கள் மீது விழுந்து அழும் தாய்மார்களி்ன் கண்ணீரை டோனி பிளேர் மறந்து விட்டார். குறைந்தபட்சம், இந்த நகரங்களின் பெயர்களாவது அவருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை. இந்த நகரங்களைச் சேர்ந்த எத்தனையோ தாய்மார்கள் தங்களது பிள்ளைகளை இழந்து பரிதவித்து கண்ணீரில் மூழ்கியுள்ளனர். இஸ்ரேலின் இந்த ராட்சத கொடூரத் தாக்குதல்களை அங்கீகரிக்கிறீர்களா பிளேர் என்று காட்டமாக கேட்டிருந்தார்
24 October 2010
வி.ஏ.ஓ., தேர்வு நடக்குமா நடக்காதா? 10 லட்சம் பேர் பரிதவிப்பு
தட்கலில் ரேஷன் கார்டு : அரசு புதிய திட்டம்
2002 குஜராத் கலவரத்தை மோடிதான் தலைமை தாங்கி நடத்தினார்-ஜடாபியா வாக்குமூலம்
உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) நேற்று ஜடாபியாவை வரவழைத்து கிட்டத்தட்ட 7 மணிநேரம் விசாரித்தது. அப்போது மோடியின் பங்கு குறித்து வாக்குமூலம் அளித்தார் ஜடாபியா.
இதுகுறித்து ஜடாபியா கூறுகையில், கலவரத்தின்போது மூத்த போலீஸ் அதிகாரிகள், தொழிலதிபர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார் மோடி. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த என்னை மோடி கண்டு கொள்ளவில்லை. அதிகாரப்பூர்வ கூட்டங்களுக்கும் என்னை அவர் அழைக்கவில்லை.
கலவரத்தை தலைமை தாங்கிய நடத்தியவரே நரேந்திர மோடிதான் என்று கூறியுள்ளார் ஜடாபியா.
கலவர வழக்கில் ஜடாபியா மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் நேற்றைய விசாரணையின்போது தனக்கும், கலவரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு தான் பொறுப்பல்ல என்றும் கூறி 10 பக்க கடிதத்தையும் அளித்துள்ளார் ஜடாபியா
22 October 2010
தனியார் பள்ளி கல்விக் கட்டணம்: இணையத்தில் வெளியிட்டது அரசு!
தமிழக அரசின் www.tn.gov.in என்ற இணையதளத்தில் இந்த கட்டண விவரத்தைப் பார்க்கலாம். அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் கட்டணம் நிர்ணயிக்கப்படாத பள்ளிகள் விவரங்களையும் இந்த இணையதளத்தில் பார்க்க முடியும்.
நீதிபதி கோவிந்தராஜன் குழு தனியார் பள்ளிகளுக்கு கடந்த மே மாதம் கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்தது. ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும்
இந்தக் கட்டண விவரங்களை பள்ளி நிர்வாகங்களோ, அரசோ வெளியிடவில்லை.
இதையடுத்து, தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை வெளியிட வேண்டும் என்று கோரி மாநிலம் முழுவதும் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
உயர் நீதிமன்ற உத்தரவின் படி, நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்தக் கட்டணத்தை வெளியிட வேண்டும் என்று கோரி பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு சார்பில் அரசுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கல்விக் கட்டண விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டண விவரங்களின் அடிப்படையில், தனியார் பள்ளிகளில் ரூ 10 முதல் 11 ஆயிரம் வரை ஆண்டுக் கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கல்விக் கட்டணம் தொடர்பான விவரத்தை தெரிவிக்காத 532 பள்ளிகளும் நீதிபதி குழுவின் அனுமதியின்றி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளுக்கான கட்டண விவரங்கள் ஏதும் அறிவிக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளின் பட்டியலும் தனியாக வெளியிடப்பட்டுள்ளது.
கல்விக் கட்டண விவரங்களை தெரிவிக்காத பள்ளிகள் கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை எனத் தெரிகிறது. எனவே, இந்தப் பள்ளிகள் நீதிபதி குழுவின் அனுமதியின்றி கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 10,934 தனியார் பள்ளிகளில் 6,400 பள்ளிகள் இந்தக் கட்டண நிர்ணயத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளன. இந்த மேல்முறையீட்டு மனுக்களின் மீது 4 மாதங்களுக்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி குழுவிடம் மேல்முறையீடு செய்யாத 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்க உரிமை கிடையாது என உயர் நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகத் தெரியவந்தால், பெற்றோர்கள் இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளிக்கலாம்.
இதற்குத்தானே ஆசைப்பட்டார்கள் அரசியல்வாதிகள்!!
இதுதான் தமிழகத்தின் நிலைமை. அரிசி விலை என்று நாம் இங்கே குறிப்பிடுவது தமிழக அரசு ரேஷன் கடைகளில் தரும் அரிசிதான். இதை எத்தனைப் பேர் வாங்கிப் பயன்படுத்துகிறார்கள் அல்லது மேலே ரூ 2 ரூ 2 வைத்து கடைக்கு விற்றுவிடுகிறார்கள் என்பதெல்லாம் தனி பாலிடிக்ஸ். நல்ல அரிசி வேண்டும் என்றால் அதுவும் கிலோ ரூ 40 வரை போகிறது என்பதையும் மறந்துவிடக் கூடாது!
ஆக, அரிசியை ரூ 40 வரை விலை கொடுத்து வாங்கினாலும், அதற்கு தேவையான சாம்பார் உள்ளிட்ட சைடிஷ் செய்ய ஒரு வேளைக்கு குறைந்தது ரூ 100 தேவை என்பதுதான் நடைமுறை உண்மை.
காரணம்?
மளிகைப் பொருள்களின் விலையேற்றம். இன்றைய நிலவரப்படி, மளிகைப் பொருள்களின் விலையைப் பாருங்கள்...
கடந்த வாரம் ரூ 220க்கு விற்பனையான கிலோ மிளகு விலை, இந்த வாரம் ரூ 240 ஆக உயர்ந்துள்ளது. மலைப்பூண்டு விலை ரூ 250, சாதா பூண்டின் விலை ரூ 220. புளி விலை கிலோ ரூ 65லிருந்து 90க்கு போய்விட்டது.
சன்பிளவர் எண்ணெய் ரூ 65 வரை விற்கிறது. ஒரே வாரத்தில் ரூ 7 வரை உயர்ந்துள்ளது லிட்டருக்கு. கடலை எண்ணெய் ரூ 130 வரையிலும், நல்லெண்ணெய் விலை ரூ 110 வரையிலும் விற்பனையாகிறது. கடுகு, சீரகம், மிளகாய், தனியா என எந்தப் பொருளின் விலையும் குறைந்தபாடில்லை. குறைந்தது 30 சதவீதத்திலிருந்து அதிகபட்சம் 120 சதவீதம் வரை பல்வேறு மளிகைப் பொருள்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. ஒருவேளை சமையலுக்கு அரிசி தவிர்த்து, மளிகைச் செலவு மட்டும் ரூ 100 முதல் 130 வரையிலும் தேவை.
பருப்பு விலை மட்டும் மூட்டைக்கு ரூ 500 வரை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது மொத்தக் கொள்முதல் விலையில் ஏற்பட்ட குறைவுதான். ஆனால் இந்த விவரம் வாடிக்கையாளர்களுக்குத் தெரியாது என்ற நினைப்பில் பழைய விலைக்கே வைத்து கொள்ளை லாபம் பார்க்கின்றனர் கடைக்காரர்களும்.
இந்த சூழலில் விலைக்குறைப்புக்கு வழியே இல்லையா என்ற கேள்வி எழுகிறது.
ஒரே வழிதான். சப்ளை அதிகரிக்க வேண்டும். அதற்கு விளைச்சல் இருக்க வேண்டும். ஆனால் இருக்கிற விளை நிலங்களை தரிசாகப் போட்டுவிட்டு அல்லது தொழிற்சாலைகள், வீட்டுமனைகளுக்குக் கொடுத்துவிட்டு, ஊதுபத்தியை உருட்டியபடி இலவச டிவியில், சீரியல் பார்ப்பதில் மூழ்கிப் போய்விட்ட மக்களை என்ன செய்யப் போகிறோம்?", என்கிறார் பேராசிரியர் சபாநாயகம் (சென்னைப் பல்கலைக்கழக பொருளியல்துறை பேராசிரியர் இவர்).
"மக்கள் உழைக்கத் தயாராக இல்லை. எதிர்மறையான கருத்தை வலியுறுத்த வேண்டும் என்ற நோக்கில் இதனைச் சொல்லவில்லை. இதுதான் நிஜம். பிள்ளைகள் சம்பாதித்தாலும், கிராமத்தில் உழைப்புக்கு ஓய்வு தராத மக்கள் இருந்த காலம் மலையேறிவிட்டது.
தமிழகத்தைப் பொருத்தவரை, விவசாயம் சார்ந்த கிராமியப் பொருளாதாரம் நாசமடைந்து ரொம்ப நாளாகிவிட்டது. இப்போது அதுதான் மாநில அளவிலும் எதிரொலிக்கிறது. சென்னை என்பது மாநிலப் பொருளாதாரத்தின் அளவுகோல் அல்ல. இது வெறும் மாயை. மிக நீண்டகாலமாக பாய்ச்சப்பட்ட நச்சு இப்போது அதன் வேலையைக் காட்டுகிறது. மீண்டும் இந்த மக்கள் உழைப்பை விரும்பி ஏற்பார்களா? என்பது கேள்விக்குறிதான்" என்கிறார் கவலையுடன்.
அரசியல்வாதிகள் எதிர்ப்பார்த்தது இதைத்தானே... ஏன் என்ற கேள்வியையே கேட்காமல் எப்போதும் தொலைக்காட்சி / எப்போதாவது கிடைக்கும் இலவசங்களின் போதையில் மக்கள் மூழ்கிக் கிடந்தால் போதும் என்ற நினைப்பில்தானே திட்டங்களே தீட்டப்படுகின்றன!
அதற்கான பலன் கிடைத்துவிட்டது. அபார சாதனைதான்!
21 October 2010
லேப்டாப் வெப்பத்தில் மின்சாரம்: மாணவர் சாதனை
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இ.சி.இ., பிரிவில் மூன்றாம் ஆண்டில் படிக்கும் மாணவர் சன்னிசர்மா. அமெரிக்காவின் இல்லினோயிஸ் பல்கலைக்கழகத்தில் படித்த இம்மாணவர், பின் அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் இ.சி.இ., பிரிவில் சேர்ந்தார். சன்னிசர்மா, லேப்-டாப்பை பயன்படுத்தும் போது ஏற்படும் வெப்பத்திலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளார்.
தனது கண்டுபிடிப்பு குறித்து மாணவர் சன்னிசர்மா கூறியதாவது:லேப்-டாப்பை பயன்படுத்தும் போது, குறிப்பிடத்தக்க அளவு வெப்பம் வெளியாகிறது. இந்த வெப்பத்தை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டேன். கடந்த இரண்டு ஆண்டு முயற்சியின் மூலம் அதில் வெற்றி கண்டுள்ளேன்.இதன்படி, ஒரு வகை படிகத்தை பயன்படுத்தி, "லேப்-டாப்'பை பயன்படுத்தும் போது ஏற்படும் வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. "பைரோ எலக்டிரிக் எபெக்ட்' என்ற முறையின்படி, வெப்ப சக்தி, மின் சக்தியாக மாற்றப்படுகிறது.லேப்-டாப் வெப்பம் மூலம் 3.8 வோல்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம், எல்.இ.டி., பல்பை எரிய வைக்க முடிகிறது. இதற்கு 300 ரூபாய் வரையே செலவானது. இந்த மின்சாரத்தை பயன்படுத்தி லேப்-டாப்பை மீண்டும், மீண்டும் "சார்ஜ்' செய்ய முடியும்.மேலும் மொபைல்போன் உள்ளிட்ட கருவிகளையும் "சார்ஜ்' செய்ய முடியும். இதுமட்டுமின்றி, வாகனங்கள், விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு வெப்பத்தை உருவாக்கும் கருவிகள் மூலமாகவும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.என் கண்டுபிடிப்பிற்கு, "பேடன்ட்' வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். மேலும் குளிரிலிருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகிறேன்.இவ்வாறு சன்னிசர்மா கூறினார்.
அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் முன்பாக, மாணவர் சன்னிசர்மா தனது கண்டுபிடிப்பை செயல்படுத்திக் காட்டினார். அப்போது, லேப்-டாப்பில் இருந்து வெளியாகும் வெப்பத்திலிருந்து உருவான மின்சாரம் மூலமாக, எல்.இ.டி., பல்பு எரிய வைத்து காண்பிக்கப்பட்டது. அம்மாணவரை துணைவேந்தர் மன்னர் ஜவகர் உள்ளிட்ட பேராசிரியர்கள் பாராட்டினர்.அதேபோல, ஆர்கிடெக்சர் தொடர்பான போட்டியில், "ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர்' தென்மண்டல அளவில் முதல் பரிசு பெற்றுள்ளது. மேலும் பி.ஆர்க்., இறுதியாண்டு மாணவர்கள், பாகிஸ்தானில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் துணைவேந்தர் மன்னர் ஜவகர் பாராட்டினார்.
லேசர் உதவியுடன் இயங்கும் குண்டு-உருவாக்கியது இந்தியா
இந்த லேசர் குண்டு மூலம் குறிப்பிட்ட இலக்கை மிகத் துல்லியமாக தாக்கி அழிக்க முடியும். டேராடூனைச் சேர்ந்த உபகரண ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகத்தின் உதவியுடன் இந்த லேசர் குண்டை இந்தியா உருவாக்கியுள்ளது.
பாதுகாப்புத்துறையில் தன்னிறைவை அடையும் நோக்கில் பல்வேறு ஆய்வுகளை இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஆய்வுக் கழகமான டிஆர்டிஓ மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்த லேசர் கண்டுபிடிப்பு குறித்த ஆய்வு டேராடூனில் நடந்து வருகிறது.
லேசர் குண்டின் தொழில்நுட்பம் என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட இலக்கை சரியாக கணித்து அதை லேசர் கதிர்வீச்சு அடையாளம் காட்டும். பிறகு அந்த இலக்கை நோக்கி குண்டு எறியப்படும். அப்போது அது மிகத் துல்லியமாக இலக்கைத் தாக்கி அழிக்கும்.
லேசர் மூலம் இலக்கை சரியாக அடையாளம் காண்பதால் தாக்குதலும் துல்லியமாக இருக்கும்.
இந்த லேசர் குண்டு தொழில்நுட்பம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பெங்களூரைச் சேர்ந்த ஏரோனாட்டிக்ஸ் வளர்ச்சிக் கழகம் வழங்கியிருந்தது. அதன் அடிப்படையில் நடந்த ஆய்வில் டேராடூன் கழகம் தற்போது லேசர் குண்டைக் கண்டுபிடித்துள்ளது.
லேசர் குண்டுகளைப் போல லேசர் உதவியுடன் இயக்கப்படும் ஏவுகணைகளும் அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசுகளிடம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
20 வயது மாணவி மெக்சிகோ நகரின் தலைமை காவல் அதிகாரியானார்
இந்த பதவிக்கு விண்ணப்பித்த ஒரே நபர் இவர் தான். இந்த தகவலை மெக்சிகோ ஊடகம் தெரிவித்தது.
மாரிசால் வாலஸ் கார்சியா கடந்த திங்கட்கிழமை அன்று அமெரிக்க எல்லையில் இருக்கும் இந்நகரின் பாதுகாப்பு அதிகாரியாக
பொறுப்பேற்றார்.
இந்நகரின் மக்கள் தொகை வெறும் 10,000தான். ஆனால் மெக்சிகோவில் இருக்கும் நகரங்களிலேயே இந்நகரம் தான் வன்முறை அதிகம் நடக்கும் இடம் ஆகும். இது சியுடாட் ஜுவாரஸில் இருந்து கிழக்கில் 80 கிமீ தொலைவில் உள்ளது.
இதன் முன்னாள் மேயர் ஜீசஸ் மானுவல் லாரா ரோட்ரிகஸ் கடந்த ஜூன் 19-ம் தேதி சியுடாட் ஜுவாரஸில் உள்ள அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு இறந்தார்.
காவல்துறை தலைமை அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளது குறித்து வாலஸ் கார்சியா கூறுகையில்,
போதைப் பொருட்கள் கும்பலை எதிர்த்து நான் போராடப்போவதில்லை. அதை மற்ற அதிகாரிகள் கவனித்துக் கொள்வார்கள். மாறாக மக்களையும், பள்ளிகளையும் காப்பது தான் என் கடமை. மேலும், அபகரிக்கப்பட்டுள்ள இடங்களை மீட்டு உரியவர்களிடம் கொடுப்பதும் என் கடமை என்று அவர் கூறினார்.
19 October 2010
டூவீலர் திருட்டை தடுக்க புதிய முறை : கல்லூரி மாணவர் சாதனை
சாதனை கண்டுபிடிப்பு குறித்து விவேக்ராஜ் கூறியதாவது:டூவீலரில் உள்ள மீட்டர் பாக்ஸ் பகுதியில் சாவிக்கு பதில் கைரேகையை பதிவு செய்யும் கருவியை இணைத்து, குடும்பத்தில் உள்ளவர்கள் கைரேகையை அதில் பதிவு செய்ய வேண்டும். டூவீலரில் உரிமையாளர் அனுமதியுடன் ரகசிய எண்ணை பயன்படுத்தி அவரது நண்பர்களுக்கு மட்டும் அது தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.அந்த எண்ணையும், கைவிரல் ரேகையையும் அவ்வப்போது மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள டூவீலரில் கைவிரல் ரேகை, ரகசிய எண் அறிந்தவர் தவிர மற்ற எவரும் டூவீலரை நகர்த்தக்கூட முடியாது.
மேலும், போர்க் லாக், பேக்வீல் லாக், பெட்ரோல் லாக் என மூன்று லாக்கரை அமைத்து, அவற்றையும் இதனுடன் இணைத்தால் அம்மூன்றும் டூவீலரை நிறுத்தியதும் லாக் ஆகிவிடும். இதனால், இந்த டூவீலரை உருட்டிச் செல்ல முடியாது. திருப்ப முடியாது. ஓட்டிச் சென்றால் சிறிது தூரத்தில் பெட்ரோல் தீர்ந்து டூவீலர் தானாக நிற்கும். டூவீலரை கைரேகை வைத்து, ரகசிய எண் கொடுத்து ஸ்டார்ட் செய்தால் மட்டுமே பிற லாக்கர் திறந்து டூவீலரை இயக்க முடியும்.இந்த முயற்சிக்கு காப்புரிமை பெற முயன்றுள்ளேன். இதை கண்டறிய எனக்கு 8,500 ரூபாய் செலவானது. வியாபார ரீதியில், அதிக எண்ணிக்கையில் இதை செயல்படுத்தினால் மிகக்குறைந்த விலையில் பயன்படுத்தலாம். டூவீலர் திருட்டையும் தடுக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கண்டுபிடிப்புக்கு அவரது கல்லூரியில் முதல் பரிசும், சென்னை ஐ.ஐ.டி.,யில் 76 கல்லூரிகள் பங்கேற்ற போட்டியில் மூன்றாம் பரிசும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
16 October 2010
ஓட்டளித்த நமக்கே வெட்கம்!!!
ஜே.கிறிஸ்துராஜ், வில்லிவாக்கம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: லஞ்ச விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டின் கருத்து, பொறுப்பான பதவியில் உள்ளவர்கள் மனம் நொந்து வெளியிட்ட கருத்து. ஆனால், மத்திய, மாநில அரசுகளில் ஆள்பவர்களுக்கெல்லாம் இதில் எந்த வெட்கமுமில்லை. ஜனநாயகம் என்ற பெயரில் நடக்கும் கேலிக்கூத்தை, பொறுப்பானவர்கள், பத்திரிகைகள் இடித்துரைத்தும், கிஞ்சித்தும் அதுபற்றி பொருட்படுத்தாமல், மீண்டும் எவ்வழியில் ஆட்சியை கைப்பற்றலாம் என்பதே கொள்கையாகக் கொண்டு அரசியல்வாதிகள் வாழ்கின்றனர். அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்ற நிலையில், லஞ்ச, ஊழல்களைக் காப்பாற்றும் ஆட்சியாளர்கள் இருப்பதால், அரசு ஊழியர்கள், மிகவும் தைரியமாக லஞ்ச வேட்டை நடத்துகின்றனர். அதிகாரிகள் 137 பேர் மீதுள்ள லஞ்ச வழக்கில், இதுவரை அரசிடமிருந்து, நடவடிக்கை எடுக்க உத்தரவு வராததால், பலரும் விடுவிக்கப்பட்டு, பதவியில் அமர்ந்து விட்டனர். இங்கே ஒரு சாரார், காந்தி, காமராஜ், இந்திரா வழி என்று கூறி, ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் போட்டி ஊழலை மூடி மறைக்கின்றனர். மற்றொரு சாரார், ஈ.வெ.ரா., வழி, அண்ணாதுரை வழி, எம்.ஜி.ஆர்., வழி என்று கூறி, தினமும் மணல் கொள்ளை, ரேஷன் அரிசி கடத்தல், எதிர்ப்பவர்களை காவல் துறை துணை கொண்டு அடக்கும் காரியங்களை செய்து வருகின்றனர். ஊழல் பற்றி ஆதாரங்களுடன் பத்திரிகைகள் எழுதினால் கூட, அதற்கு தர்ம அடி கிடைக்கப் பெறுகிறது. மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி, உழைப்பை விட, ஊதியம் மற்றும் சலுகைகள் அதிகமாக தரப்படுகிறது. அமெரிக்காவில் சமீபத்தில், இரண்டு கவர்னர்கள், ஆறு மேலவை மற்றும் மக்களவை உறுப்பினர்களுக்கு, ஊழல் குற்றங்களுக்காக, ஆறு முதல் 12 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அது ஜனநாயக நாடு. இங்கேயோ, வெட்கப்பட வேண்டியவர்கள் வெட்கப்படாததால், ஓட்டளித்த நாமே வெட்கப்படுகிறோம்.
குறைக்குமா அரசு! சின்னசாமி, துடியலூர், கோவையிலிருந்து எழுதுகிறார்: "தனியார் பஸ் கட்டணத்தில், 50 பைசா உயர்த்தினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. ஆனால், தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம், ஏர் பஸ்களுக்கு குறைந்தபட்ச டிக்கெட் ஐந்து ரூபாய் எனவும், சொகுசு பஸ்களுக்கு குறைந்தபட்சம் மூன்று ரூபாய் எனவும், சாதா பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் இரண்டு ரூபாய் எனவும், எக்ஸ்பிரஸ் என பலகை மாட்டி, அதிகமாகவும் கட்டணம் வசூல் செய்கிறது. "தமிழகத்தில் தான் பஸ் கட்டணம் குறைவு' என, போக்குவரத்துத் துறை அமைச்சரும், முதல்வரும் கூறுகின்றனர். ஆனால், பொதுமக்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல வேண்டும் என நினைத்து, ஏர் பஸ்சில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஒரு கிலோ அரிசி, ஒரு ரூபாய் என பறைசாற்றிக் கொள்ளும் தமிழக அரசு, ஏர் பஸ், சொகுசு பஸ் கட்டணத்தை குறைக்க முன் வரவேண்டும்.
அதிருப்தி மக்களும் ஓட்டளிக்க வழி: ஜி.எஸ்.ராஜன், வேளச்சேரியிலிருந்து எழுதுகிறார்: "தேர்தலில் ஓட்டளிப்பதில் ரகசியம் காக்கப்பட வேண்டும்' என்பதை, தேர்தல் கமிஷன் திரும்பத் திருப்பக் கூறி வருகிறது. ஆனால், எந்த வேட்பாளருக்கும், கட்சிக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்ற வகையில், ஓட்டுகளை மறுக்கும் உரிமையான 49(ஓ) பிரிவை மட்டும், பலர் முன்னிலையில் படிவம் பெற்று, பகிரங்கமான முறையில் தெரிவிக்கச் சொல்வது, துளிகூட நியாயமல்ல. ஓட்டளிக்க மறுக்கும் உரிமையை வாக்காளர்கள் ரகசியமாக பதிவு செய்ய, 49(ஓ) பிரிவிற்கான பொத்தானை, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்திலேயே வைக்க, தேர்தல் கமிஷன் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனால், அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் மீது அதிருப்தி கொண்டுள்ள மக்களும், கட்டாயம் ஓட்டு போடுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும். ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்ற ரீதியில், ஓட்டுப் போடுவதை வெறுக்கும் நபர்கள், ஓட்டுச் சாவடிக்கு வந்து, தங்களின் எண்ணங்களை துணிவுடன் வெளிப்படுத்துவர். மக்கள் விரோத செயல்களை செய்யும் கட்சிகளுக்கு, இது நிச்சயம் கிலியை ஏற்படுத்தும். ஒரு தரப்பு மக்களை மட்டுமே தொடர்ந்து ஏமாற்றி ஓட்டு வாங்கும் போக்கு நிச்சயம் தடுக்கப்படும். ஆட்சிக்கு வருபவர்களும், அனைத்து தரப்பு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவர். வரும் தேர்தலில் இருந்தே இந்த நடைமுறையை அமலுக்கு கொண்டு வர வேண்டும்.
வருமுன் காப்போம்! ஜே.இ.ராஜகுமார், திருப்பூரிலிருந்து எழுதுகிறார்: சமீப காலமாக, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ், "தெலுங்கானா மாநிலம் அமைவதற்கு எதிராக இருந்தால், மீண்டும் புரட்சி வெடிப்பதோடு, மக்கள் ஒவ்வொருவரும், மனித வெடி குண்டுகளாக மாறுவர்' என பேசியுள்ளார். இந்த பேச்சு, ஒற்றுமையை சீர்குலைக்கும் பயங்கரவாதிகள் செயலை ஒத்ததாக இருக்கிறது. மேலும், "தனி தெலுங்கானா மாநிலம் அமைந்தால், முஸ்லிம் மக்களுக்கு 12 சதவீதம் இட ஒதுக்கீடு மற்றும் துணை முதல்வர் பதவியுடன், ஐந்து அமைச்சர் பதவிகள் உண்டு' என அறிவித்துள்ளார். தன் சுயநலத்திற்கு, பிற மதத்தினரை தூண்டி விட்டு, தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் செயலும், ஒரு விதத்தில் பயங்கரவாதமே! இப்படி ஒவ்வொரு அரசியல் தலைவர்களும், அந்தந்த மாநிலங்களில் பிரிவினைகளை தோற்றுவித்து, மாநிலங்களை கூறு போட்டுக் கொண்டே சென்றால், எப்படி மக்களிடையே தேசப்பற்றையும், ஒருமைப்பாட்டையும் நாம் காண முடியும். அன்று மாநிலங்களை மொழி வாரியாக பிரித்ததின் விளைவு, இன்று தேசப்பற்று குறைந்து, மாநில பற்றுதான் உயர்ந்து காணப்படுகிறது. தன் இனம், தன் மக்கள், தன் மொழி என்ற குறுகிய மனப்பான்மையுடன், தொலை நோக்கு பார்வையின்றி, அராஜகம் புரியும் அரசியல் தலைவர்கள், மிகுந்து விட்டனர். இந்தியாவின் எதிர்காலம் என்னவாகப் போகிறதோ?
ஊழல், லஞ்சத்தில் நாம் முதலிடம்! ப.இளமாறன், பட்டுக்கோட்டை, தஞ்சாவூரிலிருந்து எழுதுகிறார்: பொருளாதார வளர்ச்சியை நோக்கி வேகமாக செல்லும் இரண்டாவது நாடு இந்தியா என்று பெருமையாக கூறி கொண்டாலும், அதற்கு மேலாக, ஊழல், லஞ்சம் பெறுவதில் முதலிடத்திற்கு வந்துவிட்டது. எந்த ஒரு சான்றிதழ் பெற வேண்டுமானாலும், லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டனர். வசதி படைத்தவர்களுக்கு, லஞ்சம் கொடுப்பது சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால், ஒருவேளை உணவிற்கே வழியின்றி தவிக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களிடம் லஞ்சம் கேட்பது எந்த விதத்தில் நியாயம். உடனே தீர்ப்பு வழங்கினால்தான், லஞ்சம், ஊழல் ஒழியும். தத்துவ ஞானி சாக்ரடீஸ் சொன்னது போல, சட்டத்தின் முடிவுகளை நிறைவேற்ற இயலாத ஆட்சி, தூக்கி ஏறியபட வேண்டும்.
கவர்னரா, காங்கிரஸ் தலைவரா? வா.சுந்தரேசன், செங்கல்பட்டிலிருந்து எழுதுகிறார்: கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சியைக் கவிழ்க்க, எதிர்க்கட்சிகளான காங்கிரசும், மதச் சார்பற்ற ஜனதா தளமும் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த இரண்டரை ஆண்டுகளாக, கர்நாடக அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வந்துள்ள எதிர்க்கட்சிகளை திறம்பட எதிர்கொண்டு, மாநிலத்தின் வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொண்டு வந்த அம்மாநில முதல்வருக்கு, புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர். பா.ஜ.,வில் பிளவை ஏற்படுத்தி, ஆட்சியைக் கவிழ்ப்பதே அவர்களது திட்டம். நம் நாட்டில், விந்திய மலைக்கு தெற்கே உள்ள நான்கு பெரிய மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரம், தமிழகம், கேரளம் போன்றவற்றில், முதன் முறையாக கர்நாடகாவில் ஆட்சி பீடம் ஏறிய பா.ஜ.,வின் வெற்றி, கர்நாடக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, மற்ற மூன்று மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும், பெரிய உறுத்தலாகவே இருந்து வருகிறது. ஒரு பெரிய தேசிய கட்சி, தங்களின் பிராந்தியத்தில் கால் பதிப்பதை, தென்மாநிலங்களில் உள்ள கட்சிகள் விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. அதன் வெளிப்பாடாகவே, கர்நாடக குளறுபடிகள் தென்படுகின்றன. ம.ஜ.த., தலைவர் குமாரசாமி, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களை சந்தித்ததில் இருந்து, இந்த கருத்து தெளிவாகிறது. ஏற்கனவே கர்நாடகாவில், காங்கிரஸ், ம.ஜ.த., போன்ற கட்சிகளும், ஆந்திராவில் காங்கிரஸ், தெலுங்கு தேசம் போன்ற பெரிய கட்சிகளும், தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., போன்றவையும், கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் போன்றவை என, மொத்தம் ஆறு கட்சிகள், நான்கு பெரிய மாநிலங்களை ஆளும் வாய்ப்பைப் பெற்றிருந்தன. ஆனால், அதற்கு போட்டியாக, இன்னொரு பெரிய கட்சி தங்களின் பிராந்தியத்தில் கால் பதிப்பதை இவர்களால், குறிப்பாக காங்கிரசால் தாங்கிக் கொள்ள இயலவில்லை என்பதற்கான சான்றுதான், கர்நாடகாவில் அக்கட்சி நடத்திவரும் சித்து விளையாட்டுகள். ஆனால், இதற்கு கவர்னர் பதவியை பயன்படுத்துவதுதான், மிகவும் ஆதங்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது. அம்மாநில கவர்னரின் செயல்பாடுகளை மீடியாக்களில் காணும் போது, அவர், கர்நாடகாவில் பா.ஜ., வளர்ச்சியை தடுக்க, காங்கிரஸ் கட்சித் தலைவரை விட, மிகவும் தீவிரமாக செயல்படுகிறார் என்றே தோன்றுகிறது. காங்கிரஸ் கட்சி, கவர்னர் பதவியை எவ்வாறு பயன்படுத்தி வருகிறது என்பது, எல்லா மாநிலங்களில் உள்ள கட்சி தலைவர்களின் மனசாட்சிக்குத் தெரியும். அரசியல் சாசனத்தின் 356வது பிரிவு, காங்கிரஸ் கட்சிக்காகவே எழுதி வைக்கப்பட்டது போல இருக்கிறது. கர்நாடக மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்துவிட்ட காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் போன்ற கட்சிகளின் பொறாமையின் வெளிப்பாடுகளை, அம்மாநில மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
ஈரப்பத நெல் விவசாயிகள் தவிப்பு: க.சோமு, கருங்குழியிலிருந்து எழுதுகிறார்: ஒட்டகத்தின் முதுகில் கணிசமான பாரத்தை ஏற்றி விட்டு, அதில் இருந்து ஒரு துரும்பை எடுத்து வந்து, ஒட்டகத்தின் கண் முன்னால் போட்டால், கனஜோராக தன் பயணத்தை தொடரும் என்று கூறுவர். கணிசமான பாரத்தை, கஷ்டங்களை சுமக்கும் விவசாயிகளுக்கு, அரசு கொள்முதல் விஷயத்தில், நீக்குப் போக்கோடு நடந்து, துரும்பை எடுத்துப் போட வேண்டும். மொத்தம் 20 சதவீத ஈரப்பதம் இருக்கும் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என்ற கொள்கை, நெல் கொள்முதல் விஷயத்தில் கண்டிப்பாக தளர்த்தப்பட வேண்டும். நெல்லைக் காய வைக்கும் களம் இல்லாமல், ஆட்கள் இல்லாமல், விவசாயிகள் மகவும் அவதிப்படுகின்றனர். நெல் கொள்முதல் நிலையங்களில், உலர் இயந்திரங்களை அரசு சில லட்சம் செலவில் நிறுவினால், விவசாயிகளிடம் இருந்து எவ்வளவு ஈரப்பதத்திலும் நெல்லைக் கொள்முதல் செய்யலாம். கோதுமை, நெல் போன்றவற்றை நூறு சதவீதம் உலர்த்தி விட்டால், அவை ஆண்டுக்கணக்கில் கெடாமல் இருக்கும். தேசிய அளவில் தானியங்கள், பல ஆயிரம் கோடி மதிப்பில் கெட்டுப் போய் உள்ளன. அதை சுப்ரீம் கோர்ட், ஏழைகளுக்கு இலவசமாக கொடுக்கச் சொல்லி உத்தரவு போட்டுள்ளது. "38 சதவீதம் பேர், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனர். அனைவருக்கும் கெட்டுப் போன தானியத்தை கொடுக்க முடியாது' என, பிரதமர் மன்மோகன்சிங் கூறி உள்ளார். மேற்கூரை உள்ள குடோன்கள் அமைத்து, உலர் இயந்திரங்களை உபயோகித்து உலர்த்தி தானியங்களை பாதுகாப்பு செய்தால், சுப்ரீம் கோர்ட் தலையிட வேண்டிய அவசியம் எதிர்காலத்தில் இருக்காது. குடோன் இல்லாத, உலர் இயந்திரம் இல்லாத கொள்முதல் நிலையங்களை திறப் பதும் பலனைத் தராது.
ஏன் இந்த குளறுபடி...: சோ.காளிதாசன், பண்ருட்டியிலிருந்து எழுதுகிறார்: 1970களில், அரசு நிர்வாகத்தில், இந்தியாவிலேயே தமிழகம் தான் முதன்மை மாநிலமாக இருந்தது. அதன் பிறகு, நிர்வாகத் திறன் சிறுக சிறுக குறைந்து, குளறுபடிகள் ஏற்படலாயின. "டி.ஜி.பி., நியமனத்தில், சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த வழிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றவில்லை' என, ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பு வந்த பின்னரும், "டி.ஜி.பி., நியமனத்தில், சுப்ரீம் கோர்ட்டின் வழிமுறைகளை கொஞ்சமும் வழுவாமல் தமிழக அரசு பின்பற்றியுள்ளது' என, தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. சாதாரண காவலர் தேர்வுக்கு கூட, பல வழிமுறைகள், விதிமுறைகளை பின்பற்றும் அரசு, மாநில டி.ஜி.பி.,யை தேர்வு செய்ய உரிய விதிமுறைகளை பின்பற்றாதது ஆச்சரியமாக உள்ளது. தலைமைச் செயலகத்திலேயே நிர்வாக லட்சணம் இப்படி என்றால், மாவட்ட நிர்வாகத்தில் எவ்வளவு குளறுபடிகளோ! "முறையான தேர்வு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டன என்பதை, டி.ஜி.பி., நியமனக் கோப்பு வெளிப்படுத்தவில்லை' என, ஐகோர்ட் தெரிவித்துள்ளதே. இந்த நிலையிலா, தலைமைச் செயலகத்தில் கோப்புகள் உருவாக்கப்படுகின்றன? இதுவா சட்டத்தின் நிர்வாகம்? டி.ஜி.பி., அந்தஸ்த்தில் உள்ள அனைவரையும் பட்டியலிட்டு, அவரவர்களின் நிறை, குறைகளை நன்கு பரிசீலித்து, விருப்பம் கேட்டு பெற்று, பதவி விரும்பாதவர்களை தவிர்த்து, எஞ்சியுள்ளோரின் தகுதி, திறமை, முதுமை அடிப்படையில் தேர்வு செய்திருக்க கூடிய மிகச்சிறிய ஏற்பாடு தான், டி.ஜி.பி., நியமனம். மூவரோ அல்லது ஐவரோ தான் பட்டியலில் இருக்கக்கூடும். ஓரிரு மணி நேர அவகாசத்தில் இவர்களை பரிசீலித்திருக்கலாம். காவலர் பதவிக்கு விண்ணப்பித்த இரண்டு லட்சம் பேரில், முறையான வழிமுறைகளை கடைபிடித்து, 2,000 காவலர்களை தேர்ந்தெடுக்கும்போது, டி.ஜி.பி., தகுதிபெற்ற நான்கைந்து பேரில் ஒருவரை டி.ஜி.பி.,யாக, முறையாக தேர்ந்தெடுக்க இயலவில்லையா? டி.ஜி.பி., நியமனத்தில், அரசின் செயலை, உரிய காரணங்களுடன் ஐகோர்ட் ரத்து செய்த பின்னரும், அரசு ஏன், "சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு' என, அறிக்கை விட வேண்டும்