நிகோசியா: லிபியாவில் நடந்து வரும் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் அந்த நாட்டு உள்துறை அமைச்சர் அப்தல் பதா யூனஸ். மேலும், மக்கள் புரட்சியில் ராணுவமும் இணைய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
லிபியாவில் அதிபர் கடாபியின் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இதை ஒடுக்க தனது ஆதரவாளர்களை ஏவி விட்டுள்ளார் கடாபி. இதனால் நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். இருப்பினும் போராட்டம் மேலும் வீரியத்துடன் வீறு கொண்டு வெடித்துள்ளது.
துப்பாக்கிக் குண்டுகளுக்கு அஞ்சாமல் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில், இந்தப் போராட்டத்திற்கு லிபிய உள்துறை அமைச்சர் அப்தல் ஆதரவு தெரிவித்து தனது அனைத்து அரசுப் பொறுப்புகளிலிருந்தும் விலகியுள்ளார்.
இதுகுறித்து அல்ஜசீரா டிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நான் விலகி விட்டேன். ஒரு வார காலமாக நடந்து வரும் மக்கள் போராட்டத்திற்கு ராணுவம் ஆதரவு தர வேண்டும். மக்களுக்குப் பலமாக ராணுவம் நிற்க வேண்டும்.
லிபிய மக்களின் அனைத்து உரிமைகளையும் நான் மதிக்கிறேன். அவர்களின் போராட்டம் சரியானதே. எனவே இதை உணர்ந்து ராணுவம், மக்களுக்கு ஆதரவாக திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
ஏற்கனவே சில அமைச்சர்கள் பல உயர் மட்ட அதிகாரிகள், தூதர்கள், ராணுவ அதிகாரிகள் கடாபிக்கு எதிராக திரும்பியுள்ளனர். மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment